Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
வெண்டைக்காய் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி மொறுமொறுன்னு சிப்ஸ் செஞ்சு சாப்பிடுங்க..
Vendakkai Chips Recipe In Tamil: மாலை நேரத்தில் உங்கள் பிள்ளைகள் சாப்பிட ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா? அதுவும் வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க கேட்கிறார்களா? உங்கள் பிள்ளைகள் சிப்ஸை விரும்பி சப்பிடுவார்களா? அப்படியானால் வழக்கமாக செய்வது போன்று உருளைக்கிழங்கு கொண்டு சிப்ஸ் செய்யாமல், சற்று வித்தியாசமாக வெண்டைக்காய் இருந்தால், அதைக் கொண்டு சிப்ஸ் செய்யுங்கள்.
பொதுவாக வெண்டைக்காயை எப்படி செய்தாலும் அது வழுவழுவென்று இருக்கும். இதனாலேயே பலரது வீட்டில் வெண்டைக்காய் சாப்பிட மறுப்பார்கள். ஆனால் வெண்டைக்காயை சிப்ஸாக செய்யும் போது, அந்த வழவழப்பு ஏதும் இருக்காது, மொறுமொறுவென்று சூப்பராக இருக்கும். முக்கியமாக வெண்டைக்காய் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இப்படி சிப்ஸ் செய்து கொடுத்தால், விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு வெண்டைக்காய் சிப்ஸை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெண்டைக்காய் சிப்ஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெண்டைக்காய் - 250 கிராம்
* கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் வெண்டைக்காயின் இரு முனைகளையும் நீக்கிவிட்டு, நான்கு
மெல்லிய நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1
டேபிள் ஸ்பூன் சோள மாவு மற்றும் 1 டீஸ்பூன் உப்பை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதில் 1 டீஸ்பூன் மிளகாய் தூள், 1 டீஸ்பூன் கரம் மசாலா, 1/2
டீஸ்பூன் மல்லித் தூள் மற்றும் 1/2 டீஸ்பூன் சீரகத் தூள் ஆகியவற்றை
சேர்க்க வேண்டும்.
* பிறகு அனைத்தையும் ஒருசேர கலந்து விட்டு, அத்துடன் நறுக்கிய
வெண்டைக்காய் துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.
* பின் லேசாக நீரைத் தெளித்து பிரட்டி விட வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், வெண்டைக்காய் துண்டுகளைத் தூவி
பொன்னிறமாக பொரித்து எடுத்தால், வெண்டைக்காய் சிப்ஸ் தயார்.



Click it and Unblock the Notifications