சளியால் உங்க மூக்கு ரொம்ப ஒழுகுதா? இதோ 10 சூப்பர் டிப்ஸ்!!

Posted By: Karthikeyan Manickam
Subscribe to Boldsky

கொஞ்சம் சளி பிடித்தாலே நமக்கெல்லாம் மிகவும் அவஸ்தையாக இருக்கும். அதே சளி இன்னும் முத்திப் போய், மூக்கிலிருந்து தண்ணியாக ஒழுக ஆரம்பித்து விட்டால் போதும், நம் பாடு மிகவும் திண்டாட்டம்தான்!

ஆரோக்கிய பிரச்சனைகளும்.. அதற்கான பாட்டி வைத்தியங்களும்...

பொழுதுக்கும் மூக்கைச் சிந்தி சிந்தித் துடைத்துக் கொண்டே இருக்க வேண்டும். மூக்கு நன்றாகச் சிவந்து வீங்கி விடும். கைக்குட்டையும் நனைந்து தொப்பலாகி விடும். பல நாட்களுக்கு இந்தத் தொந்தரவு இருப்பது தான் பெரிய பிரச்சனை!

தண்ணீராக ஓடிக் கொண்டிருக்கும் இந்தச் சளித் தொல்லையைப் போக்க பல எளிய வழிகள் உள்ளன. அவற்றில் ஒரு 10 வழிகளை இப்போது பார்க்கலாம்.

மூக்கடைப்பை போக்கும் இயற்கை நிவாரணிகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உப்பு நீர்

உப்பு நீர்

இது வேறு ஒன்றுமில்லை. ஆஸ்பத்திரிகளில் சாதாரணமாக ஏற்றப்படும் 'சலைன் வாட்டர்'தான். மூக்கில் கொட்டும் சளிக்கு இது ஒரு அருமையான மருந்து. நாம் வீட்டிலேயே இதை எளிதாகத் தயாரிக்க முடியும். அரை ஸ்பூன் உப்புடன் இரண்டு கப் நீரைக் கலந்தால் 'சலைன் வாட்டர்' ரெடி! அடிக்கடி இதிலிருந்து ஓரிரு துளிகளை மூக்கில் விட்டுக் கொண்டால், விரைவில் மூக்கு ஒழுகுவது நிற்கும்.

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெயில் ஆன்டி-பயாட்டிக், ஆன்டி-ஹிஸ்டமைன் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகள் அதிகம் உள்ளன. கடுகு எண்ணெயைக் கொதிக்க வைத்து, சூடு பொறுக்குமளவுக்கு ஆறியதும் சில துளிகளை மூக்குகளில் விட வேண்டும். இது சளியை விரட்டுவதுடன், மூக்கு ஒழுகுவதையும் கட்டுப்படுத்தும்.

இஞ்சி

இஞ்சி

இஞ்சியின் மருத்துவ குணங்களைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மூக்கில் சளி ஒழுகுவதை முழுவதுமாக சரி செய்வதிலும் இஞ்சிக்கு முக்கியப் பங்கு உண்டு. இஞ்சியை நன்றாக அரைத்துச் சாறாக்கி, அதில் ஒரு சிட்டிகை உப்பைக் கலந்து கொள்ள வேண்டும். இந்தச் சாற்றைக் குடித்து வந்தால் ஓரிரு நாட்களில் மூக்கு ஒழுகுதல் நின்று போகும்.

மஞ்சள்

மஞ்சள்

மஞ்சளும் பலவிதமான வியாதிகளைக் குணப்படுத்த வல்லது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆளி விதை எண்ணெயுடன் ஒரு ஸ்பூன் மஞ்சளை ஊற வைத்து, அதில் வரும் புகையைச் சுவாசித்தால் மூக்கு ஒழுகுதல் சட்டென்று நிற்கும்.

பூண்டு

பூண்டு

ஒரு பல் பூண்டை எடுத்து வாயில் போட்டு நன்றாகக் கடித்து மெல்ல வேண்டும். அதன் ருசியும் வாடையும் ஒரு மாதிரியாகத் தான் இருக்கும். அதைப் பொறுத்துக் கொண்டு, மென்று தின்றால் உடம்பு கொஞ்சம் சூடாகும். அந்தச் சூட்டில் மூக்கு ஒழுகுதல் உடனடியாக நின்று போகும்.

யூகலிப்டஸ் எண்ணெய்

யூகலிப்டஸ் எண்ணெய்

'நீலகிரித் தைலம்' என்று பேச்சு வழக்கில் கூறப்படும் இது ஒரு நறுமண எண்ணெய் மட்டுமல்ல, ஒரு அருமையான மருந்தும் கூட! இதில் ஓரிரு துளிகளை கைக்குட்டையில் விட்டு, அவ்வப்போது அதை மூக்கில் வைத்து நாள் முழுவதும் சுவாசித்து வந்தால் மூக்கு ஒழுகிய அறிகுறியே இல்லாமல் போய்விடும்.

 மிளகு

மிளகு

சளியை அகற்றுவதில் மிகவும் வீரியத்துடன் செயல்படுவதில் மிளகுக்கு நிகர் மிளகுதான். அதற்கு மிளகை நாம் எல்லா உணவுகளிலும் சேர்த்துக் கொண்டால், அது மூக்கில் உள்ள அனைத்துச் சளியையும் அடித்து இழுத்துக் கொண்டு வந்து விடும்.

ஓமம்

ஓமம்

நம் உடலில் ஏற்படும் பலவிதமான உபாதைகளுக்கும் ஓமம் ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது. தினமும் காலையில் ஓரிரு ஓம இலைகளை வாயில் போட்டு மென்று வந்தால், அது சளியை ஓட ஓட விரட்டி விடும். மேலும், 10 ஓம இலைகள் மற்றும் ஆறு கிராம்புகளை சர்க்கரையுடன் கலந்து நீரில் கொதிக்க வைத்து, அந்தக் கசாயத்தை தினமும் காலையில் குடித்து வந்தால் ஒழுகும் சளி ஓடிப் போகும்.

எள்

எள்

எள்ளை நன்றாக வறுத்து, அத்துடன் வெல்லத்தை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், கொளகொளவென்று ஒழுகிக் கொண்டிருக்கும் சளி விரைவில் நின்று போகும்.

கசாயம்

கசாயம்

அரை ஸ்பூன் பூண்டு, ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, அரை ஸ்பூன் இலவங்கப்பட்டை, அரை ஸ்பூன் இஞ்சியுடன் தேவையான அளவு டீத் தூளைக் கலந்து கொதிக்க வைத்து கசாயம் செய்து குடித்து வர, 30 நிமிடங்களில் மூக்கு ஒழுகுதல் நிற்கும்.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

10 Effective Home Remedies To Get Rid Of A Runny Nose

We do not need to tell you how annoying a runny nose can be, do we? We are forever in search of home remedies that can help stop that runny nose! Here are some of the effective home remedies to get rid of a runny nose. Take a look...