உங்களை ஆரோக்கியமாக்கும் அதிக கொழுப்பு கொண்ட 7 உணவுகள்!

By: LAkshmi
Subscribe to Boldsky

பொதுவாகவே அதிக கொழுப்பு சத்து கொண்ட உணவுகள் இதய நோய்களை ஏற்படுத்தும் என நினைக்கிறோம். ஆனால் சமீபத்திய ஆய்வு ஒன்று அது உண்மையல்ல என நிரூபித்துள்ளது. அதிக கொழுப்பு சத்துகள் கொண்ட உணவுகள் அதிகமான ஆற்றலை உடலுக்கு தருவதாக இந்த ஆராய்ச்சி கூறுகிறது.

உங்களை ஆரோக்கியமாக வைக்க உதவும் 7 கொழுப்பு நிறைந்த உணவுகள் என்ன என்பதை பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சீஸ் (Cheese)

சீஸ் (Cheese)

சீஸ் ஒரு சுவையான, ஆரோக்கியமான் உணவாகும். ஒரு அவுன்ஸ் சீஸ் 27mg கொழுப்பு சத்தை வழங்குகிறது. இது அதிக அளவு கொழுப்பு சத்தாகும். ஆனாலும் இதில் வேறு சில சத்துக்களும் அடங்கியுள்ளன.

எடுத்துக்காட்டாக, ஒரு அவுன்ஸ் சீஸில் 7gm புரோட்டின் அடங்கியுள்ளது. 20% கால்சியம் உள்ளது.

இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடல் கொழுப்பு இழப்பை ஊக்குவிக்க மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், பல் குழிவுறுதலைத் தடுக்கவும் உதவுகிறது.

முட்டை

முட்டை

முட்டை உலகில் உள்ள சத்துக்களை தரும் உணவுகளில் முக்கியமான ஒன்று. இதில் அதிக அளவு கொழுப்புச் சத்து காணப்படுகிறது.

இரண்டு முட்டைகளில் மொத்தமாக 422mg அளவு கொழுப்பு உள்ளது. மேலும் இவை 13 கிராம் புரோட்டின் மற்றும் 46% செலீனியத்திற்கான RDI அளவையும், ரிபோப்லாவின், வைட்டமின் பி 12 மற்றும் கொலைன் ஆகிய சத்துக்களையும் தருகிறது.

சிலர் அதிக கொழுப்பு உள்ளது என்று அதிக சத்துக்கள் முட்டையின் மஞ்சள் கருவை தவித்து, வெள்ளை கருவை மட்டும் சாப்பிடுகிறார்கள். இது தவறானதாகும்.

முட்டையின் மஞ்சள் கருவில் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் உள்ளன. முட்டையின் வெள்ளைக்கருவில் புரோட்டின் அதிக அளவு அடங்கியுள்ளது.

கல்லீரல்

கல்லீரல்

சத்துக்களின் கூடாரமாக உள்ளது. இது விலங்குகளில் இருந்து கிடைக்கும் கொழுப்பு ஆகும்.

வைட்டமின் ஏ, வைட்டமின் பி 12, புரதம் மற்றும் இரும்பு ஆகியவை கல்லீரலில் நிரம்பியுள்ளது. இது மிக அதிகமான நபர்களால் அதிகம் சாப்பிடபடாத உணவாக உள்ளது.

ஷெல்ஃபிஷ் (Shellfish)

ஷெல்ஃபிஷ் (Shellfish)

இது சுவையான மற்றும் ஊட்டமளிக்கும் உணவாகும்.

அதிக புரதச்சத்து கொண்ட உணவாகும், இது பல ஊட்டச்சத்துக்களில் நிறைந்துள்ளது. இது நோய் அபாயத்தை குறைக்கின்றது. இதில் செலினியம் மற்றும் அயோடின் உள்ளிட்டவை அடங்கியுள்ளன.

மீன் எண்ணெய்

மீன் எண்ணெய்

செறிவூட்டப்பட்ட வடிவில் உள்ள மீன் எண்ணெய் அற்புதமான சுகாதார நன்மைகளை அளிக்கிறது.

இதில் அடங்கியுள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், இதய சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் காக்கிறது.

மீன் எண்ணெய் முடக்கு வாதம் மற்றும் மூட்டு வலி அறிகுறிகளை கட்டுப்படுத்த உதவுகிறது.

இது கேன்சருக்கும் சிறந்ததாக உள்ளது.

இறைச்சி

இறைச்சி

சிறுநீரகம் மற்றும் இதயம் போன்ற இறைச்சிகளில் பல வைட்டமின்கள் மற்றும் கனிமங்களில் நிறைந்துள்ளது. இதய இறைச்சியில் நன்மை பயக்கும் CoQ10 அதிகமாக உள்ளது.

மத்தி

மத்தி

மத்தியில் அதிக அளவு சத்துக்கள் அடங்கியுள்ளன. இதில் ஒமேகா -3 மிக அதிகமாக உள்ளது. இது இதயத்தையும் மூளை ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

7 High Cholesterol Foods foods made you healthy

here are the some high Cholesterol foods for stay healthy
Story first published: Monday, May 8, 2017, 17:00 [IST]
Subscribe Newsletter