இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க வேர்கடலை எப்படி சாப்பிடலாம்? இதப்படிங்க!

Posted By:
Subscribe to Boldsky

நம்ம ஊரிலேயே மிக விலை குறைவாக கிடைப்பதால் தான் என்னவோ, ஆரோக்கியமான உணவுகளை நாம் அதிகம் தவிர்த்துவிட்டு, இப்போது நோய்களை கட்டிக் கொண்டு அழுகிறோம். நம்மை பொறுத்த வரை நட்ஸ்-ல் சிறந்தவை முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற உசத்தியான விலை உயர்ந்த நட்ஸ் தான்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் காஸ்ட்லியானவை தரமானது என்ற கண்ணோட்டம், எண்ண ஓட்டம் அதிகரித்து போனதால் தான். விலை குறைந்த உணவுகள் மீதான நமது கவனத்தை நாம் செலுத்துவதே இல்லை. இதோ, வேர்கடலை எப்படி இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆய்வுகள்!

ஆய்வுகள்!

ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன்னரே பல ஆய்வாளர்கள் வேர்கடலை இதய நலனை அதிகரிக்கவும், மாரடைப்பு போன்ற இதய கோளாறுகள் ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது என கண்டறிந்து கூறிவிட்டனர். ஆண், பெண், வயது என எந்த பாகுபாடும் இல்லாமல், அனைவரின் இதயத்திற்கும் வலுவை சேர்க்கும் திறன் கொண்டது வேர்கடலை.

கையளவு போதும்!

கையளவு போதும்!

வாரத்தில் ஐந்து நாட்கள் ஒரு கைப்பிடி அளவு வேர்கடலை நீங்கள் சாப்பிட்டு வந்தால், உங்கள் இதயம் ஆரோக்கியம் அடைவது மட்டுமின்றி., இதய நோய்கள் ஏற்படும் சதவீதம் 50% குறையும். மேலும், இதய கோளாறால் ஏற்படும் இறப்பையும் வேர்கடலை 24% குறைக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கொலஸ்ட்ரால்!

கொலஸ்ட்ரால்!

வேர்கடலையில் எல்.டி.எல் எனப்படும் தீய கொலஸ்ட்ரால் குறைவாகவும், எச்.டி.எல். எனப்படும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நல்ல கொலஸ்ட்ரால் அதிகமாகவும் இருக்கிறது. இதனால் தான் இதய கோளாறு உள்ளவர்கள் வேர்கடலை மற்றும் ஆலிவ் ஆயில் டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுரைக்கப்படுகிறது.

எச்.டி.எல்!

எச்.டி.எல்!

உங்கள் உடலில் நல்ல கொலஸ்ட்ராலை சமநிலையில் வைத்துக் கொண்டாலே இதயத்தின் செயற்திறன் மற்றும் ஆரோக்கியம் எப்போதும் மேம்பட்டு இருக்கும். ஆகவே, நீங்கள் உண்ணும் உணவில் இருக்கும் கொலஸ்ட்ரால் எச்.டி.எல் -ஆ அல்லது எல்.டி.எல்.-ஆ என்பதை முதலில் அறிந்து உட்கொள்ளுங்கள்.

எச்.டி.எல் உணவுகள்!

எச்.டி.எல் உணவுகள்!

ஆலிவ் என்னை, பீன்ஸ், பருப்பு வகைகள், நார்ச்சத்து உணவுகள், தானியங்கள், ஆளிவிதைகள், நட்ஸ் உணவுகள் போன்றவற்றில் எச்.டி.எல் எனும் நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How Peanuts Will Help to Improve Heart Health?

How Peanuts Will Help to Improve Heart Health?
Story first published: Thursday, April 6, 2017, 15:18 [IST]
Subscribe Newsletter