கண்களிலும் நாடா புழுக்கள் தாக்குமாம்!!!

Posted By:
Subscribe to Boldsky

நாடா புழு என்று சொல்லும் போது அது வயிற்றில் மட்டும் தான் வரும் என்று அனைவரும் நினைக்கிறோம். அதிலும் அதிகப்படியான இனிப்புக்களை சாப்பிட்டால் மட்டுமே நாடா புழுக்கள் வயிற்றில் வரும். ஆகவே அவற்றை வயிற்றில் இருந்து வெளியேற்றுவதற்கு பூச்சி மாத்திரைகளை போட்டு, அவ்வளவு தான் என்று நினைப்போம். ஆனால் இவற்றை சாதாரணமாக எண்ண வேண்டாம். ஏனெனில் இந்த நாடா புழு வயிற்றில் மட்டும் வருவதில்லை, மூளை மற்றும் நரம்பு மண்டலத்தையும் தாக்கும். அதைக் கூட நம்பலாம். ஆனால் கண்களிலும் நாடா புழு தொற்றும் என்று சொன்னால் நம்புவீர்களா?

Is there a worm in your eye?

ஆம், உண்மையில் கண்களிலும் நாடா புழு தாக்கும் அபாயம் உள்ளது. அவ்வாறு கண்களில் ஒருவருக்கு 20 செ.மீ நீளமுள்ள நாடா புழுவானது தாக்கி, அவற்றை டாக்டர். ஆஷ்லே தாமஸ் முலமுட்டில் என்பவர், அறுவை சிகிச்சையின் மூலம் வெளியேற்றியுள்ளார். மேலும் டாக்டர். தாமஸ் கண்களில் இருக்கும் நாடா புழுவை சிகிச்சை செய்து எடுத்ததில், இது ஏழாவது சிகிச்சை என்றும், இதுவரை இவர் எடுத்த புழுக்களிலேயே இது தான் மிகவும் நீளமான புழுவும் கூட என்றும் கூறியுள்ளார்.

<center><center><center><center><center><iframe width="600" height="450" src="http://www.youtube.com/embed/BwlNw_GaMUE?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></center></center></center></center></center>

www.indiavideo.org

பரவும் நோய்

டாக்டர். முலமுட்டில் "பொதுவாக இந்த மாதிரியான நாடா புழு ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்போது அது ஆசியாவை அடைந்துள்ளது. மேலும் இந்த மாதிரியான புழுக்களின் முட்டைகளை, சதுப்புநிலக் காட்டு ஈ என்னும் பூச்சிகளால் கடத்தப்படுவதாகவும் நம்பப்படுகிறது. அதுவும் இந்த புழுக்களின் முட்டைகள், தூசிகள் போன்றோ அல்லது உடலில் உள்ள சிறு காயங்களினாலோ, மனிதர்களின் உடலுக்குள்ளே சென்று, கண்களை அடைகிறது" என்றும் சொல்கிறார்.

சிகிச்சை

இந்த பரவும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹீமோதெரபி அல்லது அறுவை சிகிச்சையின் மூலம் கண்களில் இருந்து வெளிப்படுத்த முடியும். துரதிர்ஷ்டவசமாக, இந்த நோய் தாக்குதலுக்கு எந்த ஒரு தடுப்பு மருந்துகளும் இல்லை. இருப்பினும், அதனை சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டால், குணமாக்கிவிடலாம்.

இவையே விசித்திரமான ஆப்பிரிக்க கண் புழு பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் ஆகும். இந்த புழுக்கள் 20 செ.மீ நீளம் வளரக்கூடியவை. மேலும் இந்த கண் புழுவை சிகிச்சை செய்த வீடியோவை உங்களுக்காக கொடுத்துள்ளோம். அதைப் பார்த்து உங்களது ரியாக்ஸனை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

English summary

Is there a worm in your eye? | கண்களிலும் நாடா புழுக்கள் தாக்குமாம்!!!

When it comes to worms we perceive that it only affects our stomach. If you eat too many sweets, you get worms and then you have to take de-worming medications. However, it is not as simple as that. The fatal tapeworm can also affect your brain and entire central nervous system. Besides, have you ever heard of an eye worm; a worm that infects the eyes? The dangerous Loa loa worm is one such pest that attacks the eyes.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter