பிரம்பு என்றால் உங்க வாத்தியார் நினைவுக்கு வருகிறாரா? அதன் வரலாறு தெரியுமா?

Posted By: Gnaana
Subscribe to Boldsky

மணல் சார்ந்த நீர்நிலைகளின் அருகே வளரும் பிரம்புச்செடி, மிகப் பழமையான ஒரு தாவரமாகும். மனிதனின் உடல் வலியைப் போக்கும், ஒரு புல்லினமாகும். பலவிதப் பயன்கள் கொண்ட பிரம்புகளின் வேரில் இருந்து கிடைக்கும் கிழங்குகள், மனிதரின் வியாதிகளை நீக்க, பாதிப்புகளைப் போக்க, பெரிதும் பயனாகின்றன.

பிரம்பு, திருவிளையாடற் புராணத்தில் வந்ததால் மட்டுமல்ல, அதன் நற்தன்மைகளாலும், குடந்தைக்கு அருகே உள்ள சிவத்தலங்களில் ஒன்றான, திருக்கோடிக்கா எனும் ஊரில் உள்ள சிவன் கோவிலின் தலமரமாக, விளங்குகிறது. இருவகை கொண்ட பிரம்புகளில், வளையும் வகையிலான பிரம்பே, ஆசிரியரின் கையில் இருக்கிறது. உறுதியான பிரம்புகள் கைத்தடி, நாற்காலி, வீடுகளின் மேற்கூரை மற்றும் அலங்கார பொருட்கள் தயாரிப்பில் பயன்படுகின்றன.

பிரம்பு எல்லா இடங்களிலும் விளைவதில்லை, அவை குறிப்பிட்ட இடங்களில் மட்டும் வளரும் தன்மை கொண்டவை. தமிழகத்தில், சிதம்பரம் அருகே, கொள்ளிடக்கரையில் உள்ள கொள்ளிடம் எனும் ஊர், பிரம்பினால் செய்யப்படும் பல வகை வீட்டு உபயோகப் பொருட்களுக்கு பெயர்பெற்றதாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மருத்துவ தன்மை :

மருத்துவ தன்மை :

பிரம்பு, நெல்லைப் போன்ற ஒரு புல் வகைப் பயிராக இருந்தாலும், இதன் வேரில் கிழங்குகள் காணப்படும், அந்தக்கிழங்குகளே, மருத்துவத் தன்மை மிக்கவை.

வாதம், பல்வலி போக்கும், பிரம்பு.

 பல் கூச்சம் :

பல் கூச்சம் :

பிரம்புக் கிழங்கை உலர்த்தி, நன்கு தூளாக்கி, அதனை தேனில் குழைத்து தினமும் சாப்பிட்டு வர, பக்க வாதம் எனும் வாத பாதிப்பு வியாதிகள் அகலும்.

பிரம்பின் கிழங்கை தூளாக்கி, அதில் சிறிதை நீரில் இட்டு, காய்ச்சி பருகி வர, பல் வலி, பல் கூச்சம் மற்றும் ஈறுகளில் இரத்தம் வடிதல் போன்ற பாதிப்புகள் விலகும்.

பிரம்புக் கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டி, அதை நீரில் காய்ச்சி பருகி வர, நெஞ்சு சளி நீங்கும், அல்சர் எனும் வயிற்றுப் புண் பாதிப்புகள் அகலும்.

பிரம்பு :

பிரம்பு :

பிரம்புக்குச்சிகள் மாணவர்களை கண்டிக்கவும், அவர்களை பயமுறுத்தவும் ஆசிரியர்களின் கைகளில் இருந்தன. பிரம்பைக்கொண்டு ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிப்பதை விட, அவர்களின் காதுமடல்களைக் கைவிரல்களால் திருகியும், தோப்புக்கரணம் போட வைத்தும் தண்டனைகளை அளிப்பார்கள்.

மேலும், ஆசிரியர்களின் கைகளில் இருந்த பிரம்புக் குச்சிகள் நெகிழும் தன்மை உடையனவாக இருந்ததால், அடித்தாலும் அத்தனை வலிக்காது, ஏனென்றால், மாணவர்கள்தான், பிரம்பை ஓங்கும்போதே, கைகளைத் தாழ்த்திக்கொள்வார்களே!

Image source

வீட்டு உபயோகப் பொருட்கள் :

வீட்டு உபயோகப் பொருட்கள் :

பிரம்பு உடல் சூடு அகற்றி, குளுமை தருபவை. உறுதியான பிரம்பில் சாய்வு நாற்காலி, கூண்டு வடிவ ஊஞ்சல், சோஃபா மற்றும் டீப்பாய் போன்ற ஏராளமானவை செய்யப்படுகின்றன.

இந்தப் பொருட்களை செய்யத் தேவையான பிரம்புகள், வட இந்தியாவில் இருந்து வரவழைக்கப்படுகின்றன. பிரம்புகளின் வகைகளைப் பிரித்து, அதன்மூலம், அதிக வலுவைத்தாங்கும் நாற்காலி, சோஃபா முதல், இலகுவான பூக்கூடை, அலங்காரத்தட்டு போன்றவை செய்கிறார்கள்

கலை நயமிக்க பூச்சாடிகள், அலங்கார பேப்பர் வெயிட், சிறிய அலங்கார வேலைப்பாடு மிக்கக் கூடைகள், கோவில்களுக்கு அர்ச்சனை செய்ய பூசைப் பொருட்களை எடுத்துச் செல்லும் அர்ச்சனைக் கூடைகள், வீடுகளில், இன்டீரியர் டெகரேசன் வேலைகளில், தடுப்பாகப் பயன்படும் சிறிய தட்டிகள், சாவிக்கொத்து மற்றும் கடிதங்கள் வைக்கும் சிறிய ஸ்டேன்ட் போன்ற பலவிதமான வீட்டு உபயோகப் பொருட்களை, தயாரிப்பவர்களின் கற்பனைத் திறனுக்கு ஏற்ப, வாங்குபவர்களின் தேவைக்கேற்ப, தயாரித்து அளிக்கிறார்கள்.

 உடல் சூடு தணிக்கும் பிரம்பு நாற்காலி:

உடல் சூடு தணிக்கும் பிரம்பு நாற்காலி:

ஃபோம் குஷன் வைத்த ரிவால்விங் சேர்களில் உட்கார்ந்து நீண்ட நேரம் அலுவலகப் பணிகள் செய்யும்போது, உடல் களைப்போடு, உடல் சூடும் அதிகரித்து, கண்கள் சூட்டில் எரிய ஆரம்பிக்கும். கண் பார்வை மங்கலாகத் தெரியும்.

இதற்குத் தீர்வாக, பிரம்பு நாற்காலியில் தினமும் அமர்ந்து வர, உடல் சூடு படிப்படியாக குறைந்து கண் பார்வையும் தெளிவடையும். வீடுகளில், சிறிய கூண்டு போல பிரம்பில் செய்த ஊஞ்சலை, ஒரு சங்கிலியில் கோர்த்து வீடுகளின் மேற்கூரைகளில் உள்ள கொக்கிகளில் மாட்டி வைத்திருப்பார்கள். தினமும் சிறிது நேரம், இந்த ஊஞ்சலில் ஆடிவர, உடல் சூடு தணியும், மனமும் புத்துணர்ச்சி அடையும் என்பதனாலேயே, இவ்வாறு செய்து வைத்தனர்.

பிரம்பு நாற்காலி அல்லது சோஃபாக்களில் அழுத்தமான குஷன் ஃபோம்கள் வைக்காமல், வெறுமனே அமர்ந்துவர, உடல் சூடு தணியும்

 பிரம்பு குச்சி :

பிரம்பு குச்சி :

ஆசிரியர் கையில் இருந்த பிரம்பு சற்றே சிவந்த நிறமாக அல்லவா, இருக்கும், இது என்ன வெள்ளைக் பிரம்பு என்று யோசிக்கிறீர்களா? காரணம் அறிந்துகொண்டால், இனி எங்கேனும், வெள்ளை கைத்தடிகளைக் கண்டால், வழி தருவீர்கள்.

இரண்டாம் உலகப்போரின் முடிவில், ஜப்பானிய மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு, யாராலும் ஆறுதல் சொல்லமுடியாத காலகட்டம். உலக நாடுகளின் வக்கிர ஆயுதப்பசிக்கு, அப்பாவி மக்களை இரையாக்கிய அவலம், எங்கும் மனிதர்கள் அங்ககீனர்களாக, உறவை இழந்து நிர்க்கதியாக இருந்த நிலையில், அந்த பாதிப்புகளை விட இன்னும் மோசமாக, அநேகம் பேருக்கு கண் பார்வை பறிபோயிருந்தது.

ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களின் கண் பார்வையை சரிசெய்ய முடியாத இயலாமையில், பார்வைத்திறன் இழந்த அவர்களின் அன்றாட வாழ்விற்கு என்ன தீர்வு என்று யோசிக்கையில்தான், அவர்களுக்கு, வெள்ளை பிரம்பு கைத்தடி சிந்தனை உதயமானது.

கைத்தடி :

கைத்தடி :

சாதாரண கைத்தடி என்பது, வயதானவர்கள், உடல் நலமில்லாதவர்கள், அதைத் தரையில் ஊன்றி, கைத்தடியின் பலத்தில் நடப்பதாகும்.

வெள்ளைப் பிரம்பு கைத்தடி என்பது, சற்றே நீண்டு இருக்கும், மேலும், அது சற்று வளையும் தன்மை கொண்டிருக்கும், செல்லும் வழிகளில் தரையில் ஊன்றி, தரையின் தன்மையை அறிந்து, அதன்மூலம், யாருடைய உதவியும் இன்றி, பார்வைத் திறன் பாதித்தோர் வெளியில் சென்றுவர, உருவாக்கப்பட்ட ஒரு அருமையான வழித்துணைதான், வெள்ளைப்பிரம்பு கைத்தடி.

மூன்றாவது கால் :

மூன்றாவது கால் :

இதில் வெள்ளை வண்ணம் சேர்த்தது, காணும் எல்லோரும் இது, பார்வைத் திறன் பாதித்தோர் வழித்துணையாக வருவது என்பதை உணர்ந்து, அவர்களுக்கு சிரமம் தராமல் ஒதுங்கிச் செல்லவே. பார்வைத் திறன் பாதித்தோருக்குத் தேவை ஆறுதலும், பரிதாப வார்த்தைகளும் அல்ல, சக மனிதர் என்ற அங்கீகாரம், அதுவே, அவர்களை, தன்னம்பிக்கையுடன் வாழவைக்கும் ஒரு நற்செயலாகும்!

உருவாகிய தினம் :

உருவாகிய தினம் :

வெள்ளைப்பிரம்பு உருவான நிகழ்வை, ஆண்டுதோறும், அக்டோபர் மாதம் பதினைந்தாம் தேதி உலக அளவில், வெள்ளைப் பிரம்பு நாள் என்று கொண்டாடி வருகின்றனர்.

இந்த கைத்தடியின் தன்மையை எல்லா தரப்பினரும் அறிந்துகொண்டு, அவர்களுக்கு நாங்களும் துணை என்று பார்வைத்திறன் பாதித்தவர்களை ஊக்கப்படுத்தவே, இந்த விழா!

ஆயினும், ஏதேதோ வெற்றுக் கொண்டாட்டங்கள் கொண்டாடும் நமது தேசத்தில், இந்த நிகழ்வு நாள், பெரிதாகக் கொண்டாடப்படுவதில்லை என்பதில் இருந்தே, நாம் எவ்வளவு தூரம், மனித நேயமிக்கவர்கள் என்பதை அறிந்துகொள்ளமுடிகிறதல்லவா?!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health and other benefits using cane wood

Health and other benefits using cane wood