For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த கூர்க்கன் கிழங்கை சாப்பிட்டா உடம்புல என்ன அதிசயம்லாம் நடக்கும்னு தெரியுமா?

|

இந்த கூர்க்கன் கிழங்கு இந்தியாவில் காணப்படும் கோலியஸ் தாவரத்தில் இருந்து பெறப்படுகிறது. இதன் அறிவியல் பெயர் பிளக்ட்ரானஸ் ஸ்க்யூட்டலாராய்ட்ஸ். இது புதினா குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும்.

சுமார் 3000 வருடங்களாக இந்த மூலிகை மருத்துவ துறையில் பயன்பட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. இதைத் தவிர சீரண பிரச்சனையில் தொடங்கி சரும பிரச்சினை வரை சரி செய்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கூர்க்கன் கிழங்கு

கூர்க்கன் கிழங்கு

ஆயுர்வேத மருத்துவ முறையில் இதன் பலன் இன்றியமையாதது.உடல் எடை குறைக்கவும் பயன்படுகிறது. எனவே இதிலிருந்து நிறைய கிழங்குகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த கிழங்கு அடினைலேட் சைலேஷ் என்ற கெமிக்கலை தூண்டி சைக்கிளிக் அனினோசைன் மோனோபாஸ்பேட் என்ற மூலக்கூற்றை உருவாக்கி உடற் செல்களின் ஒழுங்கான செயல்பாட்டிற்கு உதவுகிறது. உடல் ஆற்றலை நிலையாக்கி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

பயன்கள்

பயன்கள்

அழற்சிக்கு பயன்படுகிறது

விறைப்புத்தன்மை குறைபாடு

சரும பிரச்சினைகள்

இடியோபதிக் கான்கெஸ்டிவ் கார்டியோமையோபதி

சிறுநீரக பாதை தொற்று, சிறுநீர்ப்பை தொற்று.

உடல் பருமன்

மாதவிடாய் வலி

மலம் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல்

புற்று நோய்

உயர் இரத்த அழுத்தம்

நெஞ்சு வலி

ஆஸ்துமா

வலிப்பு

இரத்த கட்டு

இன்ஸோமினியா

கண்களில் இரத்தம் அழுத்தம் அதிகரித்தல் போன்ற பிரச்சினைகளுக்கு பயன்படுகிறது.

MOST READ: நியூட்ரிஷியன்கள் இந்த 6 உணவுகளை மட்டும் சாப்பிடவே மாட்டாங்களாம்... அது என்ன தெரியுமா?

உடல் நல நன்மைகள்

உடல் நல நன்மைகள்

இந்த கூர்க்கன் கிழங்கு ஆஸ்துமா, உடல் எடை குறைப்பு, ஆண்களுக்கு டெஸ்டோடிரான் ஹார்மோன் அதிகரிப்பு போன்ற உடல் நல நன்மை களுக்கு பயனளிக்கிறது.

புற்றுநோயை தடுத்தல்

புற்றுநோயை தடுத்தல்

2011 ல் நடத்திய ஆய்வின் படி புரோட்டீன் பாஸ்பேட் 2 செல் பிரிதலுக்கு உதவுகிறது. இந்த செயல் ஆன்டி கேன்சராக செயல்படுகிறது. இதன் மூலம் தயாரிக்கப்படும் மாத்திரைகள் புற்றுநோய் கட்டிகளின் வீரியத்தை குறைத்து புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகிறது.

MOST READ: கருப்பு சப்போட்டா சாப்பிட்டிருக்கீங்களா? சாப்பிடுங்க... இந்த நோயெல்லாம் குணமாயிடும்...

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல்

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல்

இந்த மூலிகை உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இதனால் நமது இதயமும் ஆரோக்கியமாக இருக்கும். இதனுடன் ஆல்கஹால், சர்க்கரை, அதிக உப்பு சேர்க்கப்பட்ட உணவு, காபி போன்ற உணவுகளை தவிர்த்தால் இரத்த அழுத்தம் குறைய ஆரம்பித்து விடும்.

இரத்த சர்க்கரை

இரத்த சர்க்கரை

டயாபெட்டிக் மற்றும் ப்ரீ டயாபெட்டிக் நோயாளிகள் இந்த மூலிகையை எடுத்துக் கொள்ளலாம். இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்து சமநிலையில் வைக்க உதவுகிறது.

குளுக்கோமா

குளுக்கோமா

கண்களில் ஏற்படும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. கண்ணினுள் உள்ள இரத்த அழுத்த மாற்றத்தால் ஏற்படும் குளுக்கோமா பிரச்சினையை சரி செய்கிறது. இது குளுக்கோமா நோயாளிகளுக்கு ஒரு பீட்டா பிளாக்கர் மாதிரி செயல்படுகிறது.

MOST READ: தண்ணி முதல் இறைச்சி வரை எந்த உணவு ஜீரணிக்க எவ்வளவு நேரமாகும்? தெரிஞ்சிக்கிட்டு சாப்பிடுங்க

ஆஸ்துமா

ஆஸ்துமா

சுவாச பாதையில் ஏற்படும் வீக்கம், அழற்சியை, ஆஸ்துமா போனறற பிரச்சினைகளை சரி செய்கிறது. ஆஸ்துமா நோயாளிகளுக்கு சுவாசிப்பதை எளிதாக்குகிறது. க்ரோமோகிளிசிக் அமிலத்தை விட ஆஸ்துமா நோயை குணப்படுத்த சிறப்பாக பயன்படுகிறது.

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

இடியோபதிக் கான்கெஸ்டிவ் கார்டியோமையோபதி மற்றும் இதயத்தின் வால்வு பகுதியில் அடைந்துள்ள கொழுப்பு நச்சுக்களை வெளியேற்றி இதய ஆரோக்கியத்திற்கு பயன்படுகிறது.

MOST READ: எத்தனை வயதுக்கு குறைவான பெண்கள் கருக்கலைப்பு செய்ய முடியாது? ஏன்?

நோயெதிர்ப்பு சக்தி

நோயெதிர்ப்பு சக்தி

நோயெதிர்ப்பு செல்களை அதிகரித்து நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. இந்த cAMP செயல் மூலம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் உள்ளே வராமல் தடுக்கிறது. ரேஜ் புரோட்டீன் வளர்ச்சியை தடுத்து அழற்சியை போக்குகிறது.வெளியில் உள்ள நச்சு களிலிருந்து உடம்பை பாதுகாக்கிறது.

உடல் எடை குறைப்பு

உடல் எடை குறைப்பு

இந்த கிழங்கில் உள்ள லிப்பாஸ் மற்றும் அடினைலேட் சைலேஷ் கொழுப்பு அமில உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் உடம்பில் தங்கியுள்ள கெட்ட கொழுப்புகள் எல்லாம் எனர்ஜி ஆக்கப்பட்டு எரிக்கப்படுகிறிது. சில ஆய்வுகள் இது உடல் எடை குறைப்பிற்கும், தசைகளின் கட்டுமானத்திற்கும் உதவுகிறது என்கின்றனர். cAMP சீக்கிரமாக கொழுப்புகள் எரிக்கப்பட உதவுகிறது.

MOST READ: இதை சாப்பிட்டால் மூலநோய் வரவே வராது... ஆனா இப்படி இவ்வளவு தான் சாப்பிடணும்?

இரத்த ஓட்டத்தை அதிகரித்தல்

இரத்த ஓட்டத்தை அதிகரித்தல்

இந்த கிழங்கு இரத்த குழாய்களை ரிலாக்ஸ் செய்கிறது. இதனால் தசைகளை ரிலாக்ஸ் செய்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இரத்தம் அழுத்தம் உள்ளவர்களுக்கு இது சிறந்தது.

சிகிச்சை விளைவுகள்

சிகிச்சை விளைவுகள்

இதிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகளான கோல்போர்ஸின் டரோபேட், என்கேஹெச்477 மற்றும் எஃப்எஸ்கே88 போன்றவை அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் விளைவுகளை தடுக்க பயன்படுகிறது. என்கேஹெச்477 என்ற மருந்து அடினைலேட் சைலேஷ் ஆக்டிவேட்டர் மாதிரி செயல்பட்டு நார்கோட்டிக் மருந்து மூலம் ஏற்படும் இதய செயலிழப்பை தடுக்க பயன்படுகிறது. கோல்போர்ஸின் டரோபேட் என்ற மருந்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. குறிப்பாக இந்த மருந்து இரத்த குழாய் மாற்று அறுவை சிகிச்சையில் உதவுகிறது.

MOST READ: இந்த டீயை தினமும் குடிச்சீங்கன்னா புற்றுநோய் பற்றிய பயமே வேண்டாம்... அது வரவே வராது...

வினை புரிதல்

வினை புரிதல்

இந்த மூலிகை உயர் இரத்த அழுத்த மருந்துகளுடன் வினைபுரிந்து இரத்த அழுத்தத்தை மிகவும் குறைக்க வாய்ப்புள்ளது. இது மருந்துகளுடன் வினைபுரிந்து இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து தூக்கமின்மை மற்றும் தலைசுற்றல் போன்றவற்றை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

இந்த மூலிகை இரத்தம் கட்டுதல் மருந்துகளுடன் வினைபுரிந்து இரத்தக் கசிவு போன்றவற்றை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே இந்த கிழங்கை அளவோடு பயன்படுத்தி வந்தால் எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல் நன்மைகளை பெற முடியும்.

MOST READ: பொள்ளாச்சி மாதிரி திட்டம்போட்டு மாணவியை ஆபாச படமெடுத்து மிரட்டிய கல்லூரி மாணவர்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Benefits Of Forskolin

Forskolin is made from the root of a plant in the mint family. The plant grows in Nepal, India, and Thailand. It has long been used in traditional Ayurvedic medicine.