For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டயட்-ல இருக்கீங்களா!!! ஓட்ஸ் சாப்பிட ஈஸியான வழிகள்!!!

By Maha
|

Oats
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கும் உணவு தான் ஓட்ஸ். அத்தகைய ஓட்ஸ் உடலுக்கு ஏற்ற ஆரோக்கியமான, ஊட்டச்சத்துமிக்க உணவுப் பொருள். இதன் சுவை சற்று குறைவாகத் தான் இருக்கும். இதனை தண்ணீர் அல்லது பாலில் கலந்து சாப்பிட்டால் கூட சுவை அதே சுவை தான் இருக்கும். இதனால் சாப்பிட நினைக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடாமல் ஒரு கட்டாயத்தின் பேரிலேயே சாப்பிடுகிறார்கள். இவ்வாறெல்லாம் கட்டாயத்தின் பேரில் சாப்பிடாமல், விரும்பி சாப்பிட சில ஈஸியாக வழிகள் இருக்கிறது. அது என்னவென்று சற்று படித்து பாருங்களேன்...

1. ஓட்ஸை பாலோடு, சர்க்கரை கலந்து சிலருக்கு சாப்பிடப் பிடிக்காது. அப்படி இருப்பவர்கள் அந்த ஓட்ஸை சற்று அரைத்து அதோடு முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சை, பாதாம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து சாப்பிடலாம். இது சற்று வித்தியாசமான சுவையைத் தரும்.

2. சூடான தண்ணீரோடு ஓட்ஸை கலந்து சாப்பிடப் பிடிக்காதவர்கள், அதோடு தேங்காய் பால் அல்லது தயிரை சேர்த்து சாப்பிடலாம். தயிரானது வீட்டில் செய்ததாக இருந்தால் நல்லது. வேண்டுமென்றால் சூடான பாலில் ஓட்ஸை போட்டு உடனே சாப்பிட வேண்டும். இல்லையெனில் ஓட்ஸானது கூழ் போல் மாறிவிடும். டையட்டில் இருப்பவர்கள் ஆடையில்லாத பாலை பயன்படுத்தவும், இதனால் உடலில் கொழுப்பானது ஏறாமல் இருக்கும். இனிப்பு வேண்டும் என்பவர்கள் சாக்லேட் சாஸை விட்டு சாப்பிடலாம்.

3. பழங்கள் அதிகம் பிடிக்கும் என்பவர்கள் அதோடு சேர்த்து சாப்பிடலாம். இது ஒரு நல்ல டேஸ்டை தரும். சில பழங்களான ஆப்பிள், மாம்பழம், தர்பூசணி, திராட்சை, கிவி, ஸ்ட்ராபெர்ரி போன்றவை சாப்பிட்டு அழுத்து போனவர்கள், வேண்டுமென்றால் பழச்சாற்றை அதோடு சேர்த்து சாப்பிடலாம்.

4. சாலட் பிடிக்கும் என்பவர்கள் ஓட்ஸை சாலட் மாதிரி செய்தும் சாப்பிடலாம். அதிலும் அழகான காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை ஓட்ஸோடு சேர்க்கலாம். இப்படி செய்தால் அழகாக இருப்பதோடு, சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

5. வேண்டுமென்றால் ஓட்ஸோடு வெள்ளரிக்காய், வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய் மற்றும் தக்காளி போன்றவற்றை நறுக்கி, அதோடு சிறிது எலுமிச்சைப்பழச்சாற்றை பிளிந்து, மாலையில் சாப்பிடலாம். இனிப்பு வேண்டுமெனில் அதோடு போட்டு, பால் மற்றும் சில விருப்பமான பழங்களை சேர்த்தும் சாப்பிடலாம். இது பசியை அடக்குவதோடு உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும்.

6. தினமும் ஓட்ஸ் சாப்பிட்டு அழுத்து போயிருக்கும். அவர்கள் சற்று வித்தியாசமாக ஓட்ஸால் ஆன கேக் சாப்பிடலாம். இல்லையென்றால் ஓட்ஸால் ஆன பிஸ்கட்டை, மாலையில் காபி/டீ-யோடு சாப்பிடலாம்.

English summary

easy ways to eat oats | டயட்-ல இருக்கீங்களா!!! ஓட்ஸ் சாப்பிட ஈஸியான வழிகள்!!!

Oatmeal is a rising rage among people who are diet conscious. To maintain a well shaped body, there are people who prefer having this healthy and nutritious cereal. But, the taste of an oatmeal makes it difficult to swallow down your throat. Even if you add with water or milk, the taste remains the same! Therefore, to make this healthy and nutritious cereal a must have in your diet, here are few easy ways to include oats in your menu.
Story first published: Sunday, June 17, 2012, 14:01 [IST]
Desktop Bottom Promotion