Just In
- 14 hrs ago
உங்க கணவன் அல்லது காதலனுக்கு இந்த விஷயங்கள் மட்டும் தெரிஞ்சிருந்தா நீங்க கொடுத்து வச்சவங்களாம்!
- 15 hrs ago
உங்க காலில் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க இரத்தத்தில் சர்க்கரை ஆபத்தான அளவில் இருக்குனு அர்த்தம்... உஷார்!
- 18 hrs ago
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று மகாத்மா காந்தி அவா்கள் எங்கு இருந்தாா் தெரியுமா?
- 22 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் யாரிடமும் எதையும் எதிர்பார்த்திட வேண்டாம்...
Don't Miss
- News
"உங்களுக்கு ஒரு நியாயம்.. ஊருக்கு ஒரு நியாயமா?" கனல் கண்ணன் கைது.. கொந்தளித்த பாஜக அண்ணாமலை
- Finance
சர்வதேச ரெசசனை இந்தியா தோற்கடிக்குமா.. ஏற்றுமதி என்னவாகும்?
- Movies
இனி தம்பதியாக இருக்க முடியாது..கணவரை விட்டு பிரிகிறேன்..பகீர் தகவலை வெளியிட்ட பிக் பாஸ் பிரபலம்!
- Automobiles
சுதந்திர தினத்தில் இந்தியர்களுக்கு விருந்து வைத்த மஹிந்திரா... டாடாவுக்கு இனிமேல் செம போட்டி காத்திருக்கு!
- Sports
டி20 உலகக்கோப்பையில் அஸ்வினுக்கு வாய்ப்புள்ளதா??.. ஆகாஷ் சோப்ரா கூறிய விளக்கம்.. அட இதுவும் சரிதானே?
- Technology
ஜியோக்கு போட்டியாக Airtel அறிமுகம் செய்த 2 புது திட்டம்.! இன்றே ரீசார்ஜ் செய்யுங்க.!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
- Travel
டெல்லியிலிருந்து பல ஆன்மீக ஸ்தலங்களுக்கு பயணம் – IRCTC இன் அட்டகாசமான டூர் பேக்கேஜ் – விவரங்கள் இதோ!
சீனாவில் இருந்து இறக்குமதி செய்து விற்கப்பட்டு வரும் ஆபத்தான உணவுகள்!
சீனா அதன் சுவையான பல உணவுகளால் உலகளவில் மிகவும் பிரபலமானது. இருப்பினும், சீனாவின் உணவுத் துறை மோசமாக இருப்பதை நிரூபிக்கும் வகையில் பல்வேறு செய்திகள் அவ்வப்போது வந்தவாறு உள்ளன. ஆகவே சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுகளை தவிர்க்குமாறு பல்வேறு நிறுவனங்களும் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுகின்றன. ஏனெனில் சீனா ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் நச்சு உணவுகளை உருவாக்குகிறது.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படும் உணவுகள் அனைத்தும் முழுமையாக சரிபார்க்கப்பட்டு வருவதாக நீங்கள் நினைத்தால், அது தவறு. அதற்காக அனைத்து உணவுப் பொருட்களுமே பாதுகாப்பற்றவை அல்ல. ஆனால் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சில ஆபத்தான உணவுப் பொருட்களும் விற்கப்பட்டு வருகின்றன. அந்த உணவுப் பொருட்கள் எவையென்பதை தெரிந்து அவற்றைத் தவிர்த்தால் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.

முட்டைகள்
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை நீங்கள் வாங்கினால், அவற்றை உடைத்து பயன்படுத்துவதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். ஏனெனில் சீனாவில் உள்ள தொழிற்சாலைகள் முட்டைகளில் கால்சியம் கார்பனேட் மற்றும் பாராஃபின் ஆகியவற்றை பயன்படுத்துகின்றன. இவை கடுமையான ஃபுட் பாய்சனிங்கை ஏற்படுத்தும்.

ஆட்டு இறைச்சி
2013 ஆம் ஆண்டில் சீனாவில் 900 பேரை போலீசார் கைது செய்தனர். ஏனெனில் அவர்கள் ஆட்டு இறைச்சி என்று எலி இறைச்சியை விற்று வந்தனர். மேலும் போலீசார் அவர்களிடம் இருந்து 20,000 பவுண்டு கெட்டுப்போன எலி இறைச்சியை கைப்பற்றினர். எனவே சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சிகளை தவிர்ப்பது நல்லது.

ஒயின்
நீங்கள் ஒயின் பிரியராக இருந்தால், சீனாவில் தயாரிக்கப்பட்ட ஒயினை வாங்கி குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் சீனாவில் தயாரிக்கப்படும் ஒயின் திராட்சைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டாலும், அவற்றில் நிச்சயம் சர்க்கரை, சாயங்கள் மற்றும் செயற்கை சுவையூட்டிகள் இருக்கும்.

டீ
உலகம் முழுவதும் தேயிலையின் மிகப்பெரிய விநியோகஸ்தராக சீனா இருந்தாலும், இதன் பல்வேறு பிராண்டுகளில் 29 வகையான நச்சு கெமிக்கல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதிர்ஷ்டவசமாக, இவை எதுவும் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை. இருப்பினும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

உப்பு
பல ஆண்டுகளாக தொழில்துறை உப்பு தான் சீனாவில் டேபிள் உப்பாக விற்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வகை சோடியம் மனித நுகர்வுக்கானது அல்ல. இது ஹைப்போ தைராய்டு பிரச்சனைகள் மற்றும் இனப்பெருக்க மண்டல கோளாறுகளை ஏற்படுத்தும்.

தர்பூசணி
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல தர்பூசணிகள் மிகவும் தீங்கு விளைவிக்கும் ஆபத்தான பூச்சிக்கொல்லிகளால் நிறைந்துள்ளன. ஆகவே இவை வேகமாக வளர்கின்றன. எனவே தர்பூசணியால் உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படாமல் இருக்க உள்நாட்டு தர்பூசணியை வாங்கி சாப்பிடுங்கள்.

திலாப்பியா மீன்
தொழிற்சாலைகளில் விற்கப்படும் மீன்களைப் போலவே, இந்த மீன்களும் நச்சு கெமிக்கல்கள் நிறைந்த சிறிய நெரிசலான பகுதிகளில் வளர்க்கப்படுகின்றன. எனவே இந்த வகை மீன்கள் கெமிக்கல்களை சுவாசிக்கின்றன. கெமிக்கலை சுவாசித்து வாழும் இந்த வகை மீன்களை சாப்பிட்டால், ஆரோக்கியம் எவ்வாறு இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

அரிசி நூடுல்ஸ்
சீனாவில் நூடுல்ஸ் மிகவும் பிரபலமானவை. ஆனால் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி நூடுல்ஸ் சாப்பிடுவதைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். ஏனெனில் சில சீன தொழிற்சாலைகள் நூடுல்ஸ் பிரஷ்ஷாக இருப்பதற்காக சல்பர் டை ஆக்ஸைடைப் பயன்படுத்துகின்றன. இந்த கெமிக்கல் புற்றுநோயுடன் தொடர்புடையது.

பன்றி இறைச்சி
சிலர் பன்றி இறைச்சியை விட மாட்டிறைச்சியை விரும்புவார்கள். ஆனால் சீனாவில் மாட்டிறைச்சி இருமடங்கு விலை அதிகமானது. ஆகவே நிறுவனம் ஒன்று சிக்கலை எதிர்கொள்ள மாட்டிறைச்சி போல தோற்றமளிக்க பன்றி இறைச்சியில் போராக்ஸ் நிரப்பப்பட்ட சேர்க்கைகளை உட்செலுத்துகிறார்கள்.

பூண்டு
சீன பூண்டு பண்ணைகள் பூண்டுகளை கடைகளுக்கு அனுப்புவதற்கு முன் ரசாயன பொருட்களை பூசுவதாக கூறப்படுகிறது. நீங்கள் நாட்டு பூண்டுகளையும், சீன பூண்டுகளையும் அடுத்தடுத்து சாப்பிட்டு பார்த்தால் வித்தியாசத்தை நன்கு காணலாம்.

காளான்கள்
உணவு நிபுணர்கள் சீனாவில் இருந்து வரும் காளான்களை ஆய்வு செய்த போது, அவற்றில் கறை படிந்திருப்பதைக் கண்டுள்ளனர். சில சீன நிறுவனங்கள் தங்களின் விற்பனையை அதிகரிக்க தங்கள் தயாரிப்புகளை ஆர்கானிக் என்று பெயரிடுகின்றனராம்.

பிளாஸ்டிக் அரிசி
சீனாவில் ஒவ்வொரு உணவும் அரிசியுடன் உண்ணப்படுகிறது. எனவே அங்கு விளையும் அரிசி பாதுகாப்பானதாகவே இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் பல தொழிற்சாலைகள் தங்கள் அரிசியில் புற்றுநோயை உண்டாக்கும் செயற்கை பிசினை சேர்க்கிறது.

பால்
மெலனின் என்பது சிறுநீரகளுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் ஒரு கெமிக்கல் ஆகும். இது இறக்குமதி செய்யப்பட்ட பாலில் காணப்படுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட பாலைப் பருகி சமீபத்திய ஆண்டுகளில் 6 குழந்தைகள் இறந்துள்ளனர் மற்றும் 300,000 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.

முட்டைக்கோஸ்
கோடைக்காலத்தில் அதிக வெப்பநிலையில் முட்டைக்கோஸ்கள் ஃபிரஷ்ஷாக இருக்க அதிக நச்சுத்தன்மை வாய்ந்த ஃபார்மலின் கரைசலை அதன் மீது தெளிப்பார்களாம். எனவே சீனாவில் இருந்து இறக்குமதி செய்த முட்டைக்கோஸ்களை வாங்காமல் இருப்பது நல்லது.

மிளகு
சீன மிளகு பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் அதை வாங்கி உங்கள் சமையலில் பயன்படுத்த வாய்ப்பு கிடைத்தால், அந்த மிளகில் கடினமான மண் உருண்டைகளைக் காணலாம். ஏனெனில் சிலர் மிளகிற்கு பதிலாக மண் உருண்டைகளை சேர்த்து விற்கிறார்கள்.