Latest Updates
-
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு?
ஹை பிபி உள்ளவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!
உலக உயர் இரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு, உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள கோடையில் கட்டாயம் சாப்பிட வேண்டிய சில உணவுகளைக் காண்போம் வாருங்கள்.
இன்று ஏராளமானோர் சர்க்கரை நோயைப் போலவே, உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். சொல்லப்போனால் பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு உயர் இரத்த அழுத்தம் ஓர் முக்கிய காரணமாகும். ஒருவர் தங்களது இரத்த அழுத்த அளவைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளாவிட்டால், அது இதய நோய் முதல் சிறுநீரக செயலிழப்பு மற்றும் மோசமான கண் பார்வை உட்பட பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், தங்களின் இரத்த அழுத்தத்தை வழக்கமாக கண்காணிக்க வேண்டும் மற்றும் மருந்துகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும். அதோடு வாழ்க்கை முறை மாற்றங்களும் அவசியமாகும். இதனால் பல நோய்களை வரவிடாமல் சமாளிக்க முடியும்.

ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் பல காரணங்களால் ஏற்படலாம். அவை அதிகப்படியான உப்பு உட்கொள்வது, குறைவான பொட்டாசியத்தை எடுப்பது, அதிகளவு மது அருந்துவது, போதுமான உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது மற்றும் மன அழுத்தம் போன்றவை. உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் கொண்டவர்கள் ஒருசில உணவுகளை அன்றாட உணவில் சேர்த்து வந்தால் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். ஒவ்வொரு ஆண்டும் மே 17 ஆம் தேதி உலக உயர் இரத்த அழுத்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்த உலக உயர் இரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு, உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள கோடையில் கட்டாயம் சாப்பிட வேண்டிய சில உணவுகளைக் காண்போம் வாருங்கள்.

வாழைப்பழம்
வாழைப்பழத்தில் பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் மக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளது. இச்சத்துக்கள் அனைத்துமே இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் வாழைப்பழம் செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிற்றை நிரப்பி வைத்திருக்கிறது.

மாதுளை
மாதுளை இரத்த நாளங்களின் அளவைக் கட்டுப்படுத்தும் ஒரு நொதியான ACE அளவைக் குறைக்க உதவுகிறது. எனவே உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க மாதுளையை தினமும் சிறிது உட்கொள்வது நல்லது.

மாம்பழம்
கோடையில் அதிகம் கிடைக்கும் பழங்களுள் ஒன்று தான் மாம்பழம். மாம்பழத்தில் நார்ச்சத்து, பீட்டா-கரோட்டின், பொட்டாசியம் போன்ற இரத்த அழுத்தத்தைக் குறைக்க தேவையான சத்துக்கள் உள்ளன. அதற்கு மாம்பழத்தை அப்படியே சாப்பிடலாம் அல்லது மாம்பழ மில்க் ஷேக், ஸ்மூத்தி என்று எப்படி வேண்டுமானாலும் உட்கொள்ளலாம்.

ஸ்ட்ராபெர்ரி
இனிப்பு மற்றும் புளிப்பு கலந்த சுவையைக் கொண்ட ஸ்ட்ராபெர்ரியில் அந்தோசையனின்கள் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை உள்ளன. ஆகவே இப்பழம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

பசலைக்கீரை, பீட்ரூட் மற்றும் இஞ்சி
பீட்ரூட், பசலைக்கீரை, இஞ்சி போன்ற காய்கறிகளில் நைட்ரேட்டுகள் உள்ளன. இது உடலுக்குள் சென்று செரிமானத்திற்கு பின் நைட்ரிக் ஆக்ஸைடாக மாறும். இந்த நைட்ரிக் ஆக்ஸைடு இரத்த நாளங்களை தளர்த்தி விரிவுபடுத்துவதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. ஆகவே உயர் இரத்த அழுத்த +நோயாளிகள் இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுவது நல்லது.

தயிர்
தயிரில் கால்சியம் மட்டுமின்றி, பொட்டாசியமும் அதிகம் உள்ளது. இது உயர் இரத்த அழுத்த அபாயத்தைக் குறைக்கிறது. இதில் நல்ல பாக்டீரியாக்களும் அதிகம் உள்ளதால், இது மன அழுத்தம் மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. அதற்கு கோடையில் தயிரை மோர், ஸ்மூத்தி, லஸ்ஸி மற்றும் ரெய்தா போன்ற எந்த வடிவங்களிலும் உட்கொள்ளலாம்.

இளநீர்
இளநீர் உடலை குளிர்ச்சியுடனும், நீரேற்றத்துடனும் வைத்துக் கொள்வதோடு மட்டுமின்றி, ஒரு இயற்கையான டையூரிக்காகவும் செயல்படுகிறது. மேலும் இளநீர் உடலில் எலக்ட்ரோலைட்டுக்களை சமநிலையில் பராமரிப்பதோடு, உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எனவே கோடையில் தவறாமல் இளநீரை அதிகம் குடியுங்கள்.



Click it and Unblock the Notifications