For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு கோபம் அதிகமா வருதா? அதுக்கு இந்த உணவுகள் தான் காரணம்!

உணவுகள் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த மட்டும் பயன்படுவதில்லை, ஒருவரது மனநிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. அந்த வகையில் ஒருவரது கோபத்தை சில வகை உணவுகள் அதிகமாக தூண்டும்.

|

மனித உணர்ச்சிகளுள் ஒன்று தான் கோபம். மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் கோபம் வருவது சகஜம் தான். ஆனால் சிலருக்கு கோபம் மிகவும் அதிகமாக வரும். இப்படி கோபம் அதிகமாக வருவதற்கு குணாதிசயம் ஒன்று காரணமாக இருந்தாலும், உணவுகளும் முக்கிய காரணமாகும். உணவுகள் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த மட்டும் பயன்படுவதில்லை, ஒருவரது மனநிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது.

Foods That Can Cause Anger

அந்த வகையில் ஒருவரது கோபத்தை சில வகை உணவுகள் அதிகமாக தூண்டும். ஆயுர்வேத மருத்துவத்தின் படி, மனித உடல் மூன்றாக பிரிக்கப்படுகிறது. அவை பித்த உடல், வாத உடல், கப உடல். எப்போது இவைகளில் ஏற்ற இறக்கம் ஏற்படுகிறதோ, அப்போது மனிதனின் உணர்வுகளிலும் மாற்றங்கள் ஏற்படும். அதாவது அப்போது அதிக கோபம் வருவதோடு, மனம் அதிக பதற்றமடையும்.

உதாரணமாக, ஒருவரது உடலில் பித்தம் அதிகமாக இருந்தால், அதாவது உடலில் வெப்பம் அதிகம் இருந்தால், அதனால் சரும அரிப்பு பிரச்சனைகளை சந்திப்பதோடு, கோபம் அல்லது வெறுப்புணர்வு போன்றவற்றை சந்திக்கக்கூடும். இப்படி பித்தம் ஒருவரது உடலில் அதிகரிக்க உணவுகள் முக்கிய காரணமாக இருப்பதால், இந்த உணவுகளை சற்று தவிர்த்தால், கோபம் அதிகம் வருவதைத் தவிர்க்கலாம்.

இப்போது கோபத்தை அதிகரிக்கும் உணவுகள் எவையென்றும், எந்த உணவுகளை உட்கொண்டால் கோபத்தைக் கட்டுப்படுத்தலாம் என்றும் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தக்காளி

தக்காளி

ஆயுர்வேதத்தின் படி, பித்த உடம்பு உள்ளவர்கள் உடல் வெப்பத்தை அதிகரிக்கும் உணவுகளைத் தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. வெப்பத்தை அதிகரிக்கும் உணவுகளுள் ஒன்றாக தக்காளி கருதப்படுகிறது. ஏனெனில் உடல் வெப்பத்தை அதிகரிக்கும் உணவுகளை உட்கொண்டால், அது கோபத்தை அதிகம் வரவழைக்கும். அதற்காக தக்காளியை முற்றிலும் தவிர்க்க கூறவில்லை.

மாறாக இளநீர், கற்றாழை போன்ற உடலுக்கு குளிர்ச்சியூட்டும் உணவுகளை அதிகம் உண்ண பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் தக்காளியை அளவாக உணவில் பயன்படுத்தவும்.

கத்திரிக்காய்

கத்திரிக்காய்

ஒருவரது உடலில் இருக்கும் பித்த அளவில் இடையூறை ஏற்படுத்தும் மற்றொரு உணவுப் பொருள் தான் கத்திரிக்காய். அதே சமயம் இது கோபத்தையும் அதிகம் வரவழைக்கும் உணவுப் பொருளும் கூட. இதற்கு கத்திரிக்காயில் அசிடிட்டி அதிகம் இருப்பது காரணமாக இருக்கலாம்.

எனவே கத்திரிக்காயை அளவாக உண்பதோடு, உடலை குளிர்ச்சியாக்கும் இளநீர் அல்லது கற்றாழையை சற்று அதிகம் எடுக்க வேண்டும்.

எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள்

எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள்

ஆயுர்வேதத்தின் படி, உடலின் ஒவ்வொரு உறுப்பும் குறிப்பிட்ட உணர்வுகளுடன் தொடர்பு கொண்டுள்ளது. அதில் கல்லீரல் கோபத்தையும், நுரையீரல் சோகத்தையும், இதயம் மன இறுக்கம்/தூக்கமின்மையுடனும், சிறுநீரகம் பயத்தையும், மண்ணீரல்/கணையம் சிந்திப்பது/வேதனையுடனும் தொடர்பு கொண்டுள்ளது. எனவே தான் உணவு ஒவ்வொரு உறுப்புக்களின் செயல்பாட்டிலும் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தி, உணர்வுகளையும் பாதிக்கிறது.

ஆகவே கல்லீரலை பாதிக்கும் உணவுகளைத் தவிர்த்தால், கோபம் அதிகம் வருவதைத் தவிர்க்கலாம். கல்லீரலுக்கு பாதிப்பை உண்டாக்கும் உணவுகளாவன எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள், ஆல்கஹால் போன்றவை.

இப்போது கோபத்தைக் கட்டுப்படுத்த உதவும் உணவுகள் எவையென்று காண்போம்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழத்தை தினமும் சாப்பிடுவதால், அதில் உள்ள வைட்டமின் பி மற்றும் பொட்டாசியம், மனதை ரிலாக்ஸ் அடையச் செய்ய உதவியாக இருக்கும். மேலும் வாழைப்பழம் எளிதில் கிடைக்கக்கூடிய உணவுப் பொருள் என்பதால், இந்த பழத்தை தவறாமல் தினமும் சாப்பிடுங்கள்.

வால்நட்ஸ்

வால்நட்ஸ்

கோபம் அதிகம் வருமா உங்களுக்கு? அப்படியானால் ஸ்நாக்ஸ் வேளையில் நட்ஸ்களுள் ஒன்றான வால்நட்ஸை சாப்பிடுங்கள். இதனால் அதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், சந்தோஷ உணர்வைக் கொடுப்பதோடு, மனதை அமைதியாக வைத்துக் கொள்ளவும் உதவும்.

வேர்க்கடலை வெண்ணெய்

வேர்க்கடலை வெண்ணெய்

வேர்க்கடலை வெண்ணெய் மிகவும் சுவையான உணவுப் பொருள். இதை பிரட் டோஸ்ட் மீது தடவி சாப்பிட்டால், உங்களுக்கு அடிக்கடி வரும் கோபம் குறையும். முயற்சித்துப் பாருங்களேன்.

சாக்லேட்

சாக்லேட்

சாக்லேட் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். அதிலும் டார்க் சாக்லேட்டை சாப்பிட்டால், அதில் உள்ள ஒருவிதமான கெமிக்கல், சந்தோஷமான மனநிலையைத் தரும் எண்டோர்பின்களின் உற்பத்திக்கு உதவி, கோபத்தைக் கட்டுப்படுத்தும்.

ஆரஞ்சு

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தை ஒருவர் அடிக்கடி சாப்பிடுவதன் மூலம், அது உடலில் சந்தோஷமான மனநிலையை உண்டாக்கும் எண்டோர்பின்களின் வெளியீட்டிற்கு உதவி, கோபம் அடிக்கடி வருவதைத் தடுக்கும்.

அவகேடோ

அவகேடோ

அவகேடோ பழத்தில் பி வைட்டமின்கள், பீட்டா கரோட்டீன், லுடின், ஃபோலேட், வைட்டமின் ஈ மற்றும் க்ளுட்டாதியோன் போன்ற உட்பொருட்கள் அதிகம் உள்ளது. இவை உடலில் கொழுப்புக்கள் உறிஞ்சுவதைத் தடுத்து, ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் உண்டாவதைத் தடுத்து, கோபம் வருவதைத் தடுக்கும்.

முட்டை

முட்டை

முட்டையில் புரோட்டீன் மற்றும் வைட்டமின்களான பி, டி போன்றவை வளமான அளவில் நிறைந்துள்ளது. இவை நல்ல மனநிலையைப் பெற உதவுவதோடு, கோபம் வருவதைக் குறைக்கும். எனவே தினமும் ஒரு முட்டை சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods That Can Cause Anger

Here we listed some of the foods that can cause anger. Take a look...
Story first published: Wednesday, September 11, 2019, 15:44 [IST]
Desktop Bottom Promotion