For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ராகியை தினமும் சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்ன மாதிரியான பிரச்சினை வரும்?

ராகி சிறு தானியங்களைப் பற்றிய நிறைய நன்மைகளைப் பட்டியலிடுகிறோம். அதைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

By Mahibala
|

நம்முடைய பாரம்பரிய விவசாயத்தில் பயிர் செய்து விளைவித்த சோளம், கேழ்வரகு, கம்பு, வரகு, தினை, சாமை, குதிரைவாலி போன்ற பயிர்களை நாகரீகமற்ற உணவுகள் என்று நாம் தூக்கிப் போட்டுவிட்டு பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பாஸ்தா என களமிறங்கியதும் சர்க்கரை நோய் முதல் மாரடைப்பு வரை நம்மை நோக்கிப் பாயத் தொடங்கிவிட்டன.

Ragi

மருந்துகள் சாப்பிட்டாலும் உணவு முறையால் மட்டும் தான் நிரந்தரமான தீர்வைக் காணமுடியும் என்று உணர்ந்து கொண்டு பாரம்பரிய உணவுகளுக்குத் திரும்பியிருக்கிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கேழ்வரகு

கேழ்வரகு

சிறு தானியங்களில் முதன்மை பெற்றிருக்கிற ஒன்று தான் ராகி. ஆனால் ராகியை நிறைய பேருக்குப் பிடிக்காது. ஏனென்றால் அது அவ்வளவு சுவை மிக்கது அல்ல. அதிலும் குறிப்பாக, நம்முடைய முன்னோர்களின் சமையல் முறைப்படி பார்த்தால், அவர்கள் செய்யும் ராகி களியை நம்மால் சாப்பிடவே முடியாது.

அதை கடித்தோ மென்றோ சாப்பிட முடியாது. விழுங்கதான் வேண்டும். இதனாலேயே பலருக்கும் ராகி களியைப் பிடிக்காது. அதிலும் ராகியில் புட்டு செய்தால் அட அட அந்த வாசனைக்கு வேறு என்ன ஈடு இருக்கிறது. அதேபோல் கோடை காலத்தில் ராகி கூழ் கோடையை உங்களுக்கு குளுகுளுவென மாற்றிக் கொடுக்கும்.

 உடல் குளிர்ச்சி

உடல் குளிர்ச்சி

ராகியில் அதிக அளவில் கால்சியம் இருப்பதால், எலும்பு, பற்கள் என அத்தனைக்கும் நல்லது. குறிப்பாக, கோடை காலத்தில் இதை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இது உடல் சூட்டைத் தணித்து, உங்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும். கோடையில் உடலின் வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், இக்காலத்தில் ராகியை உணவில் சேர்த்து வந்தால், உடல் வெப்பமானது குறையும்.

MOST READ:இந்த சிவப்பு பூச்சி கடிச்சா விஷம் ஏறாம இருக்க உடனே என்ன செய்யணும்?

உடல் ஆற்றல்

உடல் ஆற்றல்

உடலின் வலிமை மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் அதிக அளவில் புரதச்சத்துக்களும் கனிமச் சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. தினமும் ஒருவேளையாவது கேழ்வரகை உணவில் எடுத்துக் கொண்டு வந்தார்கள் என்றால், எலும்புகள் வலிமை பெறும். உடல் ஆற்றல் அதிகரிக்கும்.

எடையை குறைய

எடையை குறைய

அதிகப்படியான தொப்பையால் அவதிப்படுகிறவர்கள் தொப்பை முழுக்க கரைந்து, தட்டையான வயிறைப் பெற வேண்டுமென்றால், தினமும் காலையில் ராகி உருண்டையைச் சாப்பிட வேண்டும். அப்படி காலையில் ராகி உருண்டை சாப்பிடுவதனால், அதில் உள்ள அதிக அளவிலான அமினோ அமிலங்கள், ட்ரிப்ஃபன் மற்றும் அடிக்கடி பசி எடுப்பதைத் தடுக்கும். அடுத்த வேளை உணவு எடுத்துக் கொள்ளும்போது கலோரிகள் அளவைக் குறைக்க முடியும். கலோரிகள் குறைந்தாலே தேவையில்லாமல் உடலில் கொழுப்பு தேங்குவதைத் தவிர்க்க முடியும்.

MOST READ:எப்ப பார்த்தாலும் தூக்கம் தூக்கமா வருதா? இத செய்ங்க... சுறுசுறுப்பா ஆகிடுவீங்க...

எலும்புகள்

எலும்புகள்

ராகியில் உள்ள அதிக அளவில் உள்ள கால்சியம், வைட்டமின் டி ஆகியவை இருப்பதால் இது எலும்புகளுக்கு அதிக பலம் கொடுக்கக் கூடியது. அதிலும் குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் கூட இதை எளிதாக சாப்பிடலாம். மூட்டுக்கள் வலிமை பெறும். முன்னோர்கள் ராகியை களியாக்கி மூட்டுவலி உள்ள இடங்களில் பற்று போட்டு வந்தால் வலி குறையும்.

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய்

சர்க்கரை நோய் இருக்கின்றவர்களுக்கு ராகி மிகவும் நல்லது. இது ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். எப்போதும் சீராக ரத்த அழுத்தத்தையும் வைத்திருக்கச் செய்யும்.

MOST READ:புராணங்களில் வரும் அரக்கர்களில் அதிக பலம்வாய்ந்த அரக்கர் யார் தெரியுமா?

கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ரால்

ராகி உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவையும் குறைக்கும். ராகியில் அதிக அளவில் லெசிதின் மற்றும் மெத்தியோனைன் என்னும் தீமையை உண்டாக்கும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. இதிலுள்ள அமினோ ஆசிடுகள், கல்லீரலில் தங்கியுள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலையும் கரைத்துவிடும். கல்லீரல் வீக்கம் குறையும்.

ரத்த சோகை

ரத்த சோகை

ராகியில் அதிக அளவிலான இரும்புச்சத்துக்கள் இருப்பதால் இது ரத்த அணுக்களின் அளவை அதிகரிக்கச் செய்து ரத்த சோகையை ஏற்படுத்துவதைத் தடுக்கிறது. வேலைப்பளு நிறைந்தவர்கள் ராகியை அதிகம் சாப்பிட மன அழுத்தத்திலிருந்தும் விடுபடலாம். தொடர்ந்து ஹீமோகுளோபின் உயர வேண்டுமென்றால் தினசரி ராகி சாப்பிட்டு வந்தால் நிச்சயம் கூடும்.

MOST READ:உங்கள் ராசிக்கு தினமும் சொல்ல வேண்டிய ஒற்றை வரி மந்திரம் எது? இதோ இதுதான்...

தைராய்டு

தைராய்டு

தைராய்டு பிரச்சினை இருக்கின்றவர்களுக்கு மிக நல்லது ராகி. குறிப்பாக, ஹைப்போ தைராய்டு இருக்கின்றவர்கள் இந்த ராகியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது தைராய்டை சரிசெய்யும். தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Does We Eat Ragi For Daily?

here we are giving more benefits of ragi millets. read and you should know and use it.
Desktop Bottom Promotion