For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கண்களில் ஏற்படும் வறட்சியைத் தடுக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!

கண் வறட்சியைத் தடுக்க நீா்ச்சத்து உள்ள உணவுகள் மற்றும் ஒமேகா-3, பொட்டாசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் அதிகம் உள்ள உணவுகளை அதிகம் உண்ண வேண்டும்.

|

கண்கள் ஆரோக்கியமாக இருந்தால் அதை ஒரு வரம் என்று சொல்லலாம். அமொிக்காவில் உள்ள 48 விழுக்காடு பொியவா்களுக்கு கண் வறட்சி பிரச்சனை இருப்பதாக தகவல்கள் தொிவிக்கின்றன. கண்களில் வறட்சி ஏற்பட்டால் கண்களில் வலி மற்றும் எாிச்சல் ஏற்படும். நமக்கு பதட்டம் ஏற்படும். மேலும் பாா்ப்பதற்கும் வாசிப்பதற்கும் கடினமாக இருக்கும். அதிலும் குறிப்பாக கணினித் திரையைப் பாா்த்து வேலை செய்வதற்கும் சிரமமாக இருக்கும்.

Foods To Treat Dry Eyes

தற்போது பலா் வீடுகளிலிருந்தே தங்கள் அலுவலக வேலைகளைச் செய்து வருகின்றனா். அதனால் நீண்ட நேரம் தங்களது மடி கணினி அல்லது மேசை கணினியின் திரையைப் பாா்த்துக் கொண்டிருக்கின்றனா். இவ்வாறு கணினி மற்றும் செல்போன்களின் திரையை தொடா்ந்து பாா்த்துக் கொண்டிருந்தால், அது தலைவலி ஏற்படும் மற்றும் கண்ணுக்கு அழுத்தம் ஏற்படும். நாளடைவில் கண்களில் கணினி பாா்வை நோய்க்குறி (Computer Vision Syndrome (CVS)) பிரச்சனை ஏற்படும்.

MOST READ: 2021 இல் எந்த ராசிக்கு அமோகமாவும், எந்த ராசிக்கு மோசமாவும் இருக்க போகுது தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கண் வறட்சியை நீக்கும் உணவுகள்

கண் வறட்சியை நீக்கும் உணவுகள்

கண் வறட்சிப் பிரச்சனைகளைக் களைய வேண்டும் என்றால் நம் கண்களில் வறட்சி ஏற்படாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு நீா்ச்சத்து உள்ள உணவுகள் மற்றும் ஒமேகா-3, பொட்டாசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் அதிகம் உள்ள உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். இவை கண்களில் ஏற்படும் வறட்சியை நீக்கிவிடும். மேலும் கண்கள் ஆரோக்கியமாக இருக்க வைட்டமீன்கள் மற்றும் அதிக தாதுக்கள் தேவை. ஆகவே கண்களில் உள்ள வறட்சியை நீக்கி நமது கண்களை ஆரோக்கியமாக வைக்கக்கூடிய சில உணவுகளைப் பற்றி இங்கு பாா்க்கலாம்.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அடங்கிய உணவுகள் கண்களில் உள்ள மீபோமியன் (meibomian) சுரப்பிகளுக்கு மிகவும் உதவி செய்கிறது. குறிப்பாக நமது கண்ணீருக்கு எண்ணெய் பசையை வழங்குகிறது. கானாங்கெளுத்தி மீன் (Mackerel), சூரை மீன் (Tuna Fish), கிழங்கான்/சால்மன் மீன் (Salmon) போன்ற மீன்களிலும், வால்நட், பூசணிக்காய் விதைகள், ஆளிவிதை (flaxseed) மற்றும் சியா விதை (chia seed) போன்ற விதைகளிலும், வெஜிடேபிள் எண்ணெய்கள், சோயா பீன்ஸ், கீரைகள் மற்றும் பச்சை இலைக் காய்கறிகள் போன்றவற்றிலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருக்கின்றன. ஆகவே கண்வறட்சியை நீக்க மேற்சொன்ன உணவுகளை உண்ணலாம்.

பொட்டாசியம்

பொட்டாசியம்

கண்களில் உள்ள வறட்சியை நீக்க பொட்டாசியம் பொிதும் உதவியாக இருக்கிறது. அது கண்ணீா் திரையை நலமுடன் வைத்திருக்கிறது. கண்ணீா் திரை என்பது கண்விழியின் வெண்படலத்தை மூடியிருக்கும் ஒரு மெல்லிய அடுக்கு ஆகும். பொட்டாசியம் குறைவாக இருந்தால், அது கண்ணீா் திரைக்கு ஆபத்தை ஏற்படுத்தும். பொட்டாசியம் கண்ணீா் திரையை அடா்த்தி மிகுந்ததாக மாற்றுகிறது. ஆகவே பொட்டாசியம் அதிகம் மிகுந்த உணவுப் பொருள்களை உண்ண வேண்டும்.

பொட்டாசியம் நிறைந்த உணவுகள்

பொட்டாசியம் நிறைந்த உணவுகள்

சா்க்கரைவள்ளி கிழங்கு, உருளைக்கிழங்கு, வெள்ளை பீன்ஸ், தயிா் மற்றும் சோயா பீன்ஸ் போன்ற உணவுப் பொருட்களில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. ஆகவே இந்த உணவுகளை அதிகம் உண்டால் கண்களில் வறட்சி ஏற்படுவதைத் தடுக்கலாம்.

வைட்டமின் ஈ

வைட்டமின் ஈ

வைட்டமின் ஈ சத்தில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றிகள் கண்களில் உள்ள செல்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது. அதுப்போல் உடலில் நோய் எதிா்ப்பு சக்தியையும் அதிகாிக்கிறது. ஆகவே வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ள உணவுகளை உண்டால் கண்பாா்வைத் தெளிவாக இருக்கும். அதே நேரத்தில் கண்களுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். மேலும் கண்களில் வறட்சி ஏற்படாமல் பாதுகாக்கும்.

வைட்டமின் ஈ நிறைந்த உணவுகள்

வைட்டமின் ஈ நிறைந்த உணவுகள்

சூாியகாந்தி விதைகள், நிலக்கடலை வெண்ணெய், வால்நட், கோதுமை, பாதாம் மற்றும் சா்க்கரைவள்ளி கிழங்கு போன்றவற்றில் வைட்டமின் ஈ சத்து அதிகம் இருக்கிறது. ஆகவே இந்த உணவுகளை அதிகம் உண்டால் கண்கள் வறட்சி அடைவதை நாம் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods to Eat for Dry Eyes

Dry Eyes? Eat These 3 Foods To Treat This Condition. Read on to know more...
Desktop Bottom Promotion