Latest Updates
-
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
ஐயங்கார் ஸ்டைல் வெண்டைக்காய் மோர் குழம்பு
கோடைக்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பலரும் மதிய வேளையில் அதிக காரமான உணவுகளை சாப்பிட விரும்பமாட்டோம். ஆனால் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும் தயிர்/மோர் கொண்டு குழம்பு செய்து சாப்பிட்டால், அது மதிய வேளையில் சாப்பிட நன்றாக இருப்பதோடு, உடலை குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ளும். மோர் குழம்பு பலவாறு செய்வார்கள். அதில் ஐயங்கார் ஸ்டைல் வெண்டைக்காய் மோர் குழம்பு மிகவும் பிரமாதமாக இருக்கும்.
இந்த வகை மோர் குழம்பிற்கு பூண்டு, கரம் மசாலா என்று எதுவுமே தேவைப்படாது. மேலும் இந்த மோர் குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட்ட அட்டகாசமாக இருக்கும். பேச்சுலர்களும் இந்த ரெசிபியை முயற்சிக்கலாம். உங்களுக்கு ஐயங்கார் ஸ்டைல் வெண்டைக்காய் மோர் குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

கீழே ஐயங்கார் ஸ்டைல் வெண்டைக்காய் மோர் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெண்டைக்காய் - 8
* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
வறுத்து அரைப்பதற்கு...
* துவரம் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* வெந்தயம் - 2 டீஸ்பூன்
* சீரகம் - 2 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி - 1/2 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
* வரமிளகாய் - 2
* கொத்தமல்லி - சிறிது
* தண்ணீர் - தேவையான அளவு
மோர் குழம்பிற்கு...
* தயிர் - 250 மிலி
* தண்ணீர் - 100 மிலி
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* நெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* வரமிளகாய் - 3
செய்முறை:
* முதலில் துவரம் பருப்பை வெதுவெதுப்பான நீரில் 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெந்தயம், பச்சை மிளகாய், இஞ்சி, வரமிளகாய் சேர்த்து நன்கு மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.
* பின் வறுத்த பொருட்களை குளிர வைத்து, அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் ஊற வைத்துள்ள துவரம் பருப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, அதோடு துருவிய தேங்காய், கொத்தமல்லி, சீரகம் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், வெண்டைக்காயை சேர்த்து, மேலே சிறிது உப்பு தூவி மொறுமொறுப்பாக வறுத்து இறக்கி, வெண்டைக்காயை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுதை சேர்த்து, தயிர் நீர் சேர்த்து நன்கு மோராக அடித்து, அதையும் அரைத்த விழுதுடன் சேர்த்து அடுப்பில் வைத்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து, மிதமான தீயில் வைத்து அடிப்பிடிக்காத வகையில் நன்கு கிளறி விட வேண்டும்.
* குழம்பானது சற்று கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் வதக்கி வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து கிளறி, ஒரு கொதி விட்டு இறக்க வேண்டும்.
* பின்னர் வெண்டைக்காய் வதக்கிய வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து சூடானதும், கடுகு, பெருங்காயத் தூள் மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்து, மோர் குழம்பில் ஊற்றி கிளறினால், சுவையான ஐயங்கார் ஸ்டைல் வெண்டைக்காய் மோர் குழம்பு தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications
