Just In
- 9 min ago
இந்த தமிழ் புத்தாண்டுக்கு உங்க நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இத சொல்ல மறந்துடாதீங்க...!
- 4 hrs ago
இன்றைய ராசிப்பலன் (13.04.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் விவாதத்தைத் தவிர்த்தால் நல்லது…
- 15 hrs ago
இந்த 6 ராசிகள் அபூர்வமான ராசிகளாம்... இந்த ராசிகளில் குறைவான மக்களே இருக்காங்களாம்... உங்க ராசி என்ன?
- 15 hrs ago
இந்த கோடையில் நீங்க உடற்பயிற்சி செய்யும்போது என்னென்ன செய்யணும் என்னென்ன செய்யக்கூடாது தெரியுமா?
Don't Miss
- Automobiles
புதிய ஸ்கோடா ஆக்டேவியா இந்தியாவில் சோதனை!! இன்னும் சில வாரங்களில் விற்பனையில்...
- News
மாஸ்க்குகள் இல்லை.. வெப்பநிலை சோதனை இல்லை.. மகா கும்பமேளாவில் இதுவரை 102 பேருக்கு கொரோனா
- Sports
தனிப்பட்ட கோபம்.. வலி.. கொத்தாக திருப்பி கொடுத்த தீபக் ஹூடா.. குர்னால் பாண்டியாவிற்கு நெத்தியடி!
- Finance
அதானி குழுமத்துடன் கூட்டணி சேர்ந்த பிளிப்கார்ட்.. அது புதுசா இருக்கே..!
- Movies
தியேட்டரில் ரசிகர்களுடன் படம் பார்த்த கொரோனா பாதித்த நடிகை...வலுக்கும் எதிர்ப்பு
- Education
பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க? ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கலோரி அதிகமாக இருந்தாலும் இந்த உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தான்…
உடல் எடையை குறைக்க விரும்பும் அனைவரும் முதலில் தேர்ந்தெடுக்கும் விஷயம் என்றால், ஆரோக்கியமான உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். அதுவும் கலோரிகள் எவ்வளவு குறைக்க முடியுமோ, அவ்வளவு குறைத்துக் கொள்ள வேண்டும் என்று மனதில் உறுதி எடுத்துக் கொள்வர். நாம் உண்ணும் அனைத்து வகையான உணவிலுமே கலோரிகள் நிறைந்திருக்கின்றன. ஏனென்றால், அத்தகைய கலோரிகள் தான் நம் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகின்றன. அதுமட்டுமல்லாது, உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை பராமரிக்கவும் கலோரிகள் அவசியம்.
சராசரியாக ஒரு நபர் எடுத்துக் கொள்ள வேண்டிய கலோரியின் அளவானது, அவரது வயது, பாலினம் மற்றும் உடலமைப்பை பொறுத்தே கூறப்படுகிறது. உடலுக்கு தேவையான அளவு கலோரியை விட அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் போது தான் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையை சந்திக்க நேரிடுகிறது. மேலும், அவை இதய நோய், டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் புற்றுநோய் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கக் கூடும்.

கலோரி அதிகமாக கொண்ட உணவுகளில் ஆரோக்கியமானவை
கலோரிகள் என்பது அனைத்து உணவுகளிலுமே காணப்படும் ஒன்று தான். அதற்காக கலோரி அதிகமாக உள்ள அனைத்து உணவுகளையுமே ஆரோக்கியமற்றவை என்று கூறிவிட முடியாது. நிறைய உணவுகளில் கலோரிகள் அதிகமாக இருந்தாலும், அவை உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிப்பதோடு, உடல் எடை குறைக்கவும் உதவிடுகிறது. அப்படிப்பட்ட 5 உணவு வகைகளை தான் இப்போது பார்க்கப் போகிறோம்...

வேர்க்கடலை வெண்ணெய் (Peanut butter)
வெண்ணெயில் தான் அளவிற்கு அதிகமாக கலோரி உள்ளது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அப்படியெனில், இந்த வேர்க்கடலை வெண்ணெய் மற்றும் நட்ஸ் வெண்ணெயிலும் கூட அதிகமான கலோரி இருக்க தான் செய்கிறது. ஆம், 1 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை வெண்ணெயில் சுமார் 100 கலோரிகள் உள்ளது. இது கிட்டதட்ட சாதாரண வெண்ணெயில் உள்ள கலோரியின் அளவிற்கு சமம் தான். அதுமட்டுமல்லாது, சாதாரண வெண்ணெயை விட வேர்க்கடலை வெண்ணெயில் அதிகமான புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்பு, பைட்டோநியூட்ரியண்ட்ஸ் ஆகியவை நிறைந்துள்ளன.

சியா விதைகள்
ஆரோக்கிய உணவுகளின் பட்டியலில் சியா விதைகள் நிச்சயம் இடம் பிடிக்கக் கூடியவை. ஏனென்றால், அவற்றில், அதிக அளவில் நார்ச்சத்து, ஒமேகா-3, புரதச்சத்து மற்றும் ஜிங்க் ஆகியவையும் உள்ளன. இந்த சிறு விதையானது, சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சிஎதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. அப்படியெனிலும், சியா விதைகளில் கலோரிகள் அதிகமான தான் உள்ளது. ஒரு டேபிள் ஸ்பூன் சியா விதையில் சுமார் 70 கலோரி உள்ளது என்றால் நம்புவீர்களா?

சீமைத்திணை (Quinoa)
உடல் எடையில் அதீத அக்கறை கொண்ட அனைவரது உணவு பட்டியலிலும் இந்த சீமைத்திணை நிச்சயம் இடம் பிடித்திக்கும். ஆனால், அதை உண்ணும் பலருக்கு அதில் அதிக அளவு கலோரி உள்ளது என்பது தெரிந்திருக்காது. ஒரு கப் சமைக்கப்பட்ட சீமைத்திணையில் (அதாவது, 185 கிராம்) 222 கலோரி உள்ளது. சராசரியாக, 1 கப் சமைத்த பிரவுன் அரிசிக்கு (195 கிராம் ) நிகராகும்.

ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயிலில் இதய ஆரோக்கியத்திற்கு உதவக்கூடிய மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகமாக உள்ளது. அது தவிர, ஒமேகா 6, ஒமேகா 3, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே ஆகியவையும் ஆலிவ் ஆயிலில் உள்ளன. இவை அனைத்தும் மூளையின் சிறப்பான செயல்பாட்டிற்கு உதவுவதோடு, ஆரோக்கியமாக உடல் எடையை பெற்றிடவும் உதவிடும். இருப்பினும், ஆலிவ் ஆயிலில் கொழுப்பு மற்றும் கலோரி அதிகமாக தான் உள்ளது. ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயிலில் 120 கலோரிகளும், 14 கிராம் கொழுப்பும் உள்ளது.

நட்ஸ் கலவை
நட்ஸ் மற்றும் விதைகள் ஆரோக்கியமான சிற்றுண்டியாக பெரும்பாலானோர் விரும்புவதாக கருதப்படுகின்றது. ஆனால், இதில் கலோரிகள் அதிகமாக உள்ளது என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. 100 கிராம் நட்ஸ் கலவையில் 462 கலோரிகள் உள்ளன.