ஆரோக்கியமான முறையில் விரதம் இருப்பது எப்படி?

Posted By:
Subscribe to Boldsky

விரதம் என்பது பட்டினி கிடப்பது அல்ல. உங்கள் உடலை ஆரோக்கிய நிலைக்கு திரும்ப கொண்டு வருவதற்கான சிறந்த வழி தான் விரதம் இருப்பது. அனைத்து மதங்களிலும் விரதம் பின்பற்ற கூறியிருப்பது இந்த காரணத்திற்காக தான்.

வாரம் ஒரு முறையாவது நீராகாரங்கள் உட்கொள்வது அல்லது கடின உணவுகளை தவிர்த்து உணவருந்துவதால் உடல்நிலை மேலோங்குவது மட்டுமின்றி உடல் எடையையும் சீரான முறையில் பாதுகாக்க முடியும் என்று கூறப்படுகிறது.

இனி, ஆரோக்கியமான முறையில் விரதம் இருப்பது எப்படி மற்றும் அதற்கான டிப்ஸ் குறித்து பார்க்கலாம்.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பட்டினி கிடக்க வேண்டாம்

பட்டினி கிடக்க வேண்டாம்

சிலர் விரதம் இருக்கிறேன் என்று முழு பட்டினியாக இருப்பார்கள், இது தவறு. நமது உடலில் இரத்த சர்க்கரை அளவு மற்றும் உடலில் நீர்வறட்சி ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். எனவே, சிறு சிறு இடைவேளைகளில் நீர், பழரசம் அல்லது பழங்கள் சாப்பிட வேண்டியது அவசியம்.

நீர் பானங்கள்

நீர் பானங்கள்

மேல் கூறியவாறு உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் இருக்க நீர், இளநீர், எலுமிச்சை சாறு, கிரீன் டீ மற்று மோர் போன்ற நீராகாரங்கள் உட்கொள்ளலாம். இவை உடல் சக்தியை வல்லமை கொண்டவை ஆகும்.

நார்ச்சத்து உணவுகள்

நார்ச்சத்து உணவுகள்

முடிந்த வரை விரதம் இருக்கும் போது நார்ச்சத்து உள்ள உணவுகளை உட்கொள்ளுதல் நல்லது. இது செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க உதவும்.

வாயு உணவுகள்

வாயு உணவுகள்

உருளைக்கிழங்கு போன்ற வாயு அதிகமுள்ள உணவுகளை விரதம் இருக்கும் போது சேர்த்துக் கொள்ள வேண்டாம். இது வயிறு சார்ந்த பிரச்சனைகள் அதிகரிக்க காரணமாக இருக்கிறது.

கொழுப்பு நீக்கப்பட்ட பால்

கொழுப்பு நீக்கப்பட்ட பால்

விரதம் இருக்கும் போது பெரும்பாலும் அனைவரும் அதிகம் பால் குடிப்பார்கள். பால் பருகும் போது கொழுப்பு நீக்கப்பட்ட பாலை மட்டும் தேர்வு செய்யுங்கள். அதிகளவில் கொழுப்புச்சத்துள்ள பால் பருகுவது வயிற்று உபாதைகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் இருக்கின்றன.

தேன் சிறந்தது

தேன் சிறந்தது

விரதம் இருக்கும் சமயத்தில் டீ, பால் போன்ற பானங்களில் சர்கரைக்கு பதிலாக தேனை பயன்படுத்துவது நல்லது. மற்ற நாட்களிலும் கூட நீங்கள் இதையே பின்பற்றலாம். இது உடலுக்கு மிகவும் நல்லது. உடல் எடை மற்றும் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்க இது உதவுகிறது.

நொறுக்குத்தீனி வேண்டாம்

நொறுக்குத்தீனி வேண்டாம்

சிலர் விரதம் இருக்கும் நாட்களில் கண்ட நொறுக்கு தீனிகளை உட்கொள்ள முயல்வார்கள். நொறுக்குத்தீனி உட்கொள்வதற்கு பதிலாக நட்ஸ் உணவுகளை தேர்வு செய்யலாம்.இதிலும் கூட உப்பு சேர்க்காது, வறுக்காமல் தயாரிக்கப்பட உணவுகளை தான் உட்கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tips To Follow To Make Fasting Healthier

Do you know about the tips to follow to make fasting healthier? read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter