For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெயிலால் உடல் வறட்சியடையாமல் இருக்கணுமா? அப்ப இத சாப்பிடுங்க...

வெயில் அதிகம் இருக்கும் போது உடலில் நீரின் அளவை சரியாக பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால் உடல் வறட்சியடைந்து பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

|

தற்போது வெயிலின் வெப்பத்தை சற்று அதிகமாக உணர்கிறோம். இனி வரவுள்ள காலங்களில் வெயில் அதிகமாக சுட்டெரிக்கும் அளவில் இருக்கும். இந்நிலையில், உடல்நல நிபுணர்கள் வானியல் மாற்றங்கள் உடல் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர். ஆகவே வெயில் அதிகமாக இருக்கும் போது, உண்ணும் உணவுகளில் சற்று அதிக கவனத்தை செலுத்த வேண்டும். ஏனெனில் வெயில் அதிகம் இருக்கும் போது உடலில் நீரின் அளவை சரியாக பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால் உடல் வறட்சியடைந்து பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

Foods To Fulfill The Lack Of Water In Your Body During Summer

தற்போது மதிய வேளையில் அதிக வெயிலாகவும், இரவு நேரத்தில் சற்று குளிராகவும் உள்ளது. இம்மாதிரியான நேரத்தில் நாம் அலட்சியமாக இருந்தால் அது நிலைமையை தீவிரப்படுத்தி மோசமாக்கிவிடும். ஆகவே கோடைக்காலம் வருவதற்கு முன்பே, அக்காலத்திற்கு ஏற்ற உணவை நாம் உட்கொள்ள ஆரம்பிக்க வேண்டும். இப்போது உடல் வறட்சியடையாமல் போதுமான நீர்ச்சத்தைப் பராமரிக்க சாப்பிட வேண்டிய சில உணவுகளைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் மற்ற காய்கறிகளை விட நீர்ச்சத்து மிக அதிகம். வெயில் கொளுத்தும் காலத்தில் வெள்ளரிக்கா சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியம் இன்னும் சிறப்பாக இருக்கும். வெள்ளரிக்காயில் நார்ச்சத்து அதிகம் இருப்பதாக உடல்நல நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே வெள்ளரிக்காயை ஒருவர் வெயில் அதிகம் இருக்கும் காலத்தில் சாப்பிட்டால், உடல் வறட்சி தடுக்கப்படுவதோடு, மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்தும் விடுபடலாம்.

தயிர்

தயிர்

தயிர் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும் ஓர் அற்புதமான பால் பொருள். அதே வேளையில் தயிரை உட்கொண்டால், அது நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதோடு, சருமத்திற்கு நல்ல பொலிவையும் வழங்கும்.

இளநீர்

இளநீர்

வெயில் காலத்தில் உடலை ஆரோக்கியமாகவும், குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள உதவும் ஓர் அற்புதமான பானம் தான் இளநீர். இந்த இளநீர் வயிற்றை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்கிறது. இதுதவிர, தினமும் இளநீர் குடித்து வந்தால், அது புற்றுநோய் எதிராக நல்ல பாதுகாப்பை வழங்கும்.

புதினா

புதினா

புதினா குளிர்ச்சித்தன்மை கொண்ட ஒரு மூலிகை. புதினாவை வெயில் காலத்தில் உணவில் சேர்த்து வந்தால், உடல் வெப்பநிலை சீராக பராமரிக்கப்படுவதோடு, நல்ல புத்துணர்ச்சியுடனும் இருப்போம்.

வெங்காயம்

வெங்காயம்

வெங்காயத்திலும் குளிர்ச்சிப் பண்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே வெயில் காலத்தில் வெங்காயத்தை அன்றாட சாலட்டில் சேர்த்து வருவதோடு, அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். முக்கியமாக வெங்காயத்தை உட்கொண் வந்தால், வெப்ப பக்கவாதத்தத் தவிர்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods To Fulfill The Lack Of Water In Your Body During Summer

Here are some foods to fulfill the lack of water in your body during summer. Read on...
Story first published: Saturday, March 12, 2022, 17:09 [IST]
Desktop Bottom Promotion