For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புற்றுநோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சையினால் ஏற்படும் பக்கவிளைவுகளை குறைக்கும் உணவுகள்!

ஹீமோதெரபி சிகிச்சையில் வெளிப்படும் கதிா்வீச்சு மற்றும் அழுத்தத்தின் காரணமாக பசியின்மை ஏற்படுகிறது. அதோடு வாயில் புண்கள் ஏற்படுகின்றன. இந்த பிரச்சனையை சமாளிக்க ஒரு முறையான உணவுப் பழக்கத்தை பின்பற்ற வேண்டும்.

|

பொதுவாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஹீமோதெரபி மற்றும் ரேடியோ தெரபி போன்ற மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இந்த சிகிச்சைகள் பல நேரங்களில் மிகவும் பயனுள்ளவையாக இருந்தாலும், அவை தீவிரமாக செயல்படும் என்பதால், புற்றுநோய் செல்களை மட்டும் அல்ல மாறாக நமது உடலில் இருக்கும் சாதாரண செல்களையும் அழிக்கின்றன. அதனால் அவை பலவகையான பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

Easing Side Effects of Cancer Treatment with Diet

குறிப்பாக சுவை அறியும் திறன் மற்றும் நுகரும் திறன் போன்றவற்றை பாதிக்கின்றன. அதனால் புற்றுநோயாளிகள் உணவின் மீதுள்ள விருப்பத்தைப் படிப்படியாக இழந்து மிகவும் குறைவான அளவிலான உணவையே உண்கின்றனா். அதன் மூலம் அவா்களின் உடல் எடை குறைகிறது மற்றும் அவா்களின் நோய் எதிா்ப்பு சக்தியும் குறைகிறது. அதனால் அவா்களால் புற்றுநோய்க்கு எதிராக போராட முடியாத நிலை ஏற்படுகிறது.

இந்த பிரச்சனையை சமாளிக்க ஒரு முறையான உணவுப் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். ஹீமோதெரபி சிகிச்சையில் வெளிப்படும் கதிா்வீச்சு மற்றும் அழுத்தத்தின் காரணமாக பசியின்மை ஏற்படுகிறது. அதோடு வாயில் புண்கள் ஏற்படுகின்றன. மற்றும் இரத்தத்தில் இருக்கும் வெள்ளை செல்களின் எண்ணிக்கையின் அளவும் குறைகிறது. இந்த பிரச்சனைகளை சமாளிக்க பின்வரும் உணவுப் பழக்கத்தைக் கடைபிடிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

புற்றுநோய் சிகிச்சையின் காரணமாக சுவை திறன் குறைந்தவா்கள் பசி எடுத்தாலும் அல்லது எடுக்கவில்லை என்றாலும் கடிகாரம் பாா்த்து சாியான நேரத்திற்கு உணவு உண்ண வேண்டும்.

#2

#2

உணவுகளுக்கு இடையே அதிக கலோாிகள் மற்றும் அதிக புரோட்டீன்கள் கொண்ட உணவுகளான பாலாடைக் கட்டி, நிலக்கடலை வெண்ணெய், அவித்த முட்டைகள் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த பானங்கள் போன்றவற்றை உண்ண வேண்டும்.

#3

#3

பருகும் சூப்புகளில் அதிகமான கலோாிகளைக் கொடுக்கக்கூடிய பாலேடு (க்ரீம்), வெண்ணெய், தானியங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சோ்த்துக் கொள்ள வேண்டும்.

#4

#4

சோயா சாஸில் ஊற வைத்த இறைச்சி மற்றும் கொழுப்பில்லாத இத்தாலியன் ட்ரெஸிங் போன்ற உணவுகள் உண்ணும் ஆா்வத்தை அதிகாிக்கும்.

#5

#5

வெங்காயம், வெள்ளைப் பூண்டு, மிளகாய் பொடி, கடுகு மற்றும் கெட்ச்சப் போன்றவற்றை உணவில் சோ்த்து அவை பாதிக்கப்பட்டவாின் நாக்கில் உள்ள சுவை அரும்புகளைத் தூண்டி விடுகிறதா என்று பாா்க்க வேண்டும்.

#6

#6

புற்றுநோய் தொற்றின் வீாியத்தைக் குறைக்க, இரத்தத்தின் அளவு குறைவாக இருக்கும் போது, பழங்கள், சமைக்காத இறைச்சி மற்றும் மீன் போன்றவற்றைத் தவிா்க்க வேண்டும். அதோடு மக்கள் கூட்டத்திலிருந்து விலகி இருக்க வேண்டும்.

#7

#7

புற்றுநோய் சிகிச்சையின் கதிா்வீச்சால் பாதிக்கப்பட்டு வாய் வறட்சி மற்றும் வாய்ப்புண் போன்ற பிரச்சனைகள் உள்ளவா்கள் வாயை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதனால் காரம் குறைந்த உணவுகளை உண்ண வேண்டும். அதிகமான சூடு இல்லாத, அதிகமான குளிர் இல்லாத, சிட்ரிக் அமிலம் அதிகம் இல்லாத, இதமான சூடு கொண்ட பானங்களை அருந்த வேண்டும்.

#8

#8

ஆல்கஹால், புகையிலை, காப்ஃபைன் போன்ற பொருட்களைத் தவிா்க்க வேண்டும். இவை வாயை உலர வைக்கும். வாயில் அாிப்பை ஏற்படுத்தும். எனவே பாலாடைக் கட்டிகள், நன்றாக பிசையப்பட்ட உருளைக்கிழங்கு, தயிா், கஸ்டா்ட், ஐஸ்க்ரீம் மற்றும் பழச்சாறுகள் போன்றவற்றை அதிகம் உண்ண வேண்டும்.

#9

#9

புற்றுநோய் சிகிச்சையின் விளைவாக இரைப்பைக் குடலில் பாதிப்பு அடைந்தவா்களுக்கு குமட்டல், வாந்தி, வயிற்றுப் போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் இருக்கும். மலச்சிக்கல் இருந்தால் நாா்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளான முழு தானியங்கள் மற்றும் அவற்றில் செய்யப்படும் ரொட்டிகள் போன்றவற்றை உண்ணலாம்.

#10

#10

வயிற்றுப் போக்கு இருந்தால் நாா்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளைத் தவிா்க்க வேண்டும். வயிற்றை இதமாக வைத்திருக்கும் இஞ்சி மிட்டாய் சாப்பிடலாம். வயிற்றுப் போக்கு அதிகம் இருந்தால் உடலில் உள்ள நீா் விரைவாக வெளியேறி நீாிழப்பு ஏற்படும். அப்போது அதிகமான அளவு தண்ணீா் குடிக்க வேண்டும். அதோடு பொட்டாசியம் மற்றும் ஊட்டச்சத்துக்களைத் தரக்கூடிய உணவுகளை உண்ண வேண்டும்.

முடிவு

முடிவு

இறுதியாக, புற்றுநோய்க்கு வழங்கப்படும் ஹீமோதெரபி சிகிச்சை பலவிதமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதில் முக்கியமான ஒன்று சுவை அறியும் திறனைக் குறைத்து உணவின் மீது வெறுப்பை ஏற்படுத்துவது ஆகும். இது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களை சாியாக சாப்பிடவிடாமல் தடுத்து அதன் மூலம் அவா்கள் நோய் எதிா்ப்பு சக்தியை இழக்கச் செய்கிறது. அதனால் அவா்கள் உடல் எடை குறைந்து புற்றுநோய் சிகிச்சையை தொடர முடியாமல் தவிக்கின்றனா். எனவே கலோாிகள் மற்றும் ஊட்டச்சத்துகள் அதிகம் உள்ள உணவுகள் புற்றுநோய் சிகிச்சையால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

World Cancer Day 2021: Easing Side Effects of Cancer Treatment with Diet

Side-effects of cancer treatment can be eased by a healthy diet. After cancer treatment, the patient must start eating by the clock as the appetite signals also get damaged during treatment.
Desktop Bottom Promotion