வயிற்றை எளிதில் சுத்தம் செய்ய வேண்டுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க...

Posted By:
Subscribe to Boldsky

நீங்கள் அடிக்கடி வயிற்று பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்களா? நாள்கணக்கில் மலம் கழிக்காமலும், அஜீரண பிரச்சனையாலும் கஷ்டப்படுகிறீர்களா? அப்படியெனில் உங்களுக்கான ஓர் அற்புத தீர்வு இக்கட்டுரையில் உள்ளது.

Try This Natural Laxative If You Want To Cleanse Your Tummy

எப்போது குடலில் டாக்ஸின்கள் முழுமையாக நிரம்பியுள்ளதோ, அப்போது உடலில் நோய்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். உண்ணும் உணவுகள் முதல் நாம் குடிக்கும் பானங்கள் வரை அனைத்திலுமே கிருமிகள் இருப்பதால், அவை குடலை அடைந்து பல தீவிர வயிற்று பிரச்சனைகளை உண்டாக்குகின்றன.

எனவே அவ்வப்போது குடலை சுத்தம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். இக்கட்டுரையில் குடலை சுத்தம் செய்ய உதவும் ஓர் எளிய இயற்கை நிவாரணி குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பின்பற்றி குடலை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் துண்டுகள் - 1 பௌல்
ஆலிவ் ஆயில் - 1 டீஸ்பூன்

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்து, குடலியக்கத்தை சீராக்கி, குடலில் உள்ள டாக்ஸின்களை மலக்குடல் நோக்கி தள்ளி, உடலில் இருந்து வெளியேற்றும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில் குடலில் உள்ள அழுக்குகள் மற்றும் கழிவுகளை எளிதில் நகரச் செய்து, சிரமமின்றி உடலில் இருந்து வெளியேற்ற பெரிதும் உதவியாக இருக்கும்.

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

ஒரு பௌல் ஆப்பிளுடன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கிளறினால், ஆப்பிள் சாலட் தயார். வேண்டுமெனில் இத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினை பிழிந்தும் சாப்பிடலாம். சுவை இன்னும் அருமையாக இருக்கும்.

குறிப்பு

குறிப்பு

இந்த சாலட்டை தினமும் ஒருமுறை உட்கொள்ளுங்கள். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், குடல் சுத்தமாக இருப்பதோடு, வயிற்று பிரச்சனைகளே வராது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Try This Natural Laxative If You Want To Cleanse Your Tummy

If you want to attain a clean stomach and you are looking for a home remedy that can improve the health of your stomach..
Please Wait while comments are loading...
Subscribe Newsletter