For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாய் துர்நாற்றம் அதிகமா இருக்கா? அதுக்கு காரணம் என்ன தெரியுமா?

By Maha
|

உடலில் இருக்கும் பிரச்சனைகளில் மிகவும் சகிக்கமுடியாத ஒன்றென்றால், அது வாய் துர்நாற்றம் தான். இத்தகைய துர்நாற்றம் அடித்தால், யாரும் நெருங்கி பேசுவதென்ன, அருகில் கூட வரமாட்டார்கள். இதற்கு காரணம் பற்கள், ஈறுகள் போன்றவற்றினால் மட்டும் தான் என்று நினைக்கின்றோம். இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு மேலும் சில காரணங்களும் உள்ளன. அவை வேறொன்றும் இல்லை. நம்முள் இருக்கும் பழக்கவழக்கங்கள் மற்றும் இதர உடல் பிரச்சனைகளும் தான்.

உதாரணமாக, கல்லீரல் பிரச்சனை உள்வர்களுக்கு, சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களுக்கு வாய் துர்நாற்றம் கடுமையாக இருக்கும். இது போன்று வேறு சில காரணங்களும் உள்ளன. அவை என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதை படித்து, உங்களுக்கு வெளிவரும் வாய் துர்நாற்றத்தில் இருந்து விடுபடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காலை உணவைத் தவிர்த்தல்

காலை உணவைத் தவிர்த்தல்

காலை உணவு வயிற்றிற்கு மட்டும் நன்மை விளைவிப்பதில்லை, வாய்க்கும் தான். எப்படியெனில் காலை உணவு சாப்பிடுவதால், வாயில் ஊறும் எச்சிலின் உற்பத்திஅதிகரித்து, துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழித்துவிடும்.

கல்லீரல் பிரச்சனை

கல்லீரல் பிரச்சனை

கல்லீரலில் பிரச்சனை அல்லது மஞ்சள் காமாலை இருந்தாலும், வாய் துர்நாற்றம் ஏற்படும்.

வாய் அல்சர்

வாய் அல்சர்

பற்களிலிலோ அல்லது, ஈறுகளிலிலோ ஏதேனும் பூச்சிகள் தாக்கப்பட்டு, அதனால் புண் ஏற்பட்டு, சில நேரங்களில் இரத்தம் வடிதல் அல்லது சீழ் உருவாகும். இதனாலும் கெட்ட நாற்றமானது வாயிலிருந்து வெளிவரும்.

ஈறுகளில் இரத்தம்

ஈறுகளில் இரத்தம்

சிலருக்கு ஈறுகளில் இருந்து இரத்தம் வடியும். இவ்வாறு வடிவதாலும், வாய் துர்நாற்றம் ஏற்படும். ஏனெனில் இரத்தமானது நீண்ட நாட்களாக தேங்கியிருப்பதால், அவை ஒருவித கெட்ட நாற்றத்தை ஏற்படுத்தும்.

தொண்டையில் தொற்று

தொண்டையில் தொற்று

தொண்டையில் ஏதேனும் தொற்று ஏற்பட்டிருந்தாலும், துர்நாற்றமானது ஏற்படும். எப்படியெனில் தொற்று ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள், மூச்சுக்குழாயில் உள்ள செல்களை உடைத்து, துர்நாற்றமுள்ள சளியை உருவாக்கும்.

சிறுநீரக செயலிழப்பு

சிறுநீரக செயலிழப்பு

சிறுநீரக செயலிழப்பும், வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் காரணங்களில் முக்கியமானது. அதுவும் இந்த பிரச்சனை இருந்தால், கெட்டுப் போன மீன் நாற்றம் தான் வாயிலிருந்து வீசும்.

டயட்

டயட்

உண்ணும் உணவில் அதிகப்படியான புரோட்டீன் இருந்தாலும், வாய் துர்நாற்றம் உண்டாகும். ஏனெனில் அமினோ அமிலங்கள் வாயில் பாக்டீரியாவை இனப்பெருக்கம் செய்து, கெட்ட நாற்றத்தை உண்டாக்குகிறது.

ஆல்கஹால் பருகுதல்

ஆல்கஹால் பருகுதல்

அதிகப்படியான ஆல்கஹால் பருகினால், எச்சில் சுரக்கும் நாளமானது வறட்சியடைந்துவிடும். பொதுவாகவே எச்சிலானது வாயில் இருக்கும் பாக்டீரியாக்களை வெளியேற்ற உதவியாக இருக்கும். ஆனால் வறட்சியான நாக்கு இருந்தால், எச்சிலின்றி துர்நாற்றத்தை உண்டாக்கும்.

மூச்சுதிணறும் படி தூங்குவது

மூச்சுதிணறும் படி தூங்குவது

சிலர் மூச்சு வெளிவராதவாறு குப்புற படுத்து, மூக்கை தலையணை அல்லது போர்வைக் கொண்டு மூடி, வாயின் வழியாக சுவாசிப்பார்கள். அத்தகையவர்களது வாயிலும் கப்பு தாங்காது. ஏனெனில் வாய் வறட்சியடைந்துவிடுவதால், போதிய எச்சில் இல்லாமல், துர்நாற்றம் ஏற்படுகிறது.

மருந்துகள்

மருந்துகள்

சில மருந்துகளும் வாயை வறட்சியடையச் செய்யும். குறிப்பாக ஆன்டி-டிப்ரசண்ட், வலி நிவாரணி மாத்திரைகள் போன்றவை வறட்சியடையச் செய்யும். இதனால் எச்சில் வறட்சியடைந்து, வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Causes Of Bad Breath That Will Surprise You | வாய் துர்நாற்றம் அதிகமா இருக்கா? அதுக்கு காரணம் என்ன தெரியுமா?

bad breath has many causes that are surprising and hidden. Some of these causes of bad breath are medical. Other causes of bad breath are various kinds of infection. Few causes of bad breath are also hidden in your diet and habits. Here are some causes of bad breath that may surprise you.
Desktop Bottom Promotion