For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நுரையீரலில் இருக்கும் அழுக்கை வெளியேற்றணுமா? இந்த உணவுகளை தினமும் சாப்பிடுங்க போதும்...

ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த அதிகப்படியான உணவுகள் உண்பது காற்று மாசுபாட்டினால் ஏற்படும் விளைவுகளைக் குறைக்க உதவுவதோடு, நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவும்.

|

ஒருவரது உடல் ஆரோக்கியம் உண்ணும் உணவுகளைப் பொறுத்தது. நல்ல ஊட்டச்சத்துள்ள சீரான உணவை உண்பது ஆரோக்கியமான எடையைப் பராமரிக்கவும், குறிப்பிட்ட சில ஆரோக்கிய பிரச்சனைகளின் ஆபத்தைக் குறைக்கவும் உதவும். இது உங்கள் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும். ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த அதிகப்படியான உணவுகள் உண்பது காற்று மாசுபாட்டினால் ஏற்படும் விளைவுகளைக் குறைக்க உதவுவதோடு, நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

How To Cleanse Your Lungs From Pollution

மாசடைந்த காற்றினை சுவாசிப்பது நுரையீரல் புற்றுநோய், மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் தீவிர நிகழ்வுகளில் முன்கூட்டிய மரணம் போன்ற பல ஆரோக்கிய பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கும். நச்சுக்கள் நிறைந்த அசுத்தமான காற்றை சுவாசிப்பது சுவாசக் குழாய்களில் எரிச்சலூட்டி, அதன் விளைவாக இருமல், மூச்சுத் திணறல், நெஞ்சு வலி மற்றும் ஆஸ்துமா போன்றவற்றை உண்டாக்குகின்றன. இருப்பினும், ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளான ஆரோக்கியமான உணவுகள் மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வதால் நுரையீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

MOST READ: அடிக்கடி வாயு பிரச்சனையை சந்திக்கிறீர்களா? இதோ அதற்கான சில பாட்டி வைத்தியங்கள்!

இப்போது மாசுபட்ட காற்றினை சுவாசித்து நுரையீரலில் தேங்கியுள்ள அழுக்குகளை வெளியேற்றி சுத்தம் செய்ய உதவும் சில உணவுகளைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பீட்ரூட்

பீட்ரூட்

COPD மற்றும் நுரையீரல் உயர் இரத்த அழுத்தம் போன்ற நுரையீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கு பீட்ரூட்டானது உடலின் செயல்திறன் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தக்கூடும் என்று ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது. பீட்ரூட் மற்றும் பீட்ரூட் கீரைகள் இரண்டுமே நைட்ரேட்டுகள் உள்ளிட்ட சேர்மங்களால் நிறைந்தவை. இது நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவி புரியும். மேலும் பீட்ரூட் கீரைகளில் நுரையீரல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் கரோட்டினாய்டுகள் போன்ற வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன.

ஆப்பிள்

ஆப்பிள்

இந்த சுவையான பழத்தில் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது. அதோடு இதில் சுவாச மண்டலத்தை ஆரோக்கியமாக பராமரிக்க உதவும் வைட்டமின்கள் மற்றும் ப்ளேவோனாய்டுகள் அதிகம் நிறைந்துள்ளன. அதிலும் ஆப்பிளில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ப்ளேவோனாய்டு நுரையீரலை சுத்தம் செய்ய உதவுகிறது.

பச்சை இலைக் காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகளான ப்ராக்கோலி, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், கேல், போன்றவற்றில் லிக்னன்கள் அதிகம் உள்ளன. இலை ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்று செயல்பட்டு, நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. எனவே இத்தகைய காய்கறிகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

குடைமிளகாய்

குடைமிளகாய்

குடைமிளகாயில் ஆரோக்கியமான நுரையீரலுக்குத் தேவையான வைட்டமின் சி அதிகம் உள்ளது. வைட்டமின் சி என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், நாள்பட்ட நுரையீரல் நோய் கொண்ட நோயாளிகளுக்கு மிகவும் அவசியமானவை. மேலும் நிபுணர்களும், வைட்டமின் சி உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் ப்ரீ-ராடிக்கல்களை நீக்க உதவி புரிந்து, நுரையீரல் திசு சேதத்தின் அபாயத்தை குறைத்து, திசுக்கள் சரிசெய்வதை ஊக்குவிப்பதாக கூறுகின்றனர்.

மஞ்சள் பூசணிக்காய்

மஞ்சள் பூசணிக்காய்

மஞ்சள் பூசணிக்காய் நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஒரு அற்புதமான காய்கறி. இந்த அடர் நிற காய்கறியில் கரோட்டினாய்டு அதிகம் உள்ளது. அதோடு சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளான பீட்டா-கரோட்டின், லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் போன்றவையும் உள்ளன. அதிகளவிலான கரோட்டினாய்டுகள் சிறப்பான நுரையீரல் செயல்பாட்டுடன் தொடர்புடையதாக ஆய்வுகளும் கூறுகின்றன. எனவே கரோட்டினாய்டு உணவுகளை அதிகம் உண்பது நுரையீரல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

மஞ்சள்

மஞ்சள்

தினமும் மஞ்சளை உணவில் சேர்ப்பது சுவாச பாதைகளில் ஏற்படும் அழற்சி/வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் மஞ்சளில் உள்ள குர்குமின், நுரையீரலை சுத்தம் செய்ய உதவுகிறது மற்றும் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவி புரிந்து, நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. அதற்கு மஞ்சளை அன்றாட சமையலில் சேர்க்கலாம் அல்லது மஞ்சள் தூளை பாலில் கலந்தும் குடிக்கலாம்.

க்ரீன் டீ

க்ரீன் டீ

தற்போது க்ரீன் டீ மக்களிடையே மிகவும் ஆரோக்கியமான டீயாக உள்ளது. இதில் பாலிஃபீனால்கள் அதிகம் இருப்பது, அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளதால், நுரையீரலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவும். ஊட்டச்சத்து பத்திரிக்கை ஒன்றில் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, க்ரீன் டீக்கும் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD)-க்கும் வலுவான தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே தினமும் 2 கப் க்ரீன் டீ குடிப்பது COPD-யின் அபாயத்தைக் குறைக்க உதவுவதாக ஆய்வு ஒன்றிலும் கண்டறியப்பட்டுள்ளது.

புதினா டீ

புதினா டீ

பழங்காலத்தில் சுவாச பிரச்சனைகளுக்கு தீர்வு காண பயன்படுத்தப்பட்ட ஒரு பொருள் தான் புதினா. புதினாவில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. ஒரு கப் சூடான புதினா டீ நுரையீரல் தொற்று மற்றும் நிமோனியாவால் ஏற்படும் சளித் தேக்கம் மற்றும் வீக்கத்தை உடைத்தெறிவதன் மூலும், தொண்டை புண்ணில் இருந்து விடுவிக்கும்.

இஞ்சி

இஞ்சி

முந்தைய காலத்தில் சளி, இருமலுக்கு தீர்வு காண பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு வைத்தியப் பொருள் தான் இஞ்சி. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், சுவாச பாதையில் இருந்து நச்சுக்களை நீக்க உதவுகிறது. மேலும் இதில் பொட்டாசியம், மக்னீசியம், பீட்டா-கரோட்டின் மற்றும் ஜிங்க் போன்ற வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன. சில ஆய்வுகளின் படி, இஞ்சி நுரையீரல் புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழிப்பதாக அறியப்படுகிறது. எனவே குளிர்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்துக் கொள்ளவும், சளி, இருமல் பிரச்சனையில் இருந்து விடுபடவும், இஞ்சியைக் கொண்டு டீ தயாரித்துக் குடிப்பதே சிறந்த வழி.

தேன்

தேன்

தேனில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளதால், இது சுவாச பிரச்சனைகளால் ஏற்படும் அசௌகரியங்களைக் குறைக்க உதவுகிறது. ஆய்வுகளின் படி, தேனில் ஆன்டி-வைரல் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. தேனை தினமும் சாப்பிட்டு வந்தால், சுவாச பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். அதிலும் ஆய்வு ஒன்றில், இரவு தூங்குவதற்கு 30 நிமிடத்திற்கு முன் தேன் சாப்பிடுவது, இருமலில் இருந்து நிவாரணம் கிடைப்பதோடு, தூங்குவதில் சந்திக்கும் பிரச்சனைகளும் நீங்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Cleanse Your Lungs From Air Pollution

As air quality continues to deteriorate in Delhi-NCR, we list some of antioxidant-rich foods that you can incorporate into your diet to cleanse your lungs.
Desktop Bottom Promotion