For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தூக்கத்தில் விந்து வெளியேறுகிறதா? அதற்கான தீர்வை வெளியே கேட்க கூச்சமா இருக்கா? இத படிங்க...

|

ஆண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சனைகளுள் ஒன்று தான் தூக்கத்தில் விந்து வெளியேறுவது. இப்பிரச்சனை உள்ள ஆண்கள் இதைப் பற்றி மற்றவர்களிடம் வெளிப்படையாக பேச தயங்குவார்கள். ஒரு ஆணின் விரை விதை நரம்புகள் பலவீனமாக இருந்தால் தான், தூக்கத்தில் விந்து வெளியேறுவது, முன்கூட்டியே விந்து வெளியேறுவது மற்றும் பல பாலியல் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

ஆரம்பத்திலேயே விந்து வெளியேறுவதை நிறுத்த முயற்சி செய்யாவிட்டால், எதிர்காலத்தில் அது பல உடல் மற்றும் மன பிரச்சனைகளை ஏற்படுத்தும். பொதுவாக ஆண்கள் பருவமடைந்த காலத்தில் தூக்கத்தில் அரிதாக விந்து வெளியேறுவது தீங்கை விளைவிக்காது. ஆனால் ஒரு ஆணுக்கு அடிக்கடி இவ்வாறு ஏற்பட்டு, அதை நிறுத்த முயலாவிட்டால், முதுகு வலி, விரை விதை வலி, குறைவான விந்தணுக்களின் எண்ணிக்கை, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் மற்றும் தலைமுடி உதிர்தலை ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆய்வு

ஆய்வு

ஒரு மில்லி லிட்டர் விந்துவில் 20 மில்லியனுக்கும் குறைவான விந்தணுக்களைக் கொண்ட ஒரு ஆணால் தந்தையாவது என்பது கடினமான ஒன்றாக இருக்கும் என ஆய்வு கூறுகிறது. விந்து வெளியேற்ற பிரச்சனையை இயற்கையாகவே சரிசெய்ய முடியும். அதுவும் வைட்டமின்கள், புரோட்டீன்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அடங்கிய ஆரோக்கியமான டயட்டில் மூலம் தீர்வு காணலாம். அனாபாலிக் ஸ்டெராய்டுகள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை விந்தணு எண்ணிக்கை குறைவு, கல்லீரல் நோய்கள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் சரும தொற்றுகள் போன்றவற்றை உண்டாக்கும். மேலும் அன்றாட உடற்பயிற்சி, மூலிகை எண்ணெய்களால் பாடி மசாஜ் போன்றவற்றை மேற்கொள்வதன் மூலம் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்பட்டு, தூக்கத்தில் விந்து வெளியேறுவது இயற்கையாக தடுக்கப்படும்.

தூக்கத்தில் விந்து வெளியேறுவதற்கான காரணங்கள்

தூக்கத்தில் விந்து வெளியேறுவதற்கான காரணங்கள்

* ஆண்குறிக்கு செல்லும் நரம்புகள் பலவீனமாக இருப்பது அல்லது இரத்த ஓட்டம் குறைவாக இருப்பது

* பலவீனம்

* மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம்

* அதிகப்படியான சுயஇன்பம் காண்பது

* புகைப்பிடிப்பது

* தண்டுவட காயங்கள்

* மதுப் பழக்கம்

* ஜிங்க் குறைபாடு

தூக்கத்தில் விந்து வெளியேறும் பிரச்சனையில் இருந்து விடுபட பல இயற்கை வழிகள் உள்ளன. அவற்றில் சில வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பேரிச்சம் பழம் மற்றும் ஆல மரப் பால்

பேரிச்சம் பழம் மற்றும் ஆல மரப் பால்

250 பேரிச்சம் பழத்தை எடுத்து, அதில் உள்ள விதைகளை நீக்கிவிடுங்கள். பின் அந்த பேரிச்சம் பழத்திற்குள் ஆலமரப் பாலை நிரப்புங்கள். அதன் பின் 2 லிட்டர் பசும்பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பி வைத்து, அதில் பேரிச்சம் பழத்தைப் போட்டு 1/2 லிட்டராக வரும் வரை நன்கு சுண்ட காய்ச்சி இறக்க வேண்டும். இறுதியில் அதை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டுக் கொள்ள வேண்டும். இந்த கலவையை தினமும் 1 டேபிள் ஸ்பூன் சாப்பிட வேண்டும். இதனால் ஆண்கள் சந்திக்கும் எப்பேற்பட்ட பிரச்சனையும் இயற்கையாக குணமாகிவிடும்.

வெள்ளை முசிலி

வெள்ளை முசிலி

100 கிராம் வெள்ளை முசிலியை உலர்த்தி பொடி செய்து கொள்ள வேண்டும். பின் 1 டீஸ்பூன் முசிலி பொடியை நீரில் கலந்து தினமும் குடிக்க வேண்டும். இப்படி 3-4 வாரம் தொடர்ந்து குடித்து வந்தால், ஆண்களின் பாலியல் பிரச்சனைகள் இயற்கையாகவே சரியாகிவிடும்.

அஸ்பாரகஸ் டீ

அஸ்பாரகஸ் டீ

தூக்கத்தில் விந்து வெளியேறும் பிரச்சனையை சந்திக்கும் ஆண்கள் தினடும் 1 கப் அஸ்பாரகஸ் டீ குடிப்பது நல்லது. இந்த டீயை 2-3 வாரங்கள் தொடர்ந்து குடித்து வந்தால், விரைவில் பிரச்சனை குணமாகிவிடும். அதோடு ஆண்களின் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

ஜின்கோ பிலோபா இலைகள்

ஜின்கோ பிலோபா இலைகள்

தினமும் 5-10 ஜின்கோ பிலோபா இலைகளை 2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிடுவதால், தானாக விந்து வெளியேறுவது தடுக்கப்படும். அதோடு இந்த இலைகள் மூளை நரம்புகளை சுறுசுறுப்பாக செயல்படுத்துகிறது. அதோடு இது மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, தசைகளையும் வலிமையடையச் செய்யும்.

பாதாம் மில்க் ஷேக்

பாதாம் மில்க் ஷேக்

தினமும் ஒரு டம்ளர் பாதாம் மில்க் ஷேக்கை ஆண்கள் குடித்து வந்தால், ஆரோக்கியமான விந்தணுக்கள் உற்பத்தி செய்யப்படுவதோடு, தூக்கத்தில் தானாக விந்து வெளியேறும் பிரச்சனை சரிசெய்யப்பட்டு, உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும்.

அவகேடோ

அவகேடோ

ஆண்களுக்கு அவகேடோ பழம் மிகவும் நல்லது. தூக்கத்தை விந்து வெளியேற்ற பிரச்சனையை சந்திக்கும் ஆண்கள் இந்த பழத்தின் 3-4 துண்டுகளை தினமும் சாப்பிட்டால் விரைவில் குணமாகும்.

கருப்பு திராட்சை வத்தல் (Black Currants)

கருப்பு திராட்சை வத்தல் (Black Currants)

2 டேபிள் ஸ்பூன் கருப்பு திராட்சை வத்தலை ஒரு டம்ளர் பாலில் சேர்த்து, தினமும் இரவு தூங்குவதற்கு முன் குடித்து வந்தால், தூக்கத்தில் விந்து வெளியேற்ற பிரச்சனை இயற்கையாக சரியாகிவிடும்.

ஒமேகா-3 உணவுகள்

ஒமேகா-3 உணவுகள்

தூக்கத்தில் விந்து வெளியேறும் பிரச்சனையை சந்திக்கும் ஆண்கள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இந்த ஒமேகா-3 வேர்க்கடலை, பாதாம், வால் நட்ஸ், சூரிய காந்தி விதைகள், சோயா பொருட்கள், கடல் உணவுகள் மற்றும் கடல் பாசி போன்றவற்றில் அதிகம் உள்ளது.

குங்குமப்பூ பால்

குங்குமப்பூ பால்

தூக்கத்தில் விந்து வெளியேறும் பிரச்சனையை சந்திக்கும் ஆண்கள் இரவு தூங்கும் முன் பாலில் சிறிது குங்குமப்பூ சேர்த்து கலந்து குடித்து வந்தால், அப்பிரச்சனை நீங்குவதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Best Natural Tips to Stop Semen Leakage/Nightfall

Here are some best natural tips to stop semen leakage or nightfall. Read on...