For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நுரையீரலில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில அற்புதமான வழிகள்!

அதிகப்படியான சளியை அகற்றுவதற்கு ஒருசில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. இவை சுவாசிப்பதை எளிதாக்குவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

|

கபம் என்பது ஒரு வகையான சளி. இது நுரையீரல் மற்றும் சுவாசக் குழாயில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது ஒருவர் நீண்ட காலம் உடல்நல குறைவால் பாதிக்கப்படும் போது கவனிக்கத்தக்க ஒன்றாக உள்ளது. ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது கூட, உடலின் சில பகுதிகளில் சளி உருவாகிறது. இது இந்த பகுதிகளை உலர்த்தாமல் பாதுகாக்கிறது மற்றும் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் போன்றவற்றிற்கு எதிராக உடலைப் பாதுகாக்க உதவுகிறது. சில வகை சளி ஆரோக்கியமான உடலுக்கு தேவைப்படுகிறது. ஆனால் பொதுவான சளி, காய்ச்சல், மூக்கு, தொண்டை அல்லது நுரையீரலில் எரிச்சல், ஒவ்வாமை, இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய், புகைப்பிடித்தல் அல்லது நுரையீரல் நோய்களான நிமோனியா, சிஓபிடி, நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றால் உடலில் சளி அதிகமாக ஏற்படலாம்.

Foods In Your Kitchen Shelf That Can Help Eliminate Excess Smelly Mucus

குறிப்பாக மழைக்காலம் அல்லது குளிர்காலங்களில் நிறைய பேர் சளித் தொல்லையால் அதிகம் அவஸ்தைப்படுவார்கள். உடலில் சளி அதிகம் தேங்குவதைக் கட்டுப்படுத்த சில வழிகள் உள்ளன. அதில் சுற்றியுள்ள காற்றை சுத்தமாக வைத்திருத்தல், அதிகளவு திரவங்களைப் பருகுவது, இருமல் வரும் போது வெளிவரும் சளியை துப்புவது, உப்பு நீரால் வாயைக் கொப்பளிப்பது மற்றும் சரியான மருந்துகளை எடுத்துக் கொள்வது போன்றவை அடங்கும்.

MOST READ: கொரோனா இந்த வகை இரத்த பிரிவினரின் நுரையீரல், சிறுநீரகங்களை சேதப்படுத்துமாம்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இருப்பினும் அதிகப்படியான சளியை அகற்றுவதற்கு ஒருசில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. இவை சுவாசிப்பதை எளிதாக்குவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்போது நாம் பார்க்கப்போவது, உடலில் உள்ள அதிகப்படியான சளியை அகற்ற உதவும் சில உணவுகளைப் பற்றி தான். வாருங்கள் அவை எந்தெந்த உணவுகள் என்பதைக் காண்போம்.

MOST READ: 28 நாட்கள் ரூபாய் நோட்டுகளில் உயிருடன் இருக்கும் கொரோனா வைரஸை எப்படி அழிக்கலாம்? இத படிங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இஞ்சி

இஞ்சி

இஞ்சியில் உள்ள ஆன்டி-வைரல் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பண்புகள், நெஞ்சு பகுதியில் தேங்கியுள்ள சளியை எளிதில் வெளியேற்ற உதவி புரியும். அதற்கு இஞ்சியை நீரில் தட்டிப் போட்டு நன்கு கொதிக்க வைத்து, அதில் தேன் சேர்த்து, தினமும் சில முறை குடிக்க வேண்டும். இவ்வாறு குடிப்பதால், உடலில் இருக்கும் அதிகப்படியான சளி அகற்றப்படும்.

கெய்ன் மிளகு (Cayenne Pepper)

கெய்ன் மிளகு (Cayenne Pepper)

மிளகாயில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று கெய்ன் மிளகு. இது சிவப்பு மிளகாய் போன்ற தோற்றத்தைக் கொண்டது. ஆனால் இது சிவப்பு மிளகாயை விட 10 மடங்கு அதிகமான காரத்தைக் கொண்டது. இந்த வகை மிளகாய் அதிகப்படியான இருமல் மற்றும் சளியை நீக்க உதவக்கூடியது. இதில் உள்ள கேப்சைசின் என்னும் பொருள், சளியை இளகச் செய்து எளிதில் வெளியேற்ற உதவுகிறது.

பூண்டு

பூண்டு

பூண்டு உடலில் உள்ள சளியை உடைத்தெறிய உதவும் ஒரு அற்புதமான உணவுப் பொருள். பூண்டில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள், வைரஸ், பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றுக்களால் சுவாச சுரப்பிகளில் உருவாகும் அதிக சளியை எதிர்த்துப் போராட உதவுகின்றன. எனவே உங்கள் உணவில் அதிக பூண்டு சேர்த்துக் கொள்வது உடலில் இருந்து அதிகப்படியான சளியை நீக்க உதவும்.

அன்னாசி

அன்னாசி

அன்னாசிப்பழம் சளி பிடிக்கும் என்று பலரும் நினைப்பதுண்டு. ஆனால் அன்னாசி சளியை நீக்க உதவும் ஒரு அற்புதமான பழம். அன்னாசி சாற்றில் புரோமிலைன் என்னும் நொதிக் கலவை உள்ளது. மேலும் இதில் உள்ள சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆஸ்துமா மற்றும் அழற்சியுடன் தொடர்புடைய சுவாச பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும். அதோடு அன்னாசி ஜூஸில் உள்ள மியூகோலைடிக் பண்புகள் சளியை முறித்து எளிதில் வெளியேற்ற உதவி புரியும்.

வெங்காயம்

வெங்காயம்

சளி, இருமல், காய்ச்சல், குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் தொண்டை புண் ஆகியவற்றைக் கையாள வெங்காயம் உதவும். அதோடு இது அதிகப்படியான இருமலை நீக்கவும் உதவும். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் துருவிய வெங்காயத்தை நீரில் போட்டு 6-8 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் இந்த நீரை தினமும் 3-4 டேபிள் ஸ்பூன் குடிக்க வேண்டும். இதனால் அதிகப்படியான இருமல் நீங்கி, ஆரோக்கியமும் மேம்படும்.

ஏலக்காய்

ஏலக்காய்

ஏலக்காய் உடலில் அதிகப்படியான சளி உருவாவதைக் குறைக்க உதவுகிறது. பாரம்பரியமாக ஏலக்காய் உணவு உட்கொண்ட பின் நல்ல செரிமானத்திற்கு எடுக்கப்படுகிறது. இது சளி ஜவ்வுகளைப் பாதுகாப்பதன் மூலம், உணவை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது. மேலும் இது ஜீரணிக்க கடினமாக இருக்கும் கனமான உணவுகளில் சளியை திரவமாக்குகிறது.

இப்போது உடலில் உள்ள துர்நாற்றமிக்க சளியை உடைத்து வெளியேற்ற உதவும் சில பானங்களைப் பார்ப்போம்.

பானம் #1

பானம் #1

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 டம்ளர் நீரை ஊற்றி, அதில் சிறிது இஞ்சியைத் தட்டிப் போட்டு, 3 மிளகு, ஒரு சிறு துண்டு பட்டை, 1 ஏலக்காய், 1 ஒரு பூண்டு பல்லை தட்டிப் போட்டு கொதிக்க வைத்து, இறக்கி, சுவைக்கு தேன் சேர்த்து கலந்து வெதுவெதுப்பான நிலையில் குடிக்க வேண்டும்.

பானம் #2

பானம் #2

நற்பதமான கேரட்டின் தோலை நீக்கிவிட்டு, அதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து, வடிகட்டி சாறு எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து குடிக்க, உடலில் உள்ள அதிகப்படியான சளி முறிந்து வெளியேறும்.

பானம் #3

பானம் #3

சுத்தமான தேனை ஒரு டேபிள் ஸ்பூன் அப்படியே சாப்பிடலாம் அல்லது வெதுவெதுப்பான பானங்களுடன் சேர்த்து உட்கொள்ளலாம். ஆனால் தேனை சூடான பானங்களுடன் சேர்த்தால், அதில் உள்ள உட்பொருட்கள் மாற்றமடைவதோடு, நன்மைகளும் குறைந்துவிடும். ஆகவே முடிந்த அளவு தேனை அப்படியே சாப்பிட முயற்சி செய்யுங்கள்.

ஆவி பிடிப்பது

ஆவி பிடிப்பது

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் 1 டேபிள் ஸ்பூன் ஓமத்தை சேர்த்து 1 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, அந்நீரில் 5 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். இதனால் நெஞ்சுப் பகுதியில் தேங்கியுள்ள அதிகப்படியான சளி இளகி எளிதில் வெளியேறும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods In Your Kitchen Shelf That Can Help Eliminate Excess Smelly Mucus

Here are some foods in your kitchen shelf that can help eliminate excess smelly mucus. Read on...
Desktop Bottom Promotion