நுரையீரல் வலுவடைய, உடல் தோற்றம் மேலோங்க இந்த பயிற்சி செய்யுங்க!

Posted By: Lakshmi
Subscribe to Boldsky

பலூன்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒன்று. பிறந்தநாள், பார்டிகள் என எதுவென்றாலும் இந்த பலூன்களுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. ஆனால் இந்த பலூன்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது என தெரியுமா? பலூன் ஊதுவதால் பல நன்மைகள் கிடைக்கின்றன.

இந்த பலூன் உடற்பயிற்சியை செய்ய, நீங்கள் கையில் ஒரு பலூனை எடுத்துக்கொண்டு, 3-4 நொடிகள் மூச்சை உள்ளே இழுங்கள். பிறகு 5 - 8 நொடிகள் பலூனை ஊதுங்கள். இது நீங்கள் யோக செய்வது போன்ற பலனை தரும். இது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

பலூன் ஊதுவதால் கிடைக்கும் இந்த பலன்களை படித்த பின்னர், நீங்கள் பலூனை சாதரணமாக நினைக்கமாட்டீர்கள் என்பது நிச்சயம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அருமையான சுவாசம்

அருமையான சுவாசம்

பலூன் பயிற்சியை நீங்கள் தொடர்ந்து செய்யும் போது உங்களால் ஆழமாக சுவாசிக்க முடிகிறது. இதனால் நீங்கள் திறமையாக செயல்பட முடிகிறது. ஆரோக்கியமான சுவாசத்திற்கு இது வழிவகுக்கும். தினமும் மூன்று பலூன்களை ஊதுவது உங்களுக்கு சுவாச பிரச்சனை வராமல் பாதுகாக்கும்.

நுரையீரல் செயல்திறனை அதிகரிக்கும்

நுரையீரல் செயல்திறனை அதிகரிக்கும்

உங்களது மூச்சுக்குழல் சரியாக செயல்பட்டால், உங்கள் நுரையீரலும் நன்றாக செயல்படும். இந்த பயிற்சி புகைப்பிடிப்பவர்களுக்கு பல நன்மைகளை தரும். புகைப்பிடிப்பதால், நுரையீரல் பலவீனமாக இருக்கும். புகைப்பிடிப்பவர்களுக்கு சுவாச பிரச்சனைகள் கட்டாயம் இருக்கும் அவர்களுக்கு இந்த பலூன் ஊதும் பயிற்சி மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும்.

நான்கு வாரங்கள் தொடர்ந்து இந்த பயிற்சியை செய்வது உங்களது நுரையீரலை சரியாக இயங்க வைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.

தோற்றம் மேம்படும்

தோற்றம் மேம்படும்

இந்த பலூன் பயிற்சியானது, கூன் விழுந்தது போல இருக்கும் தோல்பட்டைகளை நேராக மாற்றும். நீங்கள் ஆழமாக சுவாசிக்கும் போது உங்கள் எழும்புகள் நேராகின்றன. இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வருவது உடலமைப்பு நேராக இருக்க உதவுகிறது.

வலிகளில் இருந்து விடுதலை

வலிகளில் இருந்து விடுதலை

உங்கள் உடலில் உள்ள வலிகளை பலூன் பயிற்சி போக்குகிறது நீங்கள் சுவாசிப்பதற்கும் உங்கள் முதுகிற்கும் சம்பந்தம் உண்டு என தெரியுமா? இந்த பலூன் ஊதும் பயிற்சி உங்களது பேக் பெயினை போக்க வல்லது. முதுகு எலும்புகளில் உண்டாகும் வலிகள் தாங்க முடியாதவை. இவற்றை போக்கும் பலூன் பயிற்சிக்கு நாம் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.

கொழுக்கொழு கன்னங்கள்

கொழுக்கொழு கன்னங்கள்

உங்கள் கன்னங்கள் ஒடுங்கி உள்ளே சென்றிருப்பதை போல உள்ளாதா? கவலை வேண்டாம், இந்த பலூன் பயிற்சியின் மூலம் உங்களுக்கு கொழுக்கொழு கன்னங்கள் கிடைப்பது உறுதி.

வாழ்க்கை திறனை மேம்படுத்தும்

வாழ்க்கை திறனை மேம்படுத்தும்

உங்கள் நுரையீரை பாதுகாப்பாக வைப்பதன் மூலம் நீங்கள் நல்ல சுவாச பலன்களை பெற முடிகிறது. மேலும் வலிகளில் இருந்து விடுபட முடிகிறது. இந்த பலூன் உடற்பயிற்சியால், உங்கள் அழகும் வசிகரமும் கூடுகிறது.

தினமும் இந்த பயிற்சியை செய்வது மிக சிறந்த பலன்களை தருகிறது. மேலும் இந்த பலூன்களை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் வாங்க முடியும் அதுவும் மிக குறைந்த செலவில். இது யோகா பயிற்சி தரும் நன்மைகளை தருவது கூடுதல் பலன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Benefits of Balloon Exercises!

here are the some benefits of balloon exercises
Please Wait while comments are loading...
Subscribe Newsletter