For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த காய் தெரியுமா? இத சாப்பிட்டா வெயிட் வேகமா குறைஞ்சிடுமாம்...

சிறு தக்காளியின் ஆரோக்கிய நன்மைகள், ஊட்டச்சத்து விபரங்கள் மற்றும் ரெசிபி குறிப்புகள் பற்றிய தொகுப்பு தான் இந்த கட்டுரை.

|

சிறு தக்காளியின் தாவர பெயர் பைசாலிஸ் பிலாடேல்பிகா. இதனைப் பொதுவாக தக்காளியுடன் சிலர் குழப்பிக் கொள்கின்றனர். ஆனால் இவை இரண்டும் வெவ்வேறானவை. சிறு தக்காளியை மெக்சிகன் தக்காளி, உமி கொண்ட செர்ரி, உமி கொண்ட தக்காளி என்றும் அழைப்பார்கள். இந்த் சிறு தக்காளியின் மேல் பகுதியில் உமி கொண்டு மூடப்பட்டிருக்கும். பழம் பழுத்தவுடன் அந்த உமி நீங்கிவிடும்.

Tomatillos

மெக்சிகன் சமையல் வகைகளில் சிறு தக்காளி பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பச்சை நிறத்தில் காணப்படும் இந்த தக்காளி சாஸ், ஜாம், பதப்படுத்தப்படும் உணவுகள், தீயில் வாட்டும் உணவுகள், பொரித்த உணவுகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. அடிப்படையில் இந்த சிறு தக்காளி பல்வேறு உணவு வகைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு உணவுப் பொருளாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிறு தக்காளி

சிறு தக்காளி

செரிமானத்தை மேம்படுத்தவும், சளி, காய்ச்சல் பொண்ணுக்கு வீங்கி போன்ற நோய்களின் சிகிச்சைக்கு உதவவும் இந்த சிறு தக்காளியில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. உயர் இரத்த அழுத்த பாதிப்பைக் குறைக்கவும் எடை குறைப்பு முயற்சியில் பலனளிக்கவும் சிறு தக்காளி பயன்படுகிறது. இந்த பழத்தின் நன்மைகள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இந்த பதிவைத் தொடர்ந்து படியுங்கள்.

MOST READ: இன்னைக்கு இந்த 2 ராசியும்தான் டாப்... உங்கள அடிச்சிக்கவே முடியாது...

ஊட்டச்சத்து மதிப்பு விபரங்கள்

ஊட்டச்சத்து மதிப்பு விபரங்கள்

100 கிராம் சிறு தக்காளியில் 32 கலோரிகள் உள்ளன.

புரதம் - 0.96 கிராம்

இரும்பு - 0.62 கிராம்

சர்க்கரை - 3.93 கிராம்

கொழுப்பு - 1.02 கிராம்

கார்போ ஹைட்ரேட் - 5.84 கிராம்

நார்ச்சத்து - 1.9 கிராம்

தண்ணீர் - 91.63கிராம்

கால்சியம் - 7 மிகி

மெக்னீசியம் - 20 மிகி

பாஸ்போரஸ் - 39 மிகி

பொட்டாசியம் - 268 மிகி

சோடியம் - 1 மிகி

செரிமானத்தை மேம்படுத்த

செரிமானத்தை மேம்படுத்த

உணவு நார்ச்சத்து அதிகமாக இருக்கும் சிறு தக்காளி செரிமான ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்ற ஒரு உணவுப்பொருளாக விளங்குகிறது. சிறு தக்காளியை உணவில் சேர்த்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொள்வதால், உணவின் அடர்த்தி அதிகரித்து, செரிமான செயல்பாடு விரைவாகிறது , மேலும் செரிமான பாதையில் உணவின் நகர்வு எளிதாகிறது. மலச்சிக்கல், வாய்வு, வயிறு உப்புசம் போன்றவற்றைப் போக்க உதவுகிறது. மேலும் வயிற்றுப் புண் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

நோயெதிர்ப்பு மண்டலம்

நோயெதிர்ப்பு மண்டலம்

சிறு தக்காளியில் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது. இந்த வைட்டமின் உள்ளிருப்பு, வெள்ளை அணுக்களின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது, இதுவே உடலின் பாதுகாப்பு மண்டலமாக விளங்கும் பகுதியாகும். இதனால் நோய்க் கிருமிகள், வெளிப்புற மாசு போன்ற நோய் உண்டாக்கும் காரணிகளுடன் இவை போராடுகின்றன.

MOST READ: டயட் இருக்கும்போது நீங்க செய்யற ஆபத்தான 10 விஷயங்கள் என்ன தெரியுமா?

புற்றுநோயைத் தடுக்க

புற்றுநோயைத் தடுக்க

சிறு தக்காளியின் அன்டி ஆக்சிடென்ட் தன்மையை வெளிக்கொணரும் விதமாக நடத்தப்பட்ட ஆய்வில் புற்று நோயைத் தடுக்க உதவும் விதனோலைடு என்னும் தனித்தன்மை பெற்ற தாவர ஊட்டச்சத்து சிறு தக்காளியில் உள்ளது கண்டறியப்பட்டது. ப்ரீ ரேடிகல்களை அகற்றுவதன் மூலம் இந்த அன்டி ஆக்சிடென்ட் செயல்புரிந்து உடலில் உள்ள ஆரோக்கியமான அணுக்கள் அழியாமல் பாதுகாக்கிறது.

கண்பார்வையை மேம்படுத்த

கண்பார்வையை மேம்படுத்த

சிறு தக்காளியில் பீட்டா கரோடின் உள்ளது. இது கண் பார்வையை மேம்படுத்த ஒரு முக்கிய பங்காற்றுகிறது. சிறு தக்காளியை உணவில் சேர்த்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொள்வதால் கண் தொடர்பான பாதிப்புகளான படர்ந்த நசிவு, கண் புரை மற்றும் வயது தொடர்பான கண் பாதிப்புகள் ஆகியவை தடுக்கப்படுகிறது.

எடை குறைப்பிற்கு

எடை குறைப்பிற்கு

அதிக ஊட்டச்சத்து மற்றும் குறைந்த கலோரி போன்றவற்றைக் கொண்ட சிறு தக்காளி உயர்ந்த நார்ச்சத்து கொண்டிருப்பதால் இதனை உட்கொண்டவுடன் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுகிறது. எனவே, எடை குறைப்பிற்கான உபாயம் தேடுகிறவர்களுக்கு சிறு தக்காளி ஒரு சிறந்த தீர்வைத் தருகிறது.

சளியைப் போக்க

சளியைப் போக்க

முன்னர் கூறியபடி, சிறு தக்காளியில் வைட்டமின் சி சத்து அதிகம் இருப்பதால், உடலுக்கு ஒரு பாதுகாப்பு கவசம் போல் செயல்படுகிறது. உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துவதால், காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகளில் இருந்து உங்களைப் பாதுகாத்து எந்த ஒரு தொற்று பாதிப்பும் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

இவை தவிர, சிறு தக்காளி, ஆஸ்துமாவிற்கான சிகிச்சை, இரத்த அழுத்தத்தைக் குறைப்பது, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, படை மற்றும் பொண்ணுக்கு வீங்கி போன்ற பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிப்பது, தொடை அழற்சிக்கு சிகிச்சை அளிப்பது போன்றவற்றிலும் உதவுகிறது.

MOST READ: காதலியோட கடைங்கிறதால காபி நிறைய குடிச்சு சர்க்கரை நோயால் பாதித்த மனிதர்... அடக்கெடுமையே!

சிறு தக்காளி உணவுக் குறிப்புகள்

சிறு தக்காளி உணவுக் குறிப்புகள்

இவ்வளவு நன்மைகள் அடங்கிய சிறு தக்காளியைப் பயன்படுத்தி ஒரு சால்ட் செய்வது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.

1. சிறு தக்காளி சாலட்

தேவையான பொருட்கள்

, மிதமான அளவு சிறு தக்காளி - 12

. சிலேன்ட்ரோ - 1/2 கப்

. தூய்மையான ஆலிவ் எண்ணெய் - 1/4 கப்

. எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்

. சிவப்பு மிளகாய் தூள் (கொரகொரப்பாக அரைத்தது ) - 1/2 ஸ்பூன்

. மிதமான அளவு தக்காளி - 2

. மிளகு தூள் - சுவைக்கேற்ப

. உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை

1. சிறு தக்காளியை பாதியாக நறுக்கிக் கொண்டு அவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

2. இதனுடன் சிலேன்ட்ரோ, ஆலிவ் எண்ணெய், எலுமிச்சை சாறு, மிளகாய் தூள், ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.

3. இதனுடன் தக்காளி சேர்த்து கிளறிக் கொள்ளவும்.

4. உப்பு மற்றும் மிளகு தூளை மேலே தூவி கலந்துக் கொள்ளவும்.

5. அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை இந்த கலவை நன்றாக ஊறட்டும்.

6. பின்னர் இதனை எடுத்து சுவைக்கவும்.

குறிப்பு

எலும்புப்புரை அல்லது கீல்வாதம் பாதிப்பு உள்ளவர்கள் சிறு தக்காளி உட்கொள்வதைத் தவிர்க்கவும். இது ஓவ்வாமை பாதிப்பை உண்டாக்கலாம். கண் அரிப்பு, வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிறு வலி, மூக்கில் இருந்து நீர் வழிதல் போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

6 Lesser Known Health Benefits of Tomatillos, Nutrition and Recipe

Scientifically termed as Physalis philadelphica, tomatillos are often confused with tomatoes irrespective of the differences possessed by both the fruits/vegetables. Tamarillos are commonly termed as Mexican tomato, husk tomato, or husk cherry and have a bright green colour
Desktop Bottom Promotion