Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
2 தக்காளியும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு சாப்பிடுங்க..
Tomato Chips Recipe In Tamil: மாலை வேளை வந்தாலே உங்கள் பிள்ளைகள் சாப்பிட ஏதாவது கேட்டுக் கொண்டே இருப்பார்களா? எவ்வளவு ஸ்நாக்ஸை கடைகளில் வாங்கினாலும், அது நொடியில் காலியாகிவிடுகிறதா? அப்படியானால் உங்கள் வீட்டில் தக்காளியும், கோதுமை மாவும் இருந்தால், அவற்றைக் கொண்டு மொறுமொறுவென்று சூப்பரான தக்காளி சிப்ஸ் செய்யுங்கள்.
இந்த சிப்ஸை செய்தால், இனிமேல் கடைகளில் எதுவும் வாங்கமாட்டீர்கள். அந்த அளவில் சுவை பிரமாதமாக இருக்கும். முக்கியமாக ஒருமுறை இந்த சிப்ஸை வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், பின் அடிக்கடி செய்து கொடுக்கச் சொல்லி கேட்பார்கள்.

உங்களுக்கு தக்காளி சிப்ஸை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி சிப்ஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தக்காளி - 2
* மைதா - 1/2 கப்
* கோதுமை மாவு - 1/2 கப்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* எலுமிச்சை - பாதி
* உப்பு - சுவைக்கேற்ப
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சோள மாவு - 1 டீஸ்பூன்
சீசனிங்கிற்கு...
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மேகி மசாலா பாக்கெட் - 1
* எலுமிச்சை - பாதி
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் தக்காளியை துண்டுகளாக்கி சேர்த்து, நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் மைதா, கோதுமை மாவு, காஷ்மீரி மிளகாய்
தூள், மஞ்சள் தூள், பாதி எலுமிச்சையின் சாறு, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் அரைத்த தக்காளியை சேர்த்து, அத்துடன் சோள மாவு மற்றும் 1
டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு மென்மையாக
பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த மாவை நன்கு மெல்லியதாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு முட்கரண்டியைக் கொண்டு ஆங்காங்கு குத்தி விட
வேண்டும்.
* அதன் பின் கத்தியால் முதலில் சதுரத் துண்டுகளாக வெட்டி, பின்
முக்கோணங்களாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், துண்டுகளாக்கப்பட்டதை சேர்த்து,
பொன்னிறமாக பொரித்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு கிண்ணத்தில் சீசனிங்கிற்கு காஷ்மீரி மிளகாய் தூள்,
மாங்காய் தூள், சுவைக்கேற்ப உப்பு, மேகி மசாலா பாக்கெட் சேர்த்து
கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அந்த பொடியை ப்ரை செய்த சிப்ஸ் உடன் சேர்த்து, மேலே பாதி
எலுமிச்சையை சேர்த்து கிளறினால், சுவையான மற்றும் மொறுமொறுப்பான
தக்காளி சிப்ஸ் தயார்.



Click it and Unblock the Notifications