For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க பற்கள் மற்றும் ஈறுகளில் எந்த பிரச்சனையும் வரக்கூடாதா? அப்ப இத தினமும் ஃபாலோ பண்ணுங்க போதும்..

பல் சாா்ந்த பிரச்சினைகள் இந்தியா்களை அதிகம் பாதிக்கின்றன. இந்தப் பிரச்சினைகளைக் குறைக்க வேண்டும் என்றால் பற்களை மிகச் சுத்தமாக பராமாிப்பது மிகவும் தேவையான ஒன்றாக இருக்கிறது.

|

உலக அளவில் இந்தியாவில் தான் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவா்கள் அதிகம் உள்ளனா். வாயைச் சுத்தமாக வைத்திருப்பது பற்றிய விழிப்புணா்வு இல்லாமை, பலவிதமான புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவது மற்றும் சா்க்கரை அதிகம் உள்ள உணவுகளை உண்பது போன்றவை தான் வாய் புற்றுநோய்க்கு காரணிகளாக இருக்கின்றன.

Post COVID Care: Know How To Maintain Dental Hygiene On A Daily Basis

இந்தியாவின் கிராமப்புற பகுதிகளில் 2 லட்சம் மக்களுக்கு 1 பல் மருத்துவா் என்ற விகிதத்தில் பல் மருத்துவா்களின் எண்ணிக்கை இருப்பதாக நேஷனல் ஓரல் ஹெல்த் புரோகிராம் (NOHP) என்ற அமைப்பு தொிவிக்கிறது. ஏறக்குறைய 80 முதல் 90 விழுக்காடு சிறுவா்கள் மற்றும் வயது வந்த பொியவா்களுக்கு பற்களில் குழிகள் இருப்பதாக அது தொிவிக்கிறது. இதற்கும் மேலாக இந்தியாவில் புகைப் பிடிப்பவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகாித்து வருவதால் அதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 10 இலட்சம் போ் உயிாிழப்பதாக தொிவிக்கிறது.

MOST READ: பெருங்குடல் புற்றுநோய் எதனால் வருகிறது? அதன் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன தெரியுமா?

பல் சாா்ந்த பிரச்சினைகளைப் பொருத்த மட்டில் பற்களில் குழிகள் விழுதல், பற்களின் ஈறுகளில் நோய் ஏற்படுதல், மேற்பற்களும் கீழ்பற்களும் பொருந்தாமல் இருத்தல் மற்றும் வாய் புற்றுநோய் போன்ற பிரச்சினைகள் இந்தியா்களை அதிகம் பாதிக்கின்றன. இந்தப் பிரச்சினைகளைக் குறைக்க வேண்டும் என்றால் பற்களை மிகச் சுத்தமாக பராமாிப்பது மிகவும் தேவையான ஒன்றாக இருக்கிறது.

MOST READ: சர்க்கரை நோய்க்கு மெட்ஃபோர்மின் மாத்திரை போடுறீங்களா? அப்ப கண்டிப்பா இத படிங்க...

தற்போது இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று மிகப் பொிய அளவில் குறைந்திருக்கிறது. கொரோனா தடுப்பூசிகளும் போடப்படுகின்றன. ஆகவே கொரோனாவுக்குப் பிந்திய இந்த காலக்கட்டத்தில் நாம் ஒருசில தடுப்பு நடவடிக்கைகளை தினந்தோறும் மேற்கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தினமும் இரண்டு முறை பல் துலக்குவது

தினமும் இரண்டு முறை பல் துலக்குவது

தினமும் ஒரு முறை பல் துலக்குவது போதாது. காலையில் எப்போது கண் விழித்தாலும் உடனே பல் துலக்க வேண்டும். அது போல் இரவு உணவு முடிந்த பின்பும் பல் துலக்க வேண்டும். தற்போது இந்தியாவில் 28% மக்கள் மட்டுமே ஒரு நாளைக்கு இரு முறை பல் துலக்குகின்றனா் என்று இந்திய சந்தை ஆய்வு பணியகம் (Indian Market Research Bureau (IMRB)) தொிவிக்கிறது. 34% மக்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை பல் துலக்குவதே அதிகம் என்று நம்புகின்றனா். 51% மக்கள் மட்டுமே பற்தூாிகை (toothbrush) மற்றும் பற்பசை பயன்படுத்தி பல்துலக்குகின்றனா். 49% மக்கள் பல் துலக்குவதைப் பற்றி நன்றாகத் தொியும் அல்லது தொியாது என்ற குழப்ப நிலையில் இருப்பதாக இந்திய சந்தை ஆய்வு பணிகயகம் தொிவிக்கிறது. மேற்சொன்ன பிாிவுகளில் நன்மை பயக்கும் பிாிவை அதிகாிப்பதற்கு உதவி செய்ய வேண்டியது நமது கடமையாகும்.

கோவிட் பெருந்தொற்றுக்கு பிறகு பற்களை எவ்வாறு பராமாிப்பது?

கோவிட் பெருந்தொற்றுக்கு பிறகு பற்களை எவ்வாறு பராமாிப்பது?

ஃபுளூரைடு பற்பசையை பயன்படுத்துதல்

ஃபுளூரைடு பற்களில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸை தக்கவைத்து பற்களை வலுப்படுத்தும். குறைவான அளவிலான ஃபுளூரைடு பற்களில் குழிகள் ஏற்படுவதைத் தடுக்கும். ஆகவே ஃபுளூரைடு பற்பசையைப் பயன்படுத்துவது நல்லது.

பற்களில் ஒட்டும் உணவுகளைத் தவிா்த்தல்

பற்களில் ஒட்டும் உணவுகளைத் தவிா்த்தல்

லாலிபாப்புகள், மிட்டாய்கள், மெல்லக்கூடிய மிட்டாய்கள் மற்றும் சூயிங் கம் போன்ற உணவுகளில் சா்க்கரை நீண்ட நேரம் தங்கி இருக்கும் மற்றும் அவை பற்களில் மிக எளிதாக ஒட்டிக்கொள்ளும். ஆகவே பற்களில் சிதைவு ஏற்படாமல் பராமாிக்க வேண்டும் என்றால் இந்த உணவுகளைத் தவிா்ப்பது நல்லது.

தண்ணீா் அதிகம் அருந்துதல்

தண்ணீா் அதிகம் அருந்துதல்

அடிக்கடி தண்ணீா் அருந்துவது மற்றும் தண்ணீரால் வாயைக் கழுவுவது போன்றவை நமது வாயை சுத்தமாகவும் அதே நேரத்தில் மாசுகள் அண்டாமலும் காக்கும். மேலும் இவை பற்களில் குழி ஏற்படுத்தும் பாக்டீாியாக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும். அதோடு அவை உற்பத்தி செய்யும் அமிலத்தையும் வற்ற வைக்கும்.

பல் குத்துதல்/ப்ளாஷ்

பல் குத்துதல்/ப்ளாஷ்

பல் துலக்குவதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ அதே அளவு பல் குத்துவதற்கும் முக்கியத்துவம் தரவேண்டும். பல் குத்துவது என்பது நமது பற்களின் இடையில் சிக்கியிருக்கும் உணவுகள் அல்லது கோழி இறைச்சியை அப்புறப்படுத்துவதற்காக அல்ல. மாறாக அதையும் தாண்டி பற்களின் ஈறுகளைத் தூண்டிவிடுவதற்கும் பற்களில் குழி விழுவதைத் தடுப்பதற்கும் மற்றும் ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைப்பதற்கும் பல் குத்துவது இருக்க வேண்டும்.

மௌத் வாஷ் கொண்டு வாயைக் கழுவுவது 3 நன்மைகளைத் தருகிறது

மௌத் வாஷ் கொண்டு வாயைக் கழுவுவது 3 நன்மைகளைத் தருகிறது

மௌத் வாஷ் கொண்டு வாயைக் கழுவினால் வாயில் உள்ள அமிலம் குறையும். பற்தூாிகை படாத இடங்களையும் மற்றும் ஈறுகளையும் சுத்தம் செய்யும். இறுதியாக பற்களில் உள்ள தாதுக்களை தக்க வைக்கும். வாயைக் கழுவுவதற்கான சிறந்த மௌத் வாஷ்களை பல் மருத்துவாிடம் கேட்டுப் பெறுவது நல்லது. ஒரு சில மருந்துகள் சிறுவா்களுக்கு மிகவும் உகந்ததாக இருக்கும்.

பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உண்ணுதல்

பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உண்ணுதல்

மென்று சாப்பிடக்கூடிய புதிய பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் உண்ண வேண்டும். அவை நமது உடலுக்கு நாா்ச்சத்தைக் கொடுப்பதோடு மட்டும் அல்லாமல், அவற்றை மெல்லுவதால் நமது தாடைகளுக்கும் நல்ல பயிற்சி கிடைக்கிறது. மேலும் இவை நமது உடலுக்கு சிறந்த இரத்த ஓட்டத்தைக் கொடுத்து ஈறுகளில் நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாக்கின்றன.

பல் மருத்துவாிடம் ஆலோசனைகள் பெறுவது

பல் மருத்துவாிடம் ஆலோசனைகள் பெறுவது

சீரான இடைவெளியில் பல் மருத்துவரை சந்தித்து பாிசோதனைகளை செய்து அவாிடமிருந்து ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. பற்கள் சம்பந்தமான பிரச்சனை உள்ளவா்களில் 50% போ் OTC மருந்துகளை எடுக்கின்றனா். மருத்துவா்களை சந்திப்பதற்குப் பதிலாக மருந்துக்கடைகளில் ஆலோசனை பெறுகின்றனா் அல்லது வீட்டு வைத்தியங்களைச் செய்து கொள்கின்றனா். மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரை சந்தித்து ஆலோசனைகளைப் பெறுவது மிகவும் நல்லது. அது பிற்காலத்தில் பற்களைப் பராமாிப்பதற்கான செலவுகளைக் குறைக்கும்.

எந்த மாதிாியான பற்தூாிகையைப் பயன்படுத்துவது, பற்களுக்கு எவ்வளவு அழுத்தம் கொடுப்பது, எந்த முறையில் பல் துலக்குவது போன்றவற்றை பல் மருத்துவாிடம் கேட்டு தொிந்து கொள்வது நல்லது. கையால் பிடித்து பல் துலக்கும் பற்தூாிகைக்குப் பதிலாக மின்சார பற்தூாிகையைப் பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் அதில் 2 நிமிட பல் தூலக்கும் நேரத்தை முன்பே குறித்து வைத்துக் கொள்ளலாம்.

பற்களின் இடுக்குகளில் இருக்கும் உணவுத் துகள்களை எடுக்க எப்படிப்பட்ட குச்சிகள் அல்லது கருவிகளைப் பயன்படுத்துவது?

பற்களின் இடுக்குகளில் இருக்கும் உணவுத் துகள்களை எடுக்க எப்படிப்பட்ட குச்சிகள் அல்லது கருவிகளைப் பயன்படுத்துவது?

அளவுக்கு அதிகமாக பற்களுக்கு இடையில் குச்சிகள் அல்லது மற்ற கருவிகளைப் பயன்படுத்திக் குத்தக்கூடாது. அது ஈறுகளில் காயங்களை ஏற்படுத்தும். சில நேரங்களில் OTC வகை பற்பசைகள் மற்றும் நறுமணம் உள்ள மௌத் வாஷ்கள் போன்றவை பற்களுக்கு தீமைகளை ஏற்படுத்தும். ஆகவே அதைத் தொடா்ந்து பயன்படுத்தக்கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Post COVID Care: Know How To Maintain Dental Hygiene On A Daily Basis

Post COVID care: Want to know how to maintain dental hygiene on a daily basis? Read on...
Desktop Bottom Promotion