மன அழுத்தத்தை சமாளிக்க உதவும் ஆயுர்வேத மூலிகைகள்!!

By: Ambika Saravanan
Subscribe to Boldsky

இன்றைய அதிவேக இயந்திர உலகின், மன அழுத்தத்திற்கான மிக முக்கியமான காரணியாகும். குழந்தைகளோ, பெரியவர்களோ யாராலும் மன அழுத்தத்திலிருந்து தப்பிக்க முடியாத சூழல் உள்ளது. பதற்றம் உடலிலும், மனித மனத்திலும் பல தவறான விளைவுகளை ஏற்படுத்தும்.

Ayurvedic Herbs That Help Fight Stress

போட்டி நிறைந்த இவ்வுலகில், ஓவ்வொரு துறையிலும் ஏற்படும் வேலைபளுவால் மன அழுத்தம் வருகிறது, பொதுவாக மன அழுத்தம், நீரிழிவு முதல் மனச்சோர்வு வரை பல நோய்களுக்கு காரணமாக அமைகிறது. ஆயுர்வேத மருத்துவத்தின் உதவியுடன் மன அழுத்தத்தில் இருந்து நாம் எளிதாக விடுதலை பெற முடியும்.

இந்த கட்டுரையில் ஆயுவேத மூலிகைளின் மூலம் மன அழுத்தத்தை எப்படி சமாளிக்கலாம் என பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அஸ்வகந்தா:

அஸ்வகந்தா:

ஆயுர்வத மருத்துவத்தின் ஒரு வரமாக அஸ்வகந்தா பார்க்கப்படுகிறது. இது அமினோ-அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த ஒரு அற்புத மூலிகை. இது மனதிற்கு அமைதியூட்டி, மன அழுத்தத்தில் இருந்து விடுதலை தருகிறது.

நமது தூக்கத்தை நெறிப்படுத்தி, நமது உடலில் உள்ள சக்தியை சரி படுத்தும் ஒரு அரிய வேலையை அஸ்வகந்தா செய்கிறது. இதனால் அஸ்வகந்தா தூக்கமின்மை பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக பார்க்கப்படுகிறது.

 வல்லாரைக் கீரை:

வல்லாரைக் கீரை:

மன அழுத்தத்தை எதிர்ப்பதற்கு மிக முக்கிய பழங்கால மூலிகை. நமக்கு கடுமையான மன அழுத்தம் உண்டாகும்போது, ​​நமது உடலில் உள்ள ஹார்மோன்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் நிறைய நடைபெறுகின்றன.

மன அழுத்தத்தை அதிகப்படுத்தும் ஹார்மோனான கார்டிசோலின் (Cortisol) அளவு மிக அதிகமாக ஆகும். வல்லாரைக் கீரை, அனைத்து மன அழுத்தம் தொடர்பான ஹார்மோன்களை ஒழுங்குபடுத்த உதவுகிறது மற்றும் மனதில் ஒரு இனிமையான விளைவை உருவாக்குகிறது.

அதிமதுரம்:

அதிமதுரம்:

பதற்றம் மற்றும் மன அழுத்தத்தை நெறிப்படுத்த மிகச்சிறந்த மூலிகை அதிமதுரம் ஆகும். இது க்ரானிக் மற்றும் செரிப்ரோஸ்பைனல் திரவத்தின் சுரப்பியை மேம்படுத்துவதன் மூலம் மனதை நிதானப்படுத்துகிறது. எனவே அதிமதுரம் மன அழுத்தத்தில் சமாளிக்க உதவும் மூலிகைகளில் மிக முக்கிய ஒன்றாகும்.

லாவெண்டர்:

லாவெண்டர்:

மன அழுத்தம் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க இயற்கையான மருந்தாக இது இருக்கிறது. இது பெரும்பாலும் மேற்பூச்சு/மசாஜ்க்கு (எண்ணெய் வடிவில்) பயன்படுத்தப்படுகிறது.

இஃது ஒரு சிறந்த நிவாரணம் மட்டும் கொடுக்காமல், மனதின் நம்பிக்கையையும் தூண்டுகிறது. மூளையின் உணர்வுபூர்வமான மையங்களில் இது மிகவும் நேர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது, இதனால் மன அமைதி ஏற்பட்டு, மன அழுத்தம் தொடர்பான ஹார்மோன்களின் சுரப்பு குறைகிறது.

சீமை சாமந்தி:

சீமை சாமந்தி:

இது நரம்புகளை அமைதிப்படுத்தக் கூடிய ஒரு மூலிகை. தூக்கமின்மை பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக பார்க்கப் படுகிறது. இதன் மூலம் தயாரிக்கப் படும் தேநீரை அருந்திவருவதன் மூலம் மனதை அமைதி படுத்தலாம். ஆனால் சிலருக்கு ஒவ்வாமை பிரச்சனை வருவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. ஆதலால் இதை உபயோகிக்கும் பொழுது நமக்கு ஒவ்வாமையின் அறிகுறி தென்பட்டால் நாம் இதை தவிர்த்து விடுவது நல்லது.

சிமிக்கிப்பூ:

சிமிக்கிப்பூ:

இந்த வியக்கத்தக்க மூலிகை, அழகானது மட்டுமல்ல கவலை மற்றும் மன அழுத்தத்திற்கும் சக்திவாய்ந்த தீர்வாக இருக்கும்.

இது GABA என்று அழைக்கப்படும் நரம்பியக்கடத்தலின் அளவை அதிகரிப்பதன் மூலம் மூளையில் ஒரு மிதமான மற்றும் அமைதியான விளைவுகளை உருவாக்குகிறது.

இதை எடுத்துக் கொண்டதும் மனம் ஒரு லேசான மயக்க நிலைக்கு மாறும், எனினும் இது மனதிற்கு அமைதி கொடுக்க ஒரு பாதுகாப்பான ஒரு மூலிகையாய் பார்க்கப் படுகிறது.

துளசி:

துளசி:

இது "இயற்கை மருத்துவத்தின் தாய்" என அழைக்கப்படுகிறது, ஒரு பயனுள்ள வழியில் மன அழுத்தத்தை எதிர்ப்பதற்கும், நமது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் இது பாடுபடுகிறது. "கார்டிசோல்" எனப்படும் அழுத்தம் சம்பந்தப்பட்ட ஹார்மோனின் உற்பத்தியைக் குறைப்பதன் மூலம், இது மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 ஜின் சிங்க் :

ஜின் சிங்க் :

ஜின் சிங்க், மன அழுத்தத்திலிருந்து நம்மை காக்க உதவுகிறது. இது இன்றைய நவீன உலகின் பதட்டங்களை எதிர்த்துப் போராடுவதற்காக, மனித உடலின் ஒட்டுமொத்த அமைதியை அதிகரிக்கச் செய்யும் சிறந்த மூலிகையாகும்.

இது "மன அழுத்த மூலிகைகளின் இராஜா" என அழைக்கப்படுகிறது, இவ்வுலகில் மன அழுத்தத்திற்கு உபயோகிக்கப் படும் மூலிகைகளில், அதிகமாக உபயோகிக்கப் படுவது இதுவே.

இவை போன்ற பல்வேறு இயற்கையான வகையில் மன அழுத்தத்தை குறைக்கும் நிவாரணிகள் பதிலாக நாம் ஏன் செயற்கை மருந்துகளை நாடி செல்ல வேண்டும்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ayurvedic Herbs That Help Fight Stress

Ayurvedic Herbs That Help Fight Stress
Story first published: Wednesday, September 6, 2017, 12:34 [IST]
Subscribe Newsletter