பாலுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள்!

Posted By:
Subscribe to Boldsky

நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்தும் ஆரோக்கியமானவை தான். என்ன தான் உணவுப் பொருட்கள் ஆரோக்கியமானவையாக இருந்தாலும், குறிப்பிட்ட உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால், அது உடல் நலத்தை பாதித்து ஆரோக்கிய பிரச்சனைகளால் அவஸ்தைப்படச் செய்யும்.

Never Combine These Foods With Milk

அதுவும் மலட்டுத்தன்மை, பார்வை இழப்பு, குடல் நோய்கள் போன்ற பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். இக்கட்டுரையில் பாலுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளது. அவற்றைப் படித்து தெரிந்து இனிமேல் அவைகளை பாலுடன் சேர்த்து சாப்பிடாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பால் மற்றும் பழங்கள்

பால் மற்றும் பழங்கள்

#1

பழங்களான வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி, எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு போன்றவை செரிமானமாகும் போது வெப்பத்தை உற்பத்தி செய்யும். ஆனால் பாலோ குளிர்ச்சித்தன்மை கொண்டது.

#2

#2

இந்த பழங்களை பாலுடன் சேர்த்து சாப்பிடும் போது, வயிற்றினுள் சென்று உடைக்கப்படும் போது அது புளித்துவிடும். எதிரெதிர் தன்மை கொண்டவைகளை உட்கொள்ளும் போது, அது வயிற்றில் கடுமையான எரிச்சலை உண்டாக்கும்.

#3

#3

மேலும் இது குடல் பகுதிகளில் ஒருவித ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி, வயிற்றில் டாக்ஸின்களின் அளவை அதிகரிக்கும். இதன் விளைவாக சளி, இருமல், அலர்ஜி போன்றவைகள் ஏற்படும். ஆகவே இந்த பழங்களை பாலுடன் சேர்த்து சாப்பிடாதீர்கள்.

பால் மற்றும் இறைச்சி

பால் மற்றும் இறைச்சி

#1

பால் ஒரு முழுமையான உணவு மற்றும் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டது.

#2

#2

பொதுவாக செரிமான மண்டலம் பாலை செரிப்பதற்கு நிறைய நேரம் எடுத்துக் கொள்ளும்.

#3

#3

இந்த பாலை, புரோட்டீன் நிறைந்த இறைச்சியுடன் சேர்த்து சாப்பிட்டால், அது செரிமான மண்டலத்தில் அதிகளவு அழுத்தத்தைக் கொடுக்கும்.

#4

#4

ஏற்கனவே பால் செரிமானமாவதற்கு நேரமாகும். அத்துடன் இறைச்சியை உட்கொண்டால், அதை செரிப்பதற்கு போதிய செரிமான அமிலம் கிடைக்கப் பெறாமல், அஜீரண பிரச்சனையால் அவஸ்தைப்படக்கூடும்.

பால் மற்றும் மீன்

பால் மற்றும் மீன்

#1

ஆயுர்வேதத்தின் படி, பாலையும், மீனையும் ஒன்றாக எடுத்தால், அது உடலில் டாக்ஸின்களின் அளவை அதிகரிக்குமாம்.

#2

#2

ஆயுர்வேதத்தின் படி, உடலில் நோய்கள் வருவதற்கு டாக்ஸின்களின் தேக்கம் தான் முக்கிய காரணம்.

#3

#3

பாலையும், மீனையும் ஒன்றாக உட்கொள்ளும் போது, அது சருமத்தில் பல பிரச்சனைகளை உண்டாக்கும்.

#4

#4

மேலும் இந்த காம்பினேஷன் உடலின் பல்வேறு பகுதிகளில் தடைகளை ஏற்படுத்தும். அதுவும் இரத்த ஓட்டப் பிரச்சனைகள் மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். ஆகவே இந்த கலவையையும் அறவே தவிர்க்க வேண்டும்.

பால் மற்றும் உப்பு

பால் மற்றும் உப்பு

#1

பால் மற்றும் உப்பு எதிர்மறை பண்புகளைக் கொண்டவைகளாகும். எதிர்மறை பண்பு கொண்டவைகளை உட்கொண்டால், அது உடலுக்கு தீங்கைத் தான் உண்டாக்கும்.

#2

#2

எப்போது பாலை சமையலில் முக்கியப் பொருளாகப் பயன்படுத்துகிறோமோ, அந்த உணவை உட்கொண்ட பின் நாம் உடலில் ஒருவித அசௌகரியத்தை அல்லது இம்சையை உணரக்கூடும். ஆகவே எப்போதும் பாலையும், உப்பையும் ஒன்றாக உட்கொள்ளாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Never Combine These Foods With Milk

Ayurveda recommends not to combine these foods with milk. Read this article to know about the foods that should not be mixed with milk.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter