For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொத்துற மாதிரி தலைவலிக்குதா? அது எதோட அறிகுறி? உடனே சரியாக கை வைத்தியம் என்ன?

|

தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்று ஒரு பழமொழி உண்டு. அனுபவிக்காத பலர் தலைவலிதானே என்று அலட்சியமாக கூறுவர். ஆனால், உடல் வேதனையை மட்டுமல்ல மனவேதனையையும் கொடுக்குமளவுக்கு தீவிர தலைவலிகள் உள்ளன.

'தற்கொலை தலைவலி' - செத்துப் போய் விடலாமா என்ற அளவுக்கு வாழ்க்கையை வெறுக்க வைப்பது கிளஸ்டர் தலைவலி எனப்படும் கொத்துத் தலைவலி ஆகும். இதனுடைய முக்கியமான தாக்குதல், கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமான, எரிவது போன்ற வேதனை கொடுக்கும் வலியாகும். முகத்தின் ஒரு பக்கமாக வலியை கொடுக்கும் இவ்வகை தலைவலி, பற்பல இடங்களில் பரவி வலியை கொடுப்பதால் கொத்துத் தலைவலி என்று அழைக்கப்படுகிறது.

வலியின் தீவிரத்தன்மை மற்றும் தாக்கும் வேளைகள் ஆகியவற்றில் மைக்ரேன் என்னும் ஒற்றைத் தலைவலியிலிருந்து கிளஸ்டர் என்னும் கொத்துத் தலைவலி வேறுபடுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தற்கொலை தலைவலி

தற்கொலை தலைவலி

முகத்தின் உணர்ச்சி மற்றும் மெல்லுதல், கடித்தல் ஆகிய செயல்பாடுகளுக்குக் காரணமான டிரைஜெமினல் நரம்போடு தொடர்புடையது கொத்துத் தலைவலி. நாள் முழுவதும் அல்லது வாரம் மற்றும் பல வாரங்களுக்கு அல்லது மாதங்களுக்கு தொடர்ந்து வருவதால் இப்பெயரால் அழைக்கப்படுகிறது.

இந்தத் தலைவலி பெண்களை விட ஐந்து முதல் ஆறு மடங்கு ஆண்களை அதிகம் தாக்கும். அதிலும் 20 முதல் 40 வயதுடைய ஆண்களை அதிகம் தாக்குகிறது. மொத்த மக்கள் தொகையில் 0.1 விழுக்காட்டினர் கொத்துத் தலைவலியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு பரம்பரையாக இந்நோய் தாக்குகிறது.

இத்தலைவலி வருவதற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. முழுமையான சிகிச்சை அளிப்பதும், இது வராமல் தடுப்பதற்கான முறையை கூறுவதும் கடினம். மூளையின் அடிப்பகுதியில் இருக்கும் ஹார்மோன்களை சுரக்கக்கூடிய ஹைபோதலாமஸின் ஒரு பகுதியே இத்தலைவலி தாக்குவதற்கு காரணமாகிறது என்று கூறப்படுகிறது. சில பொருள்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் சூழல் ஆகியவை இத்தலைவலியை கொண்டு வருகின்றன.

ஒரே நாள்ல உடம்புல இருக்கற கழிவெல்லாம் வெளியேறணுமா? இந்த சூப் குடிங்க போதும்...

கொத்துத் தலைவலி தாக்குதல்

கொத்துத் தலைவலி தாக்குதல்

ஒவ்வொருவரையும் ஒவ்வொருவிதமாக தாக்கக்கூடியது இத்தலைவலி. நடு இரவில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கும்போது இது எழுப்பி விட்டுவிடும். பலருக்கு ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் இது தாக்குகிறது;வேறு சிலரை தினமும் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் தாக்குகிறது. சிலருக்கு ஆண்டுதோறும் திருவிழாபோல குறிப்பிட்ட காலத்தில் கொத்துத் தலைவலியின் தாக்குதல் நேரும். சிலருக்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட பருவகாலத்தில் தலைவலி வரும். ஆனால் நபருக்கு நபர் இதன் தாக்கும் தன்மை வேறுபடும்.

ஒருமுறை கொத்துத் தலைவலி தாக்க ஆரம்பித்தால், தாக்குதல் பல நாள்களுக்கு அல்லது வாரங்களுக்கு அல்லது மாதங்களுக்குத் தொடரக்கூடும். தாக்குதல் முடிந்த பிறகு சில மாதங்கள் அல்லது ஆண்டுகளுக்குக் கூட மறு தாக்குதல் வராமல் இருக்கலாம்.

இந்நோயாமல் தாக்கப்படுவோரில் 10 முதல் 20 விழுக்காட்டினருக்கு இது நாள்பட்ட நோயாக உள்ளது. வாழ்நாள் முழுவதும் அல்லது மாதக்கணக்கில் நீடிப்பது மட்டுமல்ல; இதன் தாக்கம் மற்றும் அறிகுறிகள் மாறவும் நாள் பிடிக்கும்.

தூண்டும் காரணிகள்

தூண்டும் காரணிகள்

கிளஸ்டர் என்னும் கொத்துத் தலைவலியை தூண்டும் காரணிகள் இன்னும் சரியாக அடையாளம் காணப்படவில்லை. செரோடோனின் மற்றும் ஹிஸ்டமின் ஆகிய உயிரிவேதிப்பொருள்கள் திடீரென சுரக்கப்படுவதால் டிரைஜெமினல் நரம்பு தூண்டப்பெற்று இத்தலைவலி வரலாம் என்று கருதப்படுகிறது.

பொதுவாக, அதிக உடலுழைப்பு, குறிப்பாக அதிக வெப்பமான காலத்தில் உடற்பயிற்சி செய்தல், வெப்பம் மற்றும் உயர் வெப்பநிலை கொண்ட சூரிய ஒளி உள்ளிட்ட பிரகாசமான ஒளி, மது, புகைப்பிடித்தல், மலையேறுதல் மற்றும் மலைபயணத்தில் உயரமான இடங்களுக்குச் செல்லுதல், சிப்பி, கிளிஞ்சல் மற்றும் நண்டு வகையை சார்ந்த உயிரினங்கள், புகையில் வாட்டப்பட்ட மீன், பதப்படுத்தப்பட்ட அடைக்கப்பட்ட இறைச்சி, நைட்ரோகிளிசரின் உள்ளிட்ட சில மருந்துகள், மரபணுக்கள் ஆகியவை கொத்துத் தலைவலியை தூண்டிவிடக்கூடியவை.

அறிகுறிகள்

அறிகுறிகள்

ஒரு கண்ணைச் சுற்றி எழும்பும் தீவிரமான வலி, நெற்றிக்கும் பின்னர் கன்னங்களுக்கும் அதைத் தொடர்ந்து காதுகளுக்கு முன்பு இருக்கும் மண்டையோட்டு பொருத்துபுள்ளிக்கும் பின்னர் மேற்புற ஈறுகளுக்கும் பரவும். வலி முகத்தின் ஒரு பக்கமாகவே இருக்கும்.

மூக்கடைப்பு அல்லது மூக்கிலிருந்து நீர் ஒழுகுதல்

பதற்றம்

நெற்றியில் அதிக வியர்வை

ஒரு கண்ணைச் சுற்றி துளைத்தெடுப்பதுபோன்ற வலி. பாதிக்கப்பட்ட கண்ணில் கண்ணீர் அல்லது இரத்தம் காணப்படும். அந்தக் கண்ணின் இமை தொய்ந்துபோகும்.

முகத்தின் எப்பக்கத்தில் தலைவலி பாதித்துள்ளதோ அப்பக்கம் சிவந்து கன்றிப்போய் காணப்படும்.

ஒரு நாளில் ஒன்று முதல் மூன்று முறை வரைக்கும் தீவிரமான வலி தாக்கும். ஒரு முறை வரும் வலி கால் மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் வரை இருக்கும். இதுபோன்ற தலைவலி ஆறு முதல் எட்டு வாரங்களுக்கு தொடர்ந்து வரும்.

வெளிச்சத்தை பார்க்க இயலாத கூச்சம்

உறுதி செய்தல்

உறுதி செய்தல்

நீங்கள் அனுபவிக்கும் வலியின் தன்மை, தாக்குதலின் தன்மை, அறிகுறிகள் ஆகியவற்றின் அடிப்படையில் மருத்துவர் இது குறித்து ஆராய்வார். உங்கள் கண்மணிகள் மற்றும் இமைகளில் வேறுபாடு தெரிகிறதா என்பதை பரிசோதிப்பார்..

தலைவலி எவ்வெப்போது வருகிறது, எவ்வளவு தீவிரமாக இருக்கிறது, எங்கு வலிக்கிறது என்பதுபோன்ற தகவல்களை குறித்து வைப்பது அது எவ்வகை தலைவலி என்று தீர்மானிக்க உதவும். ஆகவே, உங்களை தாக்கும் தலைவலி குறித்ததான விவரங்களை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

மகனுக்கு பசிக்குமென்று சமைத்து வைத்துவிட்டு தாய் இறந்து போன கொடூரம்...

கொத்துத் தலைவலிக்கான சிகிச்சை

கொத்துத் தலைவலிக்கான சிகிச்சை

கொத்துத் தலைவலியை வலி நிவாரண மருந்துகள் மூலம் குணப்படுத்த இயலாது.

இவ்வகை தலைவலி வருவதற்கு காரணங்களான மது அருந்துதல், மனஅழுத்தம் ஏற்படுதல், உயர்ந்த இடங்களுக்குச் செல்லுதல் மற்றும் போதுமான தூக்கமின்மை ஆகியவற்றை தவிர்த்தால் தாக்குதல் நேரும் வாய்ப்பை குறைக்க இயலும்.

மருத்துவர் உங்களுக்கு கீழ்க்காணும் சிகிச்சைகளை பரிந்துரைக்கக் கூடும்.

சுமட்ரிப்டன் ஊசி: ஒற்றைத் தலைவலிக்கான ஊசி இது. கை மற்றும் தொடையின் மேற்பகுதி தோலில் இது போடப்படும். தசை அல்லது நரம்புகளில் போடப்படாது. வலி சமிக்ஞைகளை தடுக்கும் மூளையிலுள்ள இரத்தகுழாய்களை இந்த ஊசி சுருக்கும். மருத்துவ மேற்பார்வையில் மட்டுமே இது கொடுக்கப்பட வேண்டும்.

ஆக்ஸிஜன் சிகிச்சை

ஆக்ஸிஜன் சிகிச்சை

சுத்தமான வளிவாயுவை சுவாசிப்பதன் மூலம் கொத்துத் தலைவலியின் தீவிரத்தை குறைக்கலாம். நிமிடத்திற்கு 7 முதல் 10 லிட்டர் ஆக்ஸிஜனை வெளியிடக்கூடிய ஆக்ஸிஜன் கவசம் மூலம் கால் மணி நேரத்திற்கு மட்டும் வளிவாயு அளிக்கப்படலாம். அடர்த்தியான ஆக்ஸிஜன் நுரையீரல் திசுக்களில் காயம் ஏற்படுத்தக்கூடியது மற்றும் நுரையீரலுக்குப் பாதிப்பை அளிக்கக்கூடியது.

ஆகவே, ஒரு நாளில் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே குறைந்த காலகட்டத்திற்கு அடர்த்தி நிறைந்த ஆக்ஸிஜன் தகுதி வாய்ந்த மருத்துவரால் அளிக்கப்படலாம். நாசிக்கான தெளிப்பான்: நாஸல் ஸ்பிரே மூலம் லிடோகெயின் போன்ற மருந்துகளை பயன்படுத்துவது தீவிர வலியிலிருந்து விடுதலையை அளிக்கும்.

எதிர்கொள்ள சில குறிப்புகள்

எதிர்கொள்ள சில குறிப்புகள்

மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளோடு வாழ்வியல் மாற்றம், உணவு மற்றும் தினசரி நடவடிக்கைகளில் மாற்றத்தை கொண்டு வருவதும் கொத்துத் தலைவலியை எதிர்கொள்ள உதவும். இத்தலைவலிக்கு வீட்டில் அளிக்கக்கூடிய சில சிகிச்சைகள்:

குளிர் அல்லது வெப்ப ஒத்தடம்

குளிர் அல்லது வெப்ப ஒத்தடம்

பனிக்கட்டி (ஐஸ்) தரும் குளிர்ச்சி, வலியின் தீவிரத்தை மரத்துப்போக செய்யும். ஆகவே, ஐஸ்கட்டி ஒத்தடம் சிறந்த தீர்வை தரும். உறைந்துபோன நிலையிலுள்ள காய்கறிகள் அல்லது ஐஸ்கட்டிகளை துணி ஒன்றில் கட்டி, கழுத்தின் பின்பகுதியில் ஒத்தடம் அளிக்கவேண்டும். குளிர்ந்த தண்ணீரில் துணியை முக்கி உங்கள் தலையில் ஐந்து நிமிடங்களுக்கு போடலாம். தேவைப்படும் நேரம் வரை இதை மறுபடி மறுபடி செய்யலாம்.

வெப்பமும் தசை முறுக்கத்தை தளர்த்தி வலியை குறைக்கக்கூடும். சுடுநீர் கழுத்தின் மேல் விழும்படி குளிக்கலாம். இது கழுத்து தசைகளை தளர்த்தும். கழுத்தின் பின் பகுதியில் பருத்தி துணி ஒன்றை போட்டு, அதன்மேல் சுடுநீர் நிறைந்த வாட்டர் பேக்கினை 10 முதல் 15 நிமிட நேரம் வரை வைக்கலாம். இதில் எந்த முறை உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் பயனுள்ளதாக தோன்றுகிறதோ அதை செய்யலாம்.

காது கேட்காதவர்களுக்காக பேசிப் பேசியே கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பெண்

அக்குபிரசர் என்னும் தொடுமுறை சிகிச்சை

அக்குபிரசர் என்னும் தொடுமுறை சிகிச்சை

அக்குபிரசர் என்பது சீன வைத்திய முறையாகும். விரல்கள் மற்றும் கைகளில் அக்கு புள்ளிகள் என்று குறிப்பிடப்படும் இடங்களில் அழுத்தம் கொடுத்து இச்சிகிச்சை செய்யப்படுகிறது. இப்புள்ளிகளை தூண்டுவதன் மூலம வலியை குறைப்பதோடு மற்றும் பல்வேறு உடல்நல குறைவுகளையும் தீர்க்க முடியும். நாள்பட்ட தலைவலியால் அவதிப்படும் மக்களுக்கு மாற்றுமுறை மருத்துவமான அக்குபிரசர் என்னும் தொடுமுறை சிகிச்சையின் பலன் குறித்து 2014ம் ஆண்டில் வலி மேலாண்மை குறித்த ஆய்வு முடிவு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாள்பட்ட தலைவலி மற்றும் தசையை தளர்த்துதல் குறித்த சிகிச்சை குறித்து 2010ம் ஆண்டில் ஒரு மாத காலம் செய்யப்பட்ட ஆய்வின் முடிவு, அக்குபிரசர் சிகிச்சையின் பலன் என்று சீன மருத்துவம் குறித்த அமெரிக்க ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. இச்சிகிச்சை அதற்குரிய தொழில்முறை வல்லுநரின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்.

மசாஜ்

மசாஜ்

உங்கள் முதல் இரண்டு விரல்களையும் பயன்படுத்தி தலையில் வட்டவடிவமான பாதையில் மெதுவாக அழுத்தி மசாஜ் செய்யவும். மண்டையோட்டின் அடியில் இருக்கும் வலியுடன் தொடர்புடைய புள்ளிகளையும், கண்களில் ஓரங்களில் உள்ளவற்றையும், புருவங்களின் நடுவில் இருப்பவற்றையும் முறையாக அழுத்துவதால் வலியிலிருந்து சிறிது நிவாரணம் கிடைக்கும்.

தலையில் மசாஜ் செய்வதால் செரோடோனின் செயல்பாடு அதிகரிக்கும். இதன் மூலம் வலி தாக்கும் வேளைகளும், அறிகுறிகளும் குறையும். தலைவலியால் ஏற்படும் வலி அனுப்பும் சமிக்ஞைகள் மூளையை அடைந்திடாதபடி தடுக்கப்படும்.

இரண்டு மேசைக்கரண்டி அளவு நல்லெண்ணெயை சூடாக்கி, ஏலக்காய் மற்றும் இலவங்கப்பட்டை இரண்டின் பொடியையும் ½ தேக்கரண்டி அளவு சேர்த்து அதை நெற்றியின்மேல் தடவி மசாஜ் செய்யலாம். மசாஜ் செய்த பின்னர் சில மணி நேரம் அந்த எண்ணெயை அப்படியே விட்டு வைக்கவும்.

வர்ம மருத்துவ முறை

வர்ம மருத்துவ முறை

கிரியோபிரக்டிக் தெரபி என்பது வர்ம கலை போன்றதாகும். தலைவலி எங்கிருந்து ஆரம்பிக்கிறதோ அந்தப் பகுதிகளில் வர்ம மருத்துவ முறையை பயன்படுத்துவதன் மூலம் கொடிய கொத்துத் தலைவலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.

எலும்புகள், மூட்டுகள் மற்றும் முதுகு தண்டின் கழுத்துப்பகுதி தசைகளில் உள்ள இறுக்கத்தை வர்மகலை நிபுணர் தமது கைகளை பயன்படுத்தி தளர்த்துகிறார்.

தசைகளை பல்வேறு திசைகளில் நீட்டுதல் அல்லது இழுத்தல், துல்லியமாக குறுகிய நேரம் திருக்கி அசைத்தல், மூட்டுகளை வெவ்வேறு நிலைகளில் அசைத்தல், முதுகுத் தண்டு பகுதியில் விசையை செலுத்துதல் போன்ற வழிமுறைகளில் வர்ம சிகிச்சை அளிக்கப்படும்.

இந்தச் சிகிச்சை வலிகொடுக்காது. இச்சிகிச்சையின்போது ஏதேனும் அசௌகரியத்தை உணர்ந்தால் அதை உடனடியாக சிகிச்சையளிப்பவரிடம் தெரிவிக்க வேண்டும்.

எண்ணெய் சிகிச்சை

எண்ணெய் சிகிச்சை

உடலில் சிகிச்சைக்கென பூசக்கூடிய எண்ணெய்களுக்கு உடலில் ஏற்படும் அழற்சியை தடுக்கும் இயல்பு உள்ளது. அது நரம்புகளுக்கு இதமளித்து தலைவலியின் வேதனையை அமர்த்தும். ஆனால் எக்காரணம் கொண்டும் இந்த எண்ணெய்களை வாய் வழியே உட்கொண்டு விடக்கூடாது.

மருவு எண்ணெய்

மருவு எண்ணெய்

மார்ஜோரம் எண்ணெய் என்று அழைக்கப்படும் மருவு எண்ணெய், மருவு என்ற வாசனை தாவரத்தின் இலைகளை உலர்த்தி அவற்றிலிருந்து எடுக்கப்படுகிறது. வலி நிவாரணம் அளிக்கக்கூடிய தன்மை இதற்கு உண்டு. தலையின் இருபுறமும் காதுகளுக்கு முன்பாக உள்ள மண்டையோட்டு பகுதிகள் பொருந்தும் இடத்தில் இந்த எண்ணெயை கொண்டு மசாஜ் செய்வதால் இரத்த ஓட்டம் உந்தப்படும். மனதின் அழுத்தத்தையும் கலக்கத்தையும் குறைத்து சாந்தப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு. இந்த எண்ணெயை குளிக்கும் தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம் அல்லது தலையில் மசாஜ் செய்யவும் உபயோகிக்கலாம்.

குடிச்சிட்டு இருமினதும் தொண்டையில இருந்த கட்டி வெளில வந்து விழுந்துடுச்சாம்... அப்புறம்?

ரோஸ்மேரி எண்ணெய்

ரோஸ்மேரி எண்ணெய்

ரோஸ்மேரி எண்ணெயில் ரோஸ்மேரியானிக் அமிலம் உள்ளது. இதில் உயிரிசெயலாற்றல் இயல்பு உள்ளதால் குணமாக்கக்கூடிய ஆற்றலும் உடல் அழற்சியை தடுக்கும் இயல்பும் நிறைந்துள்ளது. ஆகவே தலைவலியிலிருந்து நிவாரணம் அளிக்கும் தன்மை ரோஸ்மேரி எண்ணெய்க்கு உள்ளது.

1 மேசைக்கரண்டி அளவு சாதாரண எண்ணெய் எடுத்து அதில் சில துளிகள் ரோஸ்மேரி எண்ணெய் கலந்து அதைக் கொண்டு மண்டையோட்டு பொருத்து புள்ளிகளில் மசாஜ் செய்யலாம். வலிப்பு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள் ரோஸ்மேரி எண்ணெயை சிகிச்சைக்கு பயன்படுத்தக்கூடாது.

மிளகுக் கீரை எண்ணெய்

மிளகுக் கீரை எண்ணெய்

பெப்பர்மிண்ட் என்னும் புதினாவின் ஒரு வகையான மிளகுக் கீரை எண்ணெயில் மெந்தால் அதிகம் உள்ளது. கொத்துத் தலைவலிக்குக் காரணமான இரத்த நாள அடைப்புகளை நீக்கக்கூடிய ஆற்றல் மெந்தாலுக்கு இருப்பதால் மிளகுக்கீரை எண்ணெய் தலைவலியை போக்குகிறது.

எத்தனாலில் 10 விழுக்காடு மிளகுக்கீரை எண்ணெயை கலந்து பயன்படுத்தினால் தலைவலி குணமாகும் என்று 2016ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. இதை ஆறு வயதுக்கு மேற்பட்ட சிறுவர் முதல் பெரியவர்கள் வரைக்கும் பயன்படுத்தி பலன் பெறலாம்.

1 மேசைக்கரண்டி அளவு வாதுமை எனப்படும் பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயில் 3 துளி மிளகுக்கீரை எண்ணெய் கலந்து காதுகளின் அருகிலுள்ள மண்டையோட்டு சந்திப்பு புள்ளிகளில் தடவலாம். நெற்றியில் மிளகுக்கீரையை வைத்துக் கொள்ளலாம்.

சிறு பாத்திரத்தில் கொதிநீரை வைத்து அதில் சில துளிகள் மிளகுக்கீரை எண்ணெயை ஊற்ற வேண்டும். அதிலிருந்து வெளிப்படும் நீராவியை சிறிது நேரம் சுவாசித்தால் கொத்துத் தலைவலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.

லாவெண்டர் (சுகந்தி எண்ணெய்)

லாவெண்டர் (சுகந்தி எண்ணெய்)

ஒரு ட்ஷ்யூ தாளில் சில துளிகள் லாவெண்டர் எண்ணெய் தெளித்து அதை நாள் முழுவதும் முகர்ந்து வரலாம். லாவெண்டர் எண்ணெய்க்கு வலியை போக்கும் குணம் உள்ளது என்று மாற்று மருத்துவம் குறித்து 2013ம் செய்யப்பட்ட ஓர் ஆய்வின் அறிக்கை கூறுகிறது.

இரண்டு கப் கொதிநீருடன் இரண்டு துளிகள் சுகந்தி எண்ணெய் ஊற்றவேண்டும். வெளிவரும் நீராவியை சுவாசித்தால் கொத்துத் தலைவலியிலிருந்து குணம் கிடைக்கும்.

பாதாம் எண்ணெய் (வாதுமை) அல்லது ஆலிவ் எண்ணெய் 1 மேசைக்கரண்டி அளவு எடுத்து அதனுடன் இரண்டு அல்லது மூன்று துளிகள் லாவெண்டர் என்னும் சுகந்தி எண்ணெய் கலந்து நெற்றியில் மசாஜ் செய்து வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.

போதுமான நீர் அருந்துங்கள்

போதுமான நீர் அருந்துங்கள்

குறைந்த அளவு நீர் அருந்துதல் அல்லது போதுமான அளவு அருந்தாமல் இருத்தல் ஆகியவையும் தலைவலி வர காரணமாகும். உடலுக்குத் தேவைப்படும் அளவு நீர் அருந்தாவிட்டால், உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டு தலைவலியை கொண்டு வரும்.

மருத்துவ முறை செயல்பாடுகளை மதிப்பிடும் ஆய்வு ஒன்று 2015ம் ஆண்டு வெளியிடப்பட்டது. நாள்பட்ட நீர்ச்சத்து குறையிழப்பு தலைவலிகளை கொண்டு வரக்கூடும் என்று அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

அவ்வகையில் வரும் தலைவலிகளை போதுமான நீர் அருந்துவதன் மூலம் தடுக்கலாம். ஒற்றைத் தலைவலி, கொத்துத் தலைவலி என்று எதனால் பாதிக்கப்பட்டாலும் நீர் அருந்தும் அளவை அதிகரியுங்கள். நாளொன்றுக்கு 8 தம்ளர் நீர் அருந்துவதுடன், தேங்காய் தண்ணீர், இளநீர், எலுமிச்சை சாறு கலந்த நீர் மற்றும் உப்பு சர்க்கரை கரைசல் என்று நீர்ச்சத்து இழப்பை தவிர்க்கக்கூடியவற்றை அருந்துங்கள். தர்பூசணி, வெள்ளரி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

தவிர்க்க வேண்டிய உணவுகள்

சிலருக்கு குறிப்பிட்ட உணவு வகைகள் தலைவலி வருவதற்குக் காரணமாக அமைந்து விடும். எந்த உணவு உங்களுக்குத் தலைவலியை கொண்டு வருகிறது என்பதை தெரிந்து கொண்டு அவற்றை தவிர்த்து விடுவது நல்லது.

மதுபானங்கள், செயற்கை இனிப்பூட்டிகள், எம்எஸ்ஜி என்னும் மோனோசோடியம் குளூகோமேட் அடங்கிய உணவுகளை தவிர்த்தல் (குளூடமிக் அமிலத்தின் சோடியம் உப்பாகிய இது தக்காளி, திராட்சை, சீஸ், காளான் போன்றவற்றில் உள்ளது).

நைட்ரேட் அதிகம் காணப்படும் ஒயின், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, நாள்பட்ட சீஸ் மற்றும் சில மருந்துகள், காஃபைன் காணப்படும் தேநீர், காஃபி மற்றும்கோலா, பால் சார்ந்த தயாரிப்புகள், சாக்லேட்டுகள், இறைச்சி, கோதுமை, நண்டு வகை கடல் உணவுகள், நட்ஸ் என்னும் கொட்டை வகைகள், வேர்க்கடலை, வாழைப்பழம், வெங்காயம், முட்டை மற்றும் சிட்ரஸ் வகை பழங்கள். இவற்றை உண்பதை தவிர்த்தால் தலைவலி தூண்டப்படாது.

தலைவலியை தடுக்கும் யோகாசனம்

தலைவலியை தடுக்கும் யோகாசனம்

நாள்பட்ட வலிகளை தீர்க்கும் மாற்றுமுறை சிகிச்சையாக யோகாசனம் காலங்காலமாக விளங்கி வருகிறது. உடலை பல்வேறு விதங்களில் வளைத்து அமர்தல் மற்றும் ஆழ்ந்த மூச்சு பயிற்சி உள்ளிட்ட உடல்நலத்தை மேம்படுத்தும் பயிற்சிகள் யோகாசனத்தில் உள்ளன.

தலைவலியிலிருந்து நிவாரணம் பெறுவதற்காக யோகாசனம் செய்வதால் பக்க விளைவுகள் எதுவும் இருக்காது. அடிக்கடி மற்றும் தீவிரமாக தாக்கும் தலைவலியிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு யோகாசனத்தை துணை சிகிச்சையாக பயன்படுத்தவேண்டும் என்று உடலியல் அறிவியல் சிகிச்சை குறித்து 2015ம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஆய்வுக் குறிப்பு கூறுகிறது.

மனைவியின் பிறப்புறுப்பில் பைக் கைப்பிடியை சொருகிய கணவன்... அப்புறம் என்னாச்சு?

எளிய யோகாசனங்கள்

எளிய யோகாசனங்கள்

மர்ஜரியாசனம் (பூனை ஆசனம்)

பக்ஷிமோத்தாசனம்

அதோ முக ஸ்வனாசனம்

சேது பந்தாசனம்

சிசுவாசனம்

பத்மாசனம்

ஹஸ்தபாடாசனம்

சவாசனம்

புகை பிடிக்காதீர்

புகை பிடிக்காதீர்

தலைவலியை கொண்டு வரும் முக்கிய காரணிகளுள் ஒன்று புகைப்பதாகும். மற்றவர்கள் புகைப்பதை சுவாசிக்க நேருபவர்களுக்கும் தீமை விளைகிறது. அவர்களது இரத்த நாளங்கள் சுருங்குவதால் தலைவலி பிறக்கிறது.

கொத்துத் தலைவலியால் அவதிப்படுவோர், புகை பிடிக்கும் பழக்கமுடையவராக இருந்தால் அதை விட்டுவிட வேண்டும். மற்றவர்கள் புகை பிடிக்கும் இடத்தில் இருப்பதையும் தவிர்க்க வேண்டும். புகைக்கு விலகி இருப்பது தலைவலி தாக்குதல்களை குறைக்கும்.

சேர்க்க வேண்டிய உணவுகள்

சேர்க்க வேண்டிய உணவுகள்

சில குறிப்பிட்ட தாதுகள், சத்துகள் உடலில் சேரத்தக்க உணவுகளை ஒழுங்காக சாப்பிடுவதன் மூலம் தலைவலிகளை தவிர்க்கலாம்.

மெக்னீசியம் தாது அடங்கிய உணவு

மெக்னீசியம் தாது அடங்கிய உணவு

வளர்சிதை மாற்றங்கள் மற்றும் நரம்பு மண்டல செயல்பாடுகளை சீராக்குவதற்கு மெக்னீசியம் தேவையானதாகும். நாளொன்றுக்கு 300 முதல் 400 மில்லி கிராம் மெக்னீசியம் நம் உடலில் சேர வேண்டும். மெக்னீசியம் குறைவதால் ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட பல்வேறு தலைவலிகள் வருகின்றன. ஊட்டச்சத்துகளை குறித்து 2015ம் ஆண்டு செய்யப்பட்ட ஆய்வு ஒன்று, மெக்னீசியம் குறைபாடு பல்வேறு நோய்களோடு தொடர்புடையதாயிருப்பதை கண்டுபிடித்துள்ளது.

எள், சூரியகாந்தி விதை, வாதுமை (பாதாம்), ஓட்ஸ், முட்டை, வேர்க்கடலை வெண்ணெய் மற்றும் பால் ஆகியவற்றில் மெக்னீசியம் அதிக அளவில் இருப்பதால் இவற்றை அதிகமாக சாப்பிடுவதால் தலைவலியிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். அதேவேளையில் மெக்னீசியம் துணை உணவுகளை சாப்பிடுவது செரிமானத்தை பாதிக்கும் வாய்ப்பு இருப்பதால், மருத்துவரை ஆலோசித்துக் கொள்ளவும்.

மெலட்டோனின்

மெலட்டோனின்

சரியானபடி தூங்கி எழும்புதல் மற்றும் உடலில் ஹார்மோன்களின் அளவை பாதுகாத்தல் ஆகிய பணிகளை ஒழுங்குபடுத்தக்கூடிய ஹார்மோனின் பெயர் மெலட்டோனின். போதுமான உறக்கம், உறக்கத்தில் பிரச்னை ஆகிய இரண்டுக்கும் கொத்துத் தலைவலிக்கும் தொடர்புள்ளது. கொத்துத் தலைவலியால் அவதிப்படுவோரை பரிசோதித்ததில் சிலருக்கு மெலட்டோனின் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.

மெலட்டோனின் சீரான உறக்கத்தை தரும். தூக்கத்தில் பிரச்னை உள்ளவர்களுக்கு மெலட்டோனின் துணை உணவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

நன்றாக உறங்கினால் இரவில் தலைவலி வருவதை தவிர்க்கும் வாய்ப்பும் உள்ளது. கொத்துத் தலைவலி ஒருவரை தாக்குவதற்கு முன்பாகவே அவரது மெலட்டோனின் ஹார்மோன் அளவை சரி செய்து கொண்டால் மட்டும் இப்பிரச்னையை தவிர்க்க இயலும். கொத்துத் தலைவலிக்காக சிகிச்சை பெறுவோர் மெலட்டோனின் துணை உணவுகளை எடுத்துக் கொள்வது பயன் தரும்.

கல்யாணத்துக்கு முன்னாடியே கர்ப்பமான பத்து நடிகைகள் யார் யார் தெரியுமா?

சிவப்பு மிளகாய்

சிவப்பு மிளகாய்

இரத்த ஓட்டத்தை தூண்டக்கூடிய காப்ஸாய்ஸின் என்ற பொருள் சிவப்பு மிளகாயில் உள்ளது. இரத்த ஓட்டம் தூண்டப்படுவதால் தலைவலி தரும் வேதனையிலிருந்து நிவாரணம் கிடைக்கும். தலைவலியுடன் தொடர்புடைய உடல் அழற்சியை மட்டுப்படுத்தவும் காப்ஸாய்ஸின் உதவுகிறது. காப்ஸாய்ஸின் அடங்கியுள்ள துணை உணவுகளை மருத்துவரின் ஆலோசனையின்பேரில் எடுத்துக்கொள்ளலாம்.

½ முதல் 1 தேக்கரண்டி மிளகாய் தூளுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு ½ தேக்கரண்டி தேன் ஆகியவற்றை 1 கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால் கொத்துத் தலைவலியின் வேதனை சற்று குறையும்.

வைட்டமின் துணை உணவுகள்

வைட்டமின் துணை உணவுகள்

கொத்துத் தலைவலி பாதிப்புள்ளோரில் 80 விழுக்காட்டினருக்கு பருவநிலை மாற்றம் நோயின் தாக்குதலை தூண்டுகிறது என்பது தெரிய வந்துள்ளது. சூரிய கதிர்கள் அதிகம் கிடைக்காத காலநிலைகளில் வைட்டமின் டி உடலுக்குப் போதுமான அளவு கிடைக்காது. வைட்டமின் டி குறைவு, நாள்பட்ட தலைவலி மற்றும் கொத்துத் தலைவலி ஆகியவற்றுக்கு காரணமாவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

உடலில் வைட்டமின்கள் டி மற்றும் பி2 ஆகியவற்றின் அளவுகளை பரிசோதித்து, அவை குறைவாக இருக்கும் பட்சத்தில் மருத்துவரின் ஆலோசனையின்பேரில் துணை உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

வைட்டமின் டி, பால், முட்டை, சால்மன், டுனா மற்றும் மாக்கெரல் போன்ற மீன்களில் அதிகம் காணப்படுகிறது. பீன்ஸ், தாவர விதையுணவுகள், நட்ஸ் என்னும் கொட்டைகள், பருப்புகள், கீரை மற்றும் உணவாகும் இலைகள், விலங்குகளின் ஈரல், சிறுநீரகம், இதயம் மற்றும் மூளை ஆகியவற்றில் வைட்டமின் பி2 அதிகம் காணப்படுகிறது.

ஒரு மாத காலத்திற்கு தினமும் 500 மில்லி கிராம் வைட்டமின் பி2 எடுத்துக்கொள்வது தலைவலி வரும் வாய்ப்பை குறைப்பதாக கூறப்படுகிறது.

காளான்

காளான்

கொத்துத் தலைவலியின் தீவிரம் மற்றும் தாக்குதல்களை வாரம் மற்றும் மாதக்கணக்கில் ஸிலோசிபின் காளானால் தடுக்க இயலும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஸிலோசிபின் போன்ற சைக்ஹெடெலிக்ஸ் உணவுகள் கொத்துத் தலைவலியை கட்டுப்படுத்துகின்றன.

இந்தக் காளான் மனோவியலுடன் தொடர்புடைய ஹல்லுஸினோஜெனாக செயல்பட்டு கொத்துத் தலைவலி சிகிச்சையில் உதவுகிறது. காளான் ஒவ்வாமை உள்ளவர்கள் ஸிலோசிபின் காளானை அதிக அளவில் உண்ண வேண்டாம்.

பாட்டி வைத்தியம்

பாட்டி வைத்தியம்

ஆராய்ச்சிகளால் நிரூபிக்கப்படாவிட்டாலும் காலங்காலமாக மக்களின் புழக்கத்தில் சில நிவாரண முறைகள் இருந்து வருகின்றன. தலைவலி பாதிப்புள்ளோர் மத்தியில் இப்பழக்கங்கள் பிரபலமாக உள்ளன. மருத்துவர்கள் இவற்றை ஊக்குவிக்காவிட்டாலும் இந்த கை வைத்தியங்கள் தரும் நிவாரணத்திற்காக அவற்றையும் அறிந்து கொள்ளலாம்.

ஆப்பிள் சிடர் வினிகர் - ஆவி பிடித்தல்

ஆப்பிள் சிடர் வினிகர் - ஆவி பிடித்தல்

ஆப்பிள் சிடர் வினிகரிலிருந்து வரும் ஆவியை சுவாசிப்பதால் தலைவலியின் வேதனையை குறைக்கலாம்.

ஒரு கிண்ணத்தில் பாதியளவு கொதிக்கின்ற நீரை ஊற்ற வேண்டும். அதனுடன் ¼ கப் ஆப்பிள் சிடர் வினிகரை சேர்க்கவேண்டும். தலையை துண்டினால் மூடிக்கொண்டு கிண்ணத்தின் பக்கமாக குனிந்து வினிகரிலிருந்து எழும் ஆவியை ஆழ்ந்து உள்ளிழுக்கவேண்டும். சுடுநீர் உடலில் பட்டுவிடாமல் கவனமாக இதைச் செய்ய வேண்டும். இதேபோல் ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்குச் செய்து பயன்பெறலாம்.

அரைத்த சந்தனம்

அரைத்த சந்தனம்

தலைவலிக்கு சந்தனம் குழைத்து பயன்படுத்துவது பாரம்பரிய வைத்திய முறைகளுள் ஒன்று. இறுக்கம் கொண்ட நரம்புகள் மற்றும் கண்களின் பகுதிகளுக்கு சந்தனம் இதமளிக்கக்கூடியது.

½ தேக்கரண்டி சந்தன பொடியுடன் சிறிது நீர் கலந்து பசைபோல பிசையவும். இதை நெற்றியில் பூசவும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவலாம்.

மூலிகை டீ

சாமந்தி தேநீர்

சாமந்தி தேநீர்

சாமந்திக்கு உடல் அழற்சிக்கு எதிராக செயல்படும் திறன் உண்டு. இது நமக்கு இதம் அளிக்கக்கூடியதும் கூட. உலர்ந்த சாமந்தி பூவை இரண்டு முதல் மூன்று தேக்கரண்டி எடுத்து 1 கப் சுடுநீரில் சில நிமிடங்கள் தோய விடவும். இதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சில துளிகள் சேர்க்கலாம். இக்கரைசலை வடிகட்டி தினமும் மூன்று முதல் நான்கு வேளை பருகி வந்தால் ஒற்றைத் தலைவலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.

சாமந்தியுடன் ஹோர்ஹவுண்ட் என்னும் பூண்டு வகை மற்றும் மெடொஸ்வீட் என்னும் ரோஜா வகை ஆகியவற்றை சமஅளவு எடுத்து 1 கப் சுடுநீரில் ஐந்து நிமிடங்கள் தோய விடவும். இதை வடிகட்டி தேவைப்படும்போதெல்லாம் பருகலாம்.

இஞ்சி டீ

இஞ்சி டீ

ஜிஞ்ஜரால் என்ற பொருள் இஞ்சியில் உள்ளது. இது ஆக்ஸிஜனேற்ற தடுப்பானாகவும் உடல் அழற்சியை தடுப்பதாகவும் செயல்படக்கூடியது. வலியிலிருந்து நிவாரணம் தரும் ஆற்றல் இதற்கு உண்டு. கொத்துத் தலைவலியின்போது வரும் தலைசுற்றல் மற்றும் வலியை இது நீக்கக்கூடியது. தினமும் இருமுறை இஞ்சி டீ குடித்து பயன்பெறலாம்.

கொத்துத் தலைவலியின் வகைகள்

கொத்துத் தலைவலியின் வகைகள்

விட்டுவிட்டு வரும் தலைவலி: குறைந்த நேரம் தீவிரமாக இருந்து மறையும் திடீர் தாக்குதல்களை கொண்ட கொத்துத் தலைவலி. 15 நிமிடம் முதல் 3 மணி நேரம் வரை நீடிக்கக்கூடியது. தாக்குதல் குறைந்தநேரமே இருந்தாலும் வெகுதீவிரமாக இருக்கும். ஒரு நாளைக்கு ஒன்று முதல் எட்டு முறை தலைவலி தாக்கக்கூடும். வாரக்கணக்கில் மாதக்கணக்கில் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து செல்லும். இடையில் அறிகுறியே இல்லாமல் இருக்கக்கூடும்.

நாள்பட்ட தலைவலி: இவ்வகை தலைவலி நீண்டநேரம் இருக்கும். இடைவெளியே இல்லாமல் அவதி தொடரும். சிலருக்கு ஒரு மாதம் அல்லது ஒரு வருடம் இடைவெளி விட்டு தாக்கும்.

கர்ப்பப்பை கட்டியை கரைக்க செம்பருத்தி டீ எப்படி குடிக்க வேண்டும்?

மருத்துவ உதவி

மருத்துவ உதவி

வலிப்பு போன்ற உடல் நடுக்கம், பார்வையில் குறைபாடு, நகர இயலாமல் உடல் மரத்துப்போதல், தூக்கமின்மை, தலைசுற்றல் மற்றும் வாந்தி, விடாத தலைவலி ஆகியவை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

கொத்துத் தலைவலிக்கு முழுமையான குணம் அளிக்கக்கூடிய சிகிச்சைகள் இன்னும் வராவிட்டால் மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளை எடுத்துக் கொள்வதோடு, தலைவலிக்குக் காரணமான உணவுகள், பழக்கவழக்கங்களை தவிர்ப்பது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிப்பது, மாற்றுமுறை சிகிச்சைகளை பெறுவது ஆகியவற்றால் இதன் தீவிரத்தை குறைப்பதோடு, அடிக்கடி வராமலும் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Cluster Headache Relief: Tips and Remedies to Feel Better

Cluster headaches cause intense pain that occurs in short-lived but severe attacks affecting one side of the head. If you experience these excruciating, often debilitating headaches, you may wonder whether there are any natural treatments that may help.