For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக கல்லீரல் தினம்: கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!

இங்கு கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

|

மனித உடலில் மிகவும் முக்கியமான ஓர் உறுப்பு தான் கல்லீரல். தற்போதைய உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை மற்றும் மது பழக்கம் பெருகியுள்ள நிலையில், பலரது கல்லீரலின் ஆரோக்கியம் மோசமாக உள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 10 லட்ச மக்கள் கல்லீரல் பிரச்சனைகளால் அவஸ்தைப்படுவதாக உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையில் தெரிய வந்துள்ளது. அதில் தற்போதைய உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையால் அதிகம் பாதிக்கப்படுவது கல்லீரல் அழற்சி ஆகும்.

World Liver Day 2018: Foods To Keep Your Liver Healthy!

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 19 ஆம் தேதி உலக கல்லீரல் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த தினத்தில் கல்லீரலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே பலர் பரப்புவார்கள். கல்லீரல் அழற்சியால் 40-45 வயதிற்குட்பட்டவர்கள் தான் பாதிக்கப்படுவார்கள். ஆனால் இன்று இளம் தலைமுறையினரும் அதிகம் கஷ்டப்படுகின்றனர்.

நமது உடலில் கல்லீரல் பல முக்கிய பணிகளைச் செய்கிறது. அதில் ஆல்கஹால் மற்றும் கொழுப்புக்களை வளர்சிதை மாற்றம் செய்வது, உடலில் கொழுப்புக்கள், புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட்டுக்களின் அளவை சீராக்குவது, அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களை சேகரிப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை. உலக கல்லீரல் தினமான இன்று கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள் எவையென்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூண்டு

பூண்டு

பூண்டில் உள்ள உட்பொருட்கள், கல்லீரலில் உள்ள நொதிகளின் செயல்பாட்டை மேம்படுத்தி, உடலில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்ற உதவும். பூண்டில் அல்லிசின் மற்றும் செலினியம் அதிகளவில் உள்ளது. இந்த இரண்டு உட்பொருட்களும் கல்லீரலை சுத்தமாக வைத்து, கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

கிரேப்ஃபுரூட்

கிரேப்ஃபுரூட்

கிரேப்ஃபுரூட்டில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகளவில் உள்ளது. அதோடு சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை போன்றவற்றிலும் இச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இந்த பழங்களை தினமும் ஜூஸ வடிவில் எடுத்து வந்தால், அது கல்லீரல் நொதிகளின் உற்பத்தியை ஊக்குவித்து, புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென்கள் மற்றும் டாக்ஸின்களை வெளியேற்றும்.

பீட்ரூட் மற்றும் கேரட்

பீட்ரூட் மற்றும் கேரட்

பீட்ரூட், கேரட் என்னும் இரண்டு காய்கறிகளிலும் தாவர வகை ப்ளேவோனாய்டுகள் மற்றும் பீட்டா-கரோட்டீன்கள் அதிகளவில் உள்ளது. இந்த காய்கறிகளை ஒருவர் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், அது கல்லீரல் நொதிகளின் உற்பத்தியை அதிகரித்து, ஒட்டுமொத்த கல்லீரல் செயல்பாட்டையும் தூண்டும்.

க்ரீன் டீ

க்ரீன் டீ

கல்லீரல் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று நினைத்தால், க்ரீன் டீயை தினமும் ஒரு கப் குடியுங்கள். க்ரீன் டீயில் தாவர வகை ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான கேட்டசின்கள் உள்ளன. இது கல்லீரல் செயல்பாட்டிற்கு உதவியாக இருக்கும். சில ஆராய்ச்சியில் கல்லீரல் ஆரோக்கியத்தை க்ரீன் டீ மேம்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே இந்த அற்புதமான டீயை தவறாமல் சுவையுங்கள்.

பச்சை இலைக் காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகள்

கல்லீரலை சுத்தப்படுத்தும் உணவுப் பொருட்களுள் பச்சை இலைக் காய்கறிகளும் ஒன்று. இவற்றில் உள்ள குளோரோபில், இரத்தக் குழாய்களில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றும். ஆகவே பாகற்காய், பசலைக்கீரை, கடுகு கீரை போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அவகேடோ

அவகேடோ

அவகேடோ பழத்தை ஒருவர் சாப்பிட்டால், அது கல்லீரலில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்களை வெளியேற்றத் தேவையான க்ளுட்டாதியோன் என்னும் பொருளை உடலில் உற்பத்தி செய்ய உதவிடும். ஆகவே அவகேடோ மில்க் ஷேக்கை முடிந்தால், அடிக்கடி வாங்கிக் குடியுங்கள்.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிளில் உள்ள பெக்டின், உடல் மற்றும் செரிமான பாதையில் இருந்து வெளியேறும் டாக்ஸின்களை சுத்தம் செய்யத் தேவையான கெமிக்கலைக் கொண்டது. இந்த ஆப்பிளை ஒருவர் தினமும் சாப்பிட்டு வந்தால், அது கல்லீரலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

ஒருவர் ஆலிவ் ஆயிலை அன்றாட உணவில் சேர்த்து வந்தால், அது உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்களை உறிஞ்சி வெளியேற்ற உதவும். ஒருவரது உடலில் டாக்ஸின்கள் அதிகம் சேர்ந்தால், அது கல்லீரலின் செயல்பாட்டில் சிரமத்தை தந்து, கல்லீரல் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.

ப்ராக்கோலி, காலிஃப்ளவர்

ப்ராக்கோலி, காலிஃப்ளவர்

ப்ராக்கோலி , காலிஃப்ளவர் போன்றவற்றில் உள்ள க்ளுக்கோசைனோலேட், கல்லீரலில் நொதிகளின் உற்பத்திக்கு உறுதுணையாக இருக்கும். கல்லீரலில் உள்ள நொதிகள் தான் உடலில் இருந்து கார்சினோஜென்கள் மற்றும் இதர டாக்ஸின்களை வெளியேற்றி, புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும்.

வால்நட்ஸ்

வால்நட்ஸ்

வால்நட்ஸில் அமினோ அமிலமான அர்ஜினைன் அதிகம் உள்ளது. இது கல்லீரலில் உள்ள அம்மோனியாவை அகற்றி சுத்தம் செய்யும். மேலும் வால்நட்ஸில் க்ளுட்டாதியோன் மற்றும் ஒமேகா-3 அமினோ அமிலங்கள் போன்ற கல்லீரலை சுத்தம் செய்யத் தேவையானவைகளும் உள்ளன. ஆகவே ஸ்நாக்ஸ் நேரத்தில் சிறிது வால்நட்ஸை சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸ்

ப்ராக்கோலி, காலிஃப்ளவர் போன்றே முட்டைக்கோஸ் கூட கல்லீரல் நொதிகளின் உற்பத்தியைத் தூண்டி, உடலில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்ற உதவும். எனவே உங்கள் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று நினைத்தால், அவ்வப்போது முட்டைக்கோஸை உணவில் சேர்த்து வாருங்கள்.

மஞ்சள்

மஞ்சள்

மஞ்சள் கல்லீரலின் விருப்பமான ஒரு மசாலாப் பொருளாகும். மேலும் மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளதால், இதை அன்றாட சமையலில் சேர்த்து வருவதன் மூலம், அது கல்லீரலில் அழற்சி ஏற்படாமல் தடுத்து, டாக்ஸின்களை உடலில் இருந்து வெளியேற்றும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

World Liver Day 2018: Foods To Keep Your Liver Healthy!

Today is World Liver Day 2018. Here are some foods to keep your liver healthy. Read on to know more...
Desktop Bottom Promotion