Latest Updates
-
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
40 வயதை எட்டிய ஒவ்வொரு ஆணும் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!
40 வயதில் உடல் வலுவாக மற்றும் ஆரோக்கியமாக இருக்க உண்ணும் உணவுகளில் கவனம் செலுத்தினாலே போதும். அத்துடன் தினசரி உடற்பயிற்சிகளிலும் ஈடுபட வேண்டும்.
என்ன தான் வயது என்பது வெறும் எண்ணாக இருந்தாலும், அந்த வயது அதிகரிக்கும் போது, அதன் தாக்கம் உடல் மற்றும் மனதில் நன்கு தெரியும். குறிப்பாக 40 வயதில் ஒவ்வொருவரும் தங்களின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும். அதுவும் ஆண்கள் 40 வயதில் சற்று கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். ஆய்வு ஒன்றானது ஒவ்வொரு ஆண்டும் ஆண்களின் உடலில் 1% என்ற விகிதத்தில் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி குறைந்து, 40 வயதில் மனநிலை மாற்றங்கள், எடை இழப்பு, பாலியல் ஆசை குறைவு மற்றும் உடல் பலவீனம் போன்றவற்றை ஏற்படுத்துவதாக கூறுகிறது.

எனவே 40 வயதில் உடல் வலுவாக மற்றும் ஆரோக்கியமாக இருக்க உண்ணும் உணவுகளில் கவனம் செலுத்தினாலே போதும். அத்துடன் தினசரி உடற்பயிற்சிகளிலும் ஈடுபட வேண்டும். இப்போது 40 வயதிலும் 20 வயதுக்குரிய பலத்துடன் இருக்க ஆண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னவென்பதைக் காண்போம். உங்களுக்கு 40 வயதாகிவிட்டால், இந்த உணவுகளை தினமும் சாப்பிட முயற்சி செய்யுங்கள்.

தர்பூசணி
40 வயதை எட்டிய ஆண்கள் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் விறைப்புத்தன்மை கோளாறு. இந்த பிரச்சனையை சரிசெய்ய உதவும் ஒரு அற்புதமான உணவுப் பொருள் தான் தர்பூசணி. இந்த தர்பூசணியில் உள்ள சிட்ருலின் என்னும் அமினோ அமிலம் இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்து, உடல் முழுவதும் குறிப்பாக ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, பாலியல் செயல்பாட்டை மேம்படுத்தும்.

பூண்டு
40 வயதைத் தொடும் ஆண்கள் தினமும் தங்களின் உணவில் பூண்டை சேர்த்து வருவதன் மூலம், தமனிகளின் சுவர்களில் கொழுப்புகள் படிவது நிறுத்தப்படுவதாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு மட்டுமின்றி, விறைப்புத்தன்மை பிரச்சனையும் ஏற்படாது.

அத்திப்பழம்
அத்திப்பழம் கருவளம் மற்றும் பாலியல் செயல்பாட்டை மேம்படுத்த உதவும் ஒரு அற்புதமான பழம். இதற்கு அதில் உள்ள அதிகப்படியான வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் தான் காரணம். அதுவும் உலர்ந்த அத்திப்பழத்தை இரவு தூங்கும் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதை மசித்து வெதுவெதுப்பான பாலில் சேர்த்து கலந்து வெறும் வயிற்றில் குடிப்பது பாலியல் திறன்களை மேம்படுத்துவதாக நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

தயிர்
தயிர் 40 வயதை எட்டிய ஆண்கள் சாப்பிட வேண்டிய உணவுகளுள் ஒன்று. இதை தினமும் உட்கொள்ளும் போது, அதில் கால்சியம் மற்றும் ஃபுருக்டோஸ் அதிகமாக இருப்பதால், இது ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்கிறது, உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது, உடல் பருமனைக் குறைக்கிறது மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

வால்நட்ஸ்
மூளையின் தோற்றத்தைக் கொண்ட வால்நட்ஸ் முதுமை செயல்பாட்டை மெதுவாக்குவதோடு, முதுமை தொடர்பான பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கிறது. இந்த நட்ஸில் வைட்டமின் ஈ, மெலடோனின் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. இதில் ஃப்ளேவோனால் மோரின் உள்ளதால், புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். முக்கியமாக இது எடையைக் குறைக்க நினைப்போருக்கான சிறந்த ஸ்நாக்ஸ்.

பசலைக்கீரை
பசலைக்கீரை பெண்களுக்கு மட்டுமின்றி, ஆண்களுக்கும் நல்லது. ஏனெனில் இது சர்க்கரை நோயைத் தடுப்பதோடு, எலும்பு தொடர்பான நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது. எனவே முதுமையில் சந்திக்கும் எலும்பு தொடர்பான பிரச்சனைகளைத் தவிர்க்க வேண்டுமானால், பசலைக்கீரையை வாரத்திற்கு 2 முறை உணவில் சேர்த்து வாருங்கள்.

க்ரீன் டீ
க்ரீன் டீயை தினமும் குடித்து வருவது இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதோடு, இதய நோய் மற்றும் பக்கவாதத்தின் அபாயத்தைத் தடுப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், 40 வயதிற்கு மேலான ஆண்கள் தினமும் க்ரீன் டீயைக் குடித்து வந்ததில், புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயம் குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது.

கத்திரிக்காய்
காய்கறிகளில் கத்திரிக்காய் மிகவும் ஆரோக்கியமான மற்றும் ஏராளமான சத்துக்களைக் கொண்ட காய்கறி. முக்கியமாக கத்திரிக்காயில் புற்றநோயை எதிர்க்க உதவும் 13 வகையான பீனோலிக் அமிலங்கள் உள்ளன. அதோடு, அவை உடலினுள் நோய்களை வரவழைக்கும் மற்றும் முதுமையை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கல் சேதங்களை எதிர்த்துப் போராடுகின்றன. எனவே 40 வயதிற்கு மேலான ஆண்கள் கத்திரிக்காயை அடிக்கடி உணவில் சேர்ப்பது நல்லது.

ப்ராக்கோலி
40 வயதிற்கு மேல் ஆண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய ஒரு காய்கறி தான் ப்ராக்கோலி. ஏனெனில் ப்ராக்கோலியில் வைட்டமின் சி அதிகம் இருப்பதைத் தவிர, கால்சியம் மற்றும் இரும்புச்சத்தும் ஏராளமான அளவில் உள்ளன. இவை உடலில் இரத்த ஓட்டத்தை சிறப்பாக வைப்பதோடு, ஆஸ்டியோபோரோசிஸ், புற்றுநோய் மற்றும் சருமம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்த்தப் போராடவும் உதவுகின்றன.

பால்
பால் குழந்தைகளுக்கு மட்டுமின்றி வயது அதிகரிக்கும் போது, குறிப்பாக 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் அவசியம் குடிக்க வேண்டிய பானம். ஏனெனில் பாலில் புரோட்டீன்கள், கால்சியம், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் உள்ளன. எனவே 40 வயதிற்கு மேல் உங்கள் எலும்புகளும், தசைகளும் வலுவாக இருக்க வேண்டுமானால், தினமும் ஒரு டம்ளர் பால் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications