For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

24 மணிநேரமும் வீட்லயே சும்மா இருப்பது மன அழுத்தத்தை அதிகரிக்குதா? அப்ப இத செய்யுங்க...

கொரோனா லாக்டவுனால் வீட்டிலேயே சும்மா இருந்து உண்டாகும் மன அழுத்தத்தை எப்படி போக்குவது என்று நீங்கள் கேட்கலாம். மன அழுத்தத்தைக் குறைக்க பல வழிகள் உள்ளன. அதில் ஒன்று உணவுகள்.

|

இன்றைய உலகில் மன அழுத்தம் ஒரு நாள்பட்ட பிரச்சனையாகும். நவீன வாழ்க்கை முறையால், பொறுமை என்ற வார்த்தையையே பலரும் மறந்து, எந்த ஒரு விஷயத்தையும் அவசர அவசரமாக செய்ய வேண்டியிருப்பதால், ஏராளமானோர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை நோம் சந்தித்து வந்த மன அழுத்தம் வேறு. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவலால் வீட்டிலேயே முடங்கியிருக்க வேண்டியுள்ளது. இதனால் ஒருபுறம் வீட்டில் இருக்கிறோம் என்ற சந்தோஷம் இருக்க, மறுபுறம் எவ்வளவு நேரம் வீட்டிலேயே இருப்பது என்ற மற்றொரு வகையான மன அழுத்தம் பலருக்கு ஏற்படுகிறது.

Is The COVID-19 Lockdown Stressing You Out? These Foods Can Help You Be Calm And Relaxed

ஒருவர் மன அழுத்தத்தால் அவஸ்தைப்பட்டால், அவரது உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் பாதிக்கப்படும். இதனால் பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். சரி, கொரோனா லாக்டவுனால் வீட்டிலேயே சும்மா இருந்து உண்டாகும் மன அழுத்தத்தை எப்படி போக்குவது என்று நீங்கள் கேட்கலாம். மன அழுத்தத்தைக் குறைக்க பல வழிகள் உள்ளன. அதில் ஒன்று உணவுகள். நாம் உண்ணும் சில உணவுகள் மன அழுத்தத்தைக் குறைத்து, மனதை அமைதியாகவும், ரிலாக்ஸாகவும் உணர வைக்கும்.

MOST READ: மூட்டு வலி இருந்தால் கொரோனா வைரஸ் எளிதில் தாக்கும் என்பது உண்மையா?

இப்போது லாக்டவுன் காலத்தில் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் உணவுகள் மற்றும் இதர சில செயல்கள் என்னவென்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிக்கன்

சிக்கன்

சிக்கனில் ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ அமிலம் உள்ளது. இது உடலில் சந்தோஷமான உணர்வை அளிக்கும் செரடோனின் ஹார்மோன்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும். மன அழுத்தம் உள்ளவர்கள், அடிக்கடி சிக்கன் சாப்பிடுவதால் மன அழுத்தம், மன இறுக்கம் மற்றும் மன கவலை போன்றவை நீங்கும். ஆகவே இனிமேல் உங்கள் வீட்டில் சிக்கனை பலவாறு சமைத்து சுவைத்து மகிழுங்கள்.

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரி பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் சி போன்றவை அதிகம் உள்ளது. மன அழுத்தத்தில் இருக்கும் போது, ப்ளூபெர்ரியை ஒருவர் சாப்பிட்டால், அது உடலில் உள்ள செல்கள் பாதுகாப்புடன் இருக்க உதவுவதோடு, பழுதடைந்த செல்களை சரிசெய்யும் உதவி புரியும்.

பசலைக்கீரை

பசலைக்கீரை

பசலைக்கீரையில் மக்னீசியம் ஏராளமாக உள்ளது. இது உடலில் கார்டிசோல் அளவை சீராக பராமரிக்க உதவும். மேலும் பசலைக்கீரையில் நார்ச்சத்து வளமாக நிறைந்துள்ளது. இது பசியை சீராக்கி, மன அழுத்தத்தைக் குறைக்க உதவி புரியும்.

பால்

பால்

பாலில் லாக்டியம் என்னும் பொருள் உள்ளது. இது மனதை அமைதிப்படுத்தும் பண்பைக் கொண்டது. மேலும் ஒருவர் பால் குடித்தால், அது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் பாலில் உள்ள மக்னீசியம், தசைவலியில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும்.

சீமைச்சாமந்தி டீ

சீமைச்சாமந்தி டீ

சீமைச்சாமந்தி டீ நரம்புகளை அமைதியடையச் செய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும். மேலும் இது மன அழுத்தம் மற்றும் மன கவலையைப் போக்க பெரிதும் உதவியாக இருக்கும். எனவே ஊரடங்கு காலத்தில் வீட்டில் சாதாரண டீக்கு பதிலாக சீமைச்சாமந்தி டீயைப் போட்டு குடித்து, மன அழுத்தத்தில் இருந்து விடுபடுங்கள்.

மன அழுத்தத்தைப் போக்க உதவும் இதர வழிகள்!

மன அழுத்தத்தைப் போக்க உதவும் இதர வழிகள்!

உடற்பயிற்சி

மன அழுத்தத்தைப் போக்க சிறப்பான ஓர் வழி உடற்பயிற்சி செய்வது. அதுவும் கொரோனாவால் வீட்டில் முடங்கி இருக்கும் போது, நமக்கு நிறைய நேரம் இருக்கும். இதுவரை நீங்கள் ஒரு மணிநேரம் மட்டுமே உங்கள் உடற்பயிற்சிக்கு செலவிட்டிருப்பீர்கள் ஆனால் லாக்டவுன் காலத்தில், நேரம் அதிகம் இருப்பதால், உடற்பயிற்சியை தேவையான காலம் வரை செய்யலாம். அதிலும் வீட்டில் குழந்தைகள் இருந்தால், அவர்களுடன் சேர்ந்து சொல்லிக் கொடுத்துக் கொண்டே செய்வது இன்னும் அருமையாக மனதிற்கு சந்தோஷமாக இருக்கும்.

குடும்பத்துடன் விளையாடலாம்

குடும்பத்துடன் விளையாடலாம்

இதுநாள் வரை நீங்கள் உங்கள் குடும்பத்திற்காக ஓடியாடி உழைத்து, குடும்பத்துடன் போதுமான நேரத்தை செலவிட முடியாமல் இருக்கலாம். ஆனால் இந்த ஊரடங்கு காலத்தில் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து, வீட்டில் தாயம், ராஜா ராணி விளையாட்டு, கேரம், சதுரங்கம் போன்றவற்றை விளையாடலாம், டிவி பார்க்கலாம் அல்லது பட்டம் செய்து விடலாம். இதுப்போன்ற செயல்கள் நிச்சயம் மன அழுத்தத்தை குறைக்க உதவும்.

சமைக்கலாம்

சமைக்கலாம்

உங்கள் வீட்டில் நீங்கள் இதுவரை சமையலறை பக்கமே சென்றதில்லையா? அப்படியானால் உங்கள் நேரத்தை கழிக்க சமையலறை சிறப்பான இடமாக இருக்கும். வீட்டிலேயே இருப்பது போர் அடித்தால், யூடியூப்பில் உள்ள சமையல் வீடியோக்களைப் பார்த்து, வீட்டில் உள்ளோருக்கு புதிதாக எதையேனும் சமைத்து கொடுக்கலாம். வீட்டில் உள்ளோர் அனைவருடனும் சேர்ந்து சமையல் செய்து, ஒவ்வொரு நாளும் புதுவிதமான சமையலை முயற்சித்து உண்ணலாம். இது ஒரு புதுவிதமான அனுபவத்தைக் கொடுப்பதோடு, மன அழுத்தத்தையும் குறைக்கும்.

வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்யலாம்

வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்யலாம்

வீட்டு வேலைகளான வீட்டைப் பெருக்குவது, துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவது, சமைப்பது போன்ற வேலைகளை குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து செய்யலாம். இதனால் குடும்பத்துடனான பிணைப்பு அதிகரிக்கும் மற்றும் மன அழுத்தமும் நீங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is The COVID-19 Lockdown Stressing You Out? These Foods Can Help You Be Calm And Relaxed

Is the COVID-19 lockdown stressing you out? these foods can help you be calm and relazed. Read on...
Story first published: Friday, April 17, 2020, 17:27 [IST]
Desktop Bottom Promotion