இந்த பழங்களை அன்றாடம் சாப்பிட்டா என்ன நன்மை கிடைக்கும் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

நம் அனைவருக்குமே பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று தெரியும். பழங்கள் மனிதனின் டயட்டில் இருக்க வேண்டிய அத்தியாவசியமான உணவுப் பொருளாகும். பழங்களை ஒருவர் தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாவதோடு, சருமம் பொலிவாகும் மற்றும் இதர பல்வேறு நன்மைகளும் கிடைக்கும்.

பழங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியான நன்மைகளை வழங்கும். பழங்களில் சர்க்கரை, வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்ற ஆரோக்கியத்திற்கு வேண்டிய சத்துக்கள் நிறைந்துள்ளன.

பழங்களிலேயே ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளதால், ஒருவர் இதனை அன்றாடம் தங்களது டயட்டில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. உங்களுக்கு எந்த பழத்தில் என்ன நன்மை அடங்கியுள்ளது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.

ஏனெனில் இங்கு மார்கெட்டில் பொதுவாக விற்கப்படும் சில பழங்களும், அவற்றை அன்றாட டயட்டில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகளும் கெடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து, உங்கள் டயட்டை ஆரோக்கியமானதாக்குங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆப்பிள்

ஆப்பிள்

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது என்று கூறுவார்கள். இது முற்றிலும் உண்மையே. ஆப்பிளில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. மேலும் ஒரு கப் ஆப்பிளில் 13 கிராம் தான் சர்க்கரை உள்ளது. இந்த ஆப்பிள் கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

மாதுளை

மாதுளை

மாதுளையைக் கொண்டு ஜூஸ் தயாரித்தால், அதில் சர்க்கரை சேர்க்க வேண்டிய அவசியமே இருக்காது. ஏனெனில் மாதுளையில் இயற்கையாகவே போதுமான அளவு சர்க்கரை இருக்கும். மாதுளை அளைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும் ஓர் அற்புதமான மற்றும் சுவையான பழம். இதை ஸ்நாக்ஸாகவோ, சாலட் அல்லது தயிருடன் சேர்த்தோ சாப்பிடலாம். மாதுளை உடலின் ஆற்றலை உடனடியாக அதிகரிக்கும்.

மாம்பழம்

மாம்பழம்

மாம்பழத்தில் சர்க்கரை அதிகம் இருப்பதுடன், வைட்டமின் ஏ, வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி சத்துக்களும் ஏராளமாக உள்ளது. உங்களுக்கு புற்றுநோய்கான மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், குடல் புற்றுநோய், இரத்த புற்றுநோய் போன்றவற்றின் தாக்குதல் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், மாம்பழத்தை உங்களது அன்றாட டயட்டில் சேர்த்து வாருங்கள். இதில் சக்தி வாய்ந்த புற்றுநோயை எதிர்க்கும் பண்புகள் உள்ளன.

டேங்கரின்கள்

டேங்கரின்கள்

டேங்கரின்கள் என்பவை ஆரஞ்சு போன்று சிறியளவில் இருக்கும், சர்க்கரை அதிகம் நிறைந்த பழமாகும். ஒரு டேங்கரின் பழத்தில் 12.7 கிராம் சர்க்கரை உள்ளது. இந்த பழத்தில் ஓர் முக்கிய நன்மை, இது தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தலைமுடி நன்கு வளரவும், தலைமுடி உதிர்வைத் தடுக்கவும், நரை முடி விரைவில் வராமல் தடுக்கவும் இந்த டேங்கரின் பழம் உதவும். ஆகவே இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு, உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழத்திலும் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் மற்ற பழங்களை விட அதிகளவில் உள்ளது. இந்த வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறுவதோடு, இது தசைகளின் வளர்ச்சிக்கும், கொழுப்புக்களைக் கரைக்கவும் உதவியாக இருக்கும். முக்கியமாக வாழைப்பழம் நீண்ட நேரம் பசி எடுக்காமல், பசி உணர்வைக் கட்டுப்பாட்டில் வைக்கும்.

அன்னாசி

அன்னாசி

பழங்களுள் அன்னாசி உடலின் ஆற்றலை அதிகரிக்க உதவும் பழமாக கருதப்படுகிறது. ஏனெனில் இதில் உடலினுள் ஆற்றலை உற்பத்தி செய்யத் தேவையான கனிமச்சத்தான மாங்கனீசு ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. மேலும் அன்னாசி, இனிப்பு, புளிப்பு கலந்த ஒரு சுவையான பழம் என்பதால், அனைவரும் இப்பழத்தை விரும்பி சாப்பிடுவார்கள். உங்களுக்கு இப்பழம் பிடிக்குமானால், அன்றாடம் சிறிது சாப்பிட்டு, உங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

கிரேப்ஃபுரூட்

கிரேப்ஃபுரூட்

சர்க்கரை அதிகம் நிறைந்த மற்றொரு பழம் தான் கிரேப்ஃபுரூட் என்னும் பப்பளிமாஸ். இதில் வைட்டமின்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் நல்ல அளவில் நிறைந்துள்ளது. ஒருவர் உணவுக்கு முன் பாதி கிரேப்ஃபுரூட்டை சாப்பிட்டால், அது வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுவதோடு, உடலில் உள்ள கொலஸ்ட்ரால் பிரச்சனையையும் குறைக்கும்.

செர்ரி

செர்ரி

சிறிய அளவிலான செர்ரிப் பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஆனால் இது செரிமானத்தை தாமதப்படுத்தும். ஒரு கப் செர்ரிப் பழத்தில் 306 கிராம் பொட்டாசியம் உள்ளது. இதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், புற்றுநோய் மற்றும் இதய நோய்களை எதிர்த்துப் போராட உதவும். எனவே இந்த பழம் கிடைத்தால் தவறாமல் வாங்கி சாப்பிட்டு மகிழுங்கள்.

ஆப்ரிகாட்

ஆப்ரிகாட்

சர்க்கரை அதிகம் நிறைந்த பழமான ஆப்ரிகாட், சருமத்தின் பொலிவை மேம்படுத்தும். ஏனெனில் இதில் சரும செல்களின் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. மேலும் இதில் உள்ள பொட்டாசியம், உடலின் மெட்டபாலிச அளவை அதிகரிப்பதோடு, கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புக்களை கரைக்கவும் உதவியாக இருக்கும். எனவே செரிமான பிரச்சனைகள் மற்றும் பொலிவான சருமம் வேண்டுமானால், ஆப்ரிகாட் பழத்தை சாப்பிடுங்கள்.

பீச்

பீச்

ஆப்ரிகாட் போன்றே காணப்படும் ஓர் பழம் தான் பீச். இது உடல் பருமன், உயர் கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய் போன்றவற்றைத் தடுக்க பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இந்த பழம் உடலினுள் உள்ள அழற்சியைப் போக்க உதவி புரியும். எனவே இந்த பழத்தை அடிக்கடி வாங்கி சுவையுங்கள்.

கிரான்பெர்ரி

கிரான்பெர்ரி

கிரான் பெர்ரி பழத்தில் சர்க்கரை குறைவாக இருந்தாலும், இந்த பழத்தில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான பீனால் அதிகளவில் உள்ளது. ஆகவே உங்களுக்கு புற்றுநோய் வராமல் இருக்க வேண்டுமானால், அன்றாட உணவில் கிரான்பெர்ரியை சிறிது சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி புளிப்புச் சுவையுடன் இருந்தாலும், இதன் மணம் பலருக்கும் பிடித்த ஒன்று. ஒரு கப் ஸ்ட்ராபெர்ரியை சாப்பிட்டால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, மன அழுத்தத்தின் அளவும் குறையும். மேலும் ஸ்ட்ராபெர்ரியில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலைத் தாக்கும் ப்ரீ ராடிக்கல்களிடமிருந்து நல்ல பாதுகாப்பை வழங்கி, புற்றுநோயின் அபாயத்தைத் தடுக்கும்.

ப்ளாக்பெர்ரி

ப்ளாக்பெர்ரி

பெர்ரிப் பழங்களுள் ஒன்றான ப்ளாக்பெர்ரியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இந்த பழத்தின் நிறம் தான் இதன் தரத்தைக் குறிக்கும். ஒரு கப் ப்ளாக்பெர்ரியில் 7 கிராம் சர்க்கரை உள்ளது. ஆகவே நல்ல கருப்பாக இருக்கும் ப்ளாக்பெர்ரியை வாங்கி அன்றாடம் உங்கள் சாலட் அல்லது மில்க் ஷேக்கில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அத்திப்பழம்

அத்திப்பழம்

அத்திப்பழத்தில் பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் மற்றும் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே போன்றவை அதிகம் உள்ளது. அதோடு அத்திப்பழத்தில் சர்க்கரையின் அளவும் ஏராளமாக இருக்கும். உங்களுக்கு அத்திப்பழத்தை சாப்பிட வேண்டுமானால், ஒரே நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு மட்டும் சாப்பிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top Unique Fruits Can Be A Part Of Your Diet

Top Unique Fruits Can Be A Part Of Your Diet