For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எச்சரிக்கை... இந்த காயில் புற்றுநோய் உண்டாக்கும் பொருள் இருக்குதாம்... அதை கண்டறியும் அற்புத வழி இதோ!

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) சமீபத்தில் ஒரு சோதனை வீடியோவைப் பகிர்ந்தது. அதில் நாம் சாப்பிடும் பச்சை நிற காய்கறிகள் மற்றும் கீரைகள் கலப்படம் உள்ளதா இல்லையா என்பதை எவ்வாறு சோதிக்கலாம் என உள்ளது

|

ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் குறித்து பேசும் போது, நமக்கு எழும் முதல் கேள்வி, நாம் தற்போது சாப்பிடும் பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆரோக்கியமானது தானா என்பது தான்? நாம் சாப்பிடும் பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆரோக்கியமானதாக இருந்தால் தான், நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும். தற்போது நாம் சாப்பிடும் பல உணவுப் பொருட்கள் கலப்படமிக்கதாக உள்ளது. குறிப்பாக நாம் சாப்பிடும் பச்சை நிற காய்கறிகளில் கூட கலப்படம் உள்ளது என்பது தெரியுமா? ஆம், காய்கறிகள் நன்கு பச்சை நிறத்தில் இருப்பதற்காக மலாக்கிட் பச்சை என்னும் கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது.

How To Identify If Green Veggies Are Adulterated With Cancer Causing Malachite Green Agent

இப்படி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காய்கறிகளில் கலப்படம் இருந்தால், நாம் எப்படி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். இதற்கு என்ன தான் தீர்வு என்று நீங்கள் கேட்கலாம். நம்மால் சந்தைகளில் விற்கப்படும் கலப்படமிக்க காய்கறிகளை கட்டுப்படுத்த முடியாது. ஆனால் நம்மால் கலப்படமிக்க காய்கறிகளை சாப்பிடாமல் இருக்க முடியும். அதற்காக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) சமீபத்தில் ஒரு சோதனை வீடியோவைப் பகிர்ந்தது. அதில் நாம் சாப்பிடும் பச்சை நிற காய்கறிகள் மற்றும் கீரைகள் கலப்படம் உள்ளதா இல்லையா என்பதை எவ்வாறு சோதிக்கலாம் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மலாக்கிட் பச்சை என்றால் என்ன?

மலாக்கிட் பச்சை என்றால் என்ன?

மிகவும் எளிமையாக கூற வேண்டுமானால், மலாக்கிட் பச்சை ஒரு கரிம கலவை ஆகும். இது நிறமளிப்பதற்காக மற்றும் மீன் வளர்ப்பில் நுண்ணுயிர் எதிர்ப்பியாகவும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. அறிக்கைகளின் படி, 1877 -ல் ஹெர்மன் ஃபிஷர் என்பவரால் சல்ப்யூரிக் அமிலம் முன்னிலையில் 1: 2 என்ற மூலக்கூறு விகிதத்தில் பென்சால்டிஹைட் மற்றும் டைமெதிலானிலின் ஒடுக்கம் மூலம் தயாரிக்கப்பட்டது.

மலாக்கிட் பச்சை மற்றும் உணவு கட்டுப்பாடு

மலாக்கிட் பச்சை மற்றும் உணவு கட்டுப்பாடு

2006 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கடல் உணவுகளில் மலாக்கிட் பச்சை பயன்படுத்துவதைக் கண்டறிந்தது. அப்போது இருந்து தான் மீன் வளர்ப்பில் அதன் பயன்பாடு தடை செய்யப்பட்டது.

கலப்பட பொருள்

கலப்பட பொருள்

உணவு ஆராய்ச்சியாளர்களின் படி, மலாக்கிட் பச்சை மிகவும் கொடிய புற்றுநோயை உண்டாக்கக்கூடியது மற்றும் இது இந்திய உணவுத் தொழிலில் இன்னும் நடைமுறையில் உள்ளது. இது பெரும்பாலும் பச்சை மிளகாய், வெள்ளரிக்காய், பட்டாணி, வெண்டைக்காய் மற்றும் கீரைகளில் பசுமையாக இருப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த கெமிக்கலின் ஆபத்தான பக்கவிளைவுகளால் FSSAI சமீபத்தில் ஒரு வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தது. அந்த வீடியோவானது பச்சை நிற காய்கறிகளில் மலாக்கிட் பச்சை இருக்கிறதா இல்லையா என்பதை அறியும் ஒரு எளிய வழியாகும்.

சோதிக்கும் முறை

சோதிக்கும் முறை

* திரவ பாராஃபினில் ஒரு பஞ்சுருண்டையை நனைக்க வேண்டும்.

* பின் அந்த பஞ்சுருண்டையால் வெண்டைக்காயின் ஒரு சிறு பகுதியைத் தேய்க்க வேண்டும்.

* அப்படி தேய்க்கும் போது, பஞ்சுருண்டை பச்சை நிறமாக மாறவில்லை என்றால், வெண்டைக்காய் கலப்படமற்றது.

* ஒருவேளை பச்சை நிறமாக மாறினால், வெண்டைக்காய் கலப்படமிக்கது.

மலாக்கிட் பச்சையின் பக்கவிளைவுகள்

மலாக்கிட் பச்சையின் பக்கவிளைவுகள்

நிபுணர்களின் கூற்றுப்படி, மலாக்கிட் பச்சை என்னும் சாயத்தின் நச்சுத்தன்மையானது, அதன் வெளிப்பாடு நேரம், வெப்பநிலை மற்றும் செறிவு ஆகியவற்றால் அதிகரிக்கிறது. இந்த கெமிக்கல் கலந்த காய்கறிகளை ஒருவர் உட்கொள்ளும் போது, அது புற்றுநோய், மரபணு பிறழ்வு, குரோமோசோமல் எலும்பு முறிவுகள் மற்றும் சுவாச நச்சுத்தன்மையைக் கூட ஏற்படுத்தக்கூடும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Identify If Green Veggies Are Adulterated With Cancer Causing Malachite Green Agent

Want to know how to identify if green veggies are adulterated with cancer causing agent? Read on to know more...
Desktop Bottom Promotion