For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த தானியத்தை சுண்டல் மாதிரி சாப்பிட்டா இவ்ளோ வியாதியும் உங்க நெருங்கவே முடியாதாம்?

பாப்பரை தானியத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள், பக்க விளைவுகள் பற்றி இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கலாம். படித்துப் பயன்பெறுங்கள்.

|

பாப்பரை முழு தானியங்களில் மிகவும் சத்தான ஒன்று. இது உடல் எடையை குறைக்க, இதய ஆரோக்கியத்திற்கு மற்றும் டயாபெட்டீஸ்யை கட்டுப்படுத்த என்று ஏராளமான நன்மைகளைத் தருகிறது.

Buckwheat

இந்த பாப்பரை உணவுகள் சூடோசெரல் என்று அழைக்கப்படுகிறது. இவைகள் தானிய வகைகளில் அடங்கும். இதே மாதிரி அமராந்த், க்யூனா போல போன்ற தானியங்களும் சூடேசெரலைச் சார்ந்தது தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வகைகள்

வகைகள்

இந்த பாப்பரையில் இரண்டு வகைகள் காணப்படுகின்றன. ஒன்று பொதுவான பாப்பரை மற்றொன்று டார்டரி வகை. ஓட்ஸ், கோதுமை, பார்லி, கம்பு போன்ற தானியங்கள் போலவே பாப்பரையிலும் ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன.

MOST READ: ஜோதிடர் சொல்வதில் எதை நம்பலாம்? எதை நம்பக்கூடாது? ஜோதிட சாஸ்திரம் என்ன சொல்லுதுனு பாருங்க?

ஊட்டச்சத்து அளவுகள்

ஊட்டச்சத்து அளவுகள்

100 கிராம் பாப்பரையில் 9.75 கிராம் தண்ணீர், 343கிலோ கலோரி எனர்ஜி அடங்கியுள்ளது.

புரோட்டீன் - 13.25 கிராம்

கொழுப்பு - 3.40 கிராம்

கார்போஹைட்ரேட் - 71.50 கிராம்

நார்ச்சத்து - 10 கிராம்

கால்சியம் - 18 மில்லி கிராம்

இரும்புச் சத்து - 2.20 மில்லி கிராம்

மக்னீசியம் - 231 மில்லி கிராம்

பாஸ்பரஸ் - 347 மில்லி கிராம்

பொட்டாசியம் - 460 மில்லி கிராம்

சோடியம் - 1மில்லி கிராம்

ஜிங்க் - 2.40 மில்லி கிராம்

தயமின் - 0.101 மில்லி கிராம் அளவு

ரிபோப்ளவின் - 0.425 மில்லி கிராம்

நியசின் - 7.020 மில்லி கிராம்

விட்டமின் பி6-0.210 மில்லி கிராம்

போலேட் - 30 மைக்ரோ கிராம்.

ஆரோக்கிய நன்மைகள் இதய ஆரோக்கியம்

ஆரோக்கிய நன்மைகள் இதய ஆரோக்கியம்

தற்போது நடத்திய ஆராய்ச்சிப் படி பார்த்தால் பாப்பரை கெட்ட கொலஸ்ட்ரால், இதய அழற்சி, இதய அடைப்பு போன்றவற்றை நீக்கி இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதனால் இதய நோய்கள் அவ்வளவு சீக்கிரம் உங்களை அணுகாது. இதில் ரூட்டின் என்ற பைட்டோ கெமிக்கல் உள்ளது. இந்த ஆன்டி ஆக்ஸிடன்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கவும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது.

எடையை குறைக்க

எடையை குறைக்க

இந்த பாப்பரையில் ஏராளமான புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துகள் உள்ளன. இதை உணவாக எடுத்துக் கொள்ளும் போது உங்களுக்கு வயிறு நிரம்பிய நன்மையை தருகிறது. அதிகமான சாப்பாடும் சாப்பிடமாட்டீர்கள். இதனால் உடல் எடையும் வெகுவாகக் குறைவும்.

சீரண சக்தியை மேம்படுத்துதல்

சீரண சக்தியை மேம்படுத்துதல்

இதிலுள்ள நார்ச்சத்துகள் மலம் கழித்தலை சுலபமாக்கிறது. வயிற்று சம்பந்தமான பிரச்சினைகள், வயிற்று புற்று நோய், குடல் புற்று நோய் வராமல் தடுத்து வயிற்று உறுப்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் ஃவுட் மைக்ரோபயாலஜி அறிவிப்பு படி இது குடலின் pH அளவை சமநிலை ப்படுத்துகிறது.

MOST READ: 9 வருஷமா போதைக்கு அடிமையான டாக்டர்... கடைசியில கல்யாணம் நின்னுபோனது தான் மிச்சம்...

டயாபெட்டீஸ்யை தடுத்தல்

டயாபெட்டீஸ்யை தடுத்தல்

அமெரிக்கன் டயாபெட்டீஸ் அசோசியேஷன் படி முழுதானியங்எளில் அதிகளவு கார்போஹைட்ரேட் உள்ளது. இந்த வகையான கார்போஹைட்ரேட் சத்துக்கள் மெதுவாக உறிஞ்சப்பட்டு இரத்தத்தில் கலப்பதால் உடனே சர்க்கரை அளவு அதிகமாகுவது தடுக்கப்படுகிறது. இந்த பாப்பரையில் ரூட்டின் என்ற பைட்டோ கெமிக்கல் உள்ளது. இது இன்சுலின் சுரப்பை மேம்படுத்துகிறது. மேலும் இன்சுலின் தடைபடுவதை சரி செய்கிறது.

புற்றுநோய் அபாயம்

புற்றுநோய் அபாயம்

இதில் ரூட்டின், குர்செடின் போன்ற முக்கியமான பொருட்கள் அமைந்துள்ளன. இந்த ஆன்டி ஆக்ஸிடன்கள் புற்றுநோய் வரும் அபாயத்தை குறைக்கிறது. இது டிஎன்ஏ பிறழ்ச்சியை தடுத்து புற்றுநோய் செல்கள் உருவாகுவதை தடுக்கிறது.

பாதுகாப்பான உணவு

பாதுகாப்பான உணவு

இந்த பாப்பரையில் எந்த வித க்ளூட்டன் தன்மையும் இல்லை. எனவே மக்களுக்கு செலியாக் நோய் வராமல் பாதுகாக்கிறது. இது போக மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு, வயிறு மந்தம் மற்றும் குடல் கசிவு போன்ற பிரச்சினைகள் வராமலும் காக்கிறது.

பக்க விளைவுகள்

பக்க விளைவுகள்

சில பேருக்கு இது ஒத்துக் கொள்ளாமல் அழற்சியை ஏற்படுத்தும். வாயில் வீக்கம், படை, சரும வடுக்கள் போன்றவை ஏற்படலாம்.

எப்படி எடுத்துக் கொள்வது

எப்படி எடுத்துக் கொள்வது

பாப்பரையை கீழ்க்கண்டவாறு சமைக்க வேண்டும்.

முதலில் பாப்பரையை தண்ணீர் விட்டு நன்றாக கழுவிக் கொள்ளுங்கள்.

20 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து சமைக்கவும்

இப்பொழுது பாப்பரை நன்றாக பெரியதாக மாறியதும் இதை வேறு டிஸ்களுக்கு பயன்படுத்தி கொள்ளுங்கள்.

MOST READ: உங்க ராசிய சொல்லுங்க... நீங்க எந்த வழியில பணம் சேமிக்கலாம்னு தெரிஞ்சிக்கங்க...

முளைக்கட்டிய பாப்பரை பயிறு

முளைக்கட்டிய பாப்பரை பயிறு

உலர்ந்த பாப்பரை 30 நிமிடங்கள் இருந்து -6மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

பிறகு நன்றாக கழுவி விட்டு தண்ணீரை வடிகட்டி கொள்ளுங்கள்.

1-2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் தெளித்து 2-3 நாட்கள் விடவும்.

இப்பொழுது பாப்பரை நன்றாக முளைத்து இருக்கும். இந்த முளைக்கட்டிய பயிரை சாப்பிட்டு வந்தால் ஏராளமான உடல் நல நன்மைகள் நமக்கு கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Buckwheat: Nutritional Health Benefits, Side Effects and Recipes

Buckwheat is a nutritious whole grain which possesses abundant health benefits such as promoting weight loss, improving heart health, and managing diabetes, etc.
Story first published: Thursday, July 4, 2019, 15:29 [IST]
Desktop Bottom Promotion