ஆண்களின் புரோஸ்டேட் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் உணவுகள்!

Posted By:
Subscribe to Boldsky

ஆண்களைத் தாக்கும் பொதுவான புற்றுநோய் தான் புரோஸ்டேட் புற்றுநோய். ஆண்களுள் ஏழு பேரில் ஒருவர் புரோஸ்டேட் புற்றுநோயுடன் வாழ்ந்து வருகின்றனர். ஆண்களின் இனப்பெருக்க உறுப்பில் இருக்கும் புரோஸ்டேட் சுரப்பி மிகவும் முக்கியமான வேலையை செய்கிறது. அதில் உடலுறவில் ஈடுபடும் போது வெளிவரும் அடர்த்தியான மற்றும் வெள்ளை நிற விந்தணுவை உற்பத்தி செய்கிறது. இந்த புரோஸ்டேட் சுரப்பி மிகவும் பெரிய அளவில் இருக்காது. இது ஒரு கோல்ப் பந்து அல்லது வால்நட்ஸ் அளவில் தான் இருக்கும்.

Top 10 Superfoods For Prostate Health

புரோஸ்டேட் சுரப்பியானது சிறுநீர்ப்பைக்கு சற்று கீழே மற்றும் மலக்குடலுக்கு முன்பே அமைந்திருக்கும். இதைச் சுற்றி சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீரைக் கொண்டு செல்லும் சிறுநீர் வடிகுழாயின் மேல் பகுதி இருக்கும். ஆகவே புரோஸ்டேட் சுரப்பியில் பிரச்சனை ஏற்பட்டால், அதனால் சிறுநீர் மற்றும் பாலியல் பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே ஒவ்வொரு ஆண்களும் புரோஸ்டேட் சுரப்பியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது என்பது இன்றியமையாத ஒன்றாகும்.

புரோஸ்டேட் புற்றுநோய் 40 வயதை ஆண்கள் எட்டும் வரை தாக்காது. ஆனால் 40 வயதிற்கு மேல் ஆகிவிட்டால், ஆண்கள் புரோஸ்டேட் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இந்நிலையில் இவர்கள் புரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளின் மூலம் பாதுகாக்க முடியும். உங்களுக்கு புரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள் எவையென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செலினியம் உணவுகள்

செலினியம் உணவுகள்

செலினியம் உடலில் உள்ள செல்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் நல்ல பாதுகாப்பை வழங்கும். ஆய்வு ஒன்றில், செலினியம் நிறைந்த உணவுகள் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதாக தெரிய வந்துள்ளது. அதே சமயம் செலினியத்தை அளவாக எடுப்பதன் மூலம், அதன் நன்மைகளைப் பெற முடியும். அதையே ஒருவர் அளவுக்கு அதிகமாக எடுத்தால், அதன் கடுமையான விளைவை சந்திக்க வேண்டியிருக்கும். மீன்கள், கடல் உணவுகள், பிரேசில் நட்ஸ், பூண்டு போன்றவற்றில் செலினியம் சத்து அதிகம் உள்ளது.

லைகோபைன் உணவுகள்

லைகோபைன் உணவுகள்

லைகோபைன் மற்றொரு ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். இது புரோஸ்டேட் சுரப்பியில் உள்ள செல்கள் புற்றுநோய் செல்களாக மாறி பெருக்கமடைவதைத் தடுத்து, புரோஸ்டேட் புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைக்கும். லைகோபைன் பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு நிறத்தை அளிக்கும் பொருளாகும். இந்த லைகோபைன் தக்காளி, தர்பூசணி, கிரேப்ஃபுரூட் போன்றவற்றில் வளமான அளவில் நிறைந்துள்ளது. லைகோபைன் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதோடு, நுரையீரல் மற்றும் வயிற்று புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்கும். பல ஆய்வுகளில் லைகோபைன் நிறைந்த உணவுகளை சமைத்து சாப்பிடுவதை விட, பச்சையாக சாப்பிடுவதே சிறந்த பலனைத் தருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

ப்ராக்கோலி, முட்டைக்கோஸ்

ப்ராக்கோலி, முட்டைக்கோஸ்

ப்ராக்கோலி, முட்டைக்கோஸ் போன்றவற்றில் நார்ச்சத்து, வைட்டமின் சி, ஃபோலேட், கால்சியம், பீட்டா-கரோட்டீன், வைட்டமின் பி6 போன்றவை ஏராளமான அளவில் உள்ளது. இதனை சாப்பிட்டு வயிற்றில் இது செரிமானமாகும் போது, வெளியிடப்படும் ஒரு பொருள், புற்றுநோயை எதிர்ப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த காய்கறிகள், கார்சினோஜென்களால் டிஎன்ஏ பாதிக்கப்பட்டு, உடலில் புற்றுநோய் வருவதைத் தடுக்க உதவும். மேலும் இந்த காய்கறிகளில் ஆன்டி-வைரல், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளன.

பாலிஃபீனால்கள்

பாலிஃபீனால்கள்

பாலிஃபீனால்கள் பல்வேறு உணவுகளில் உள்ளன. அதில் க்ரீன் டீ, ஆப்பிள், ப்ளூபெர்ரி, மாதுளை, கிரான்பெர்ரி, சோயா போன்றவை குறிப்பிடத்தக்கவை. பாலிஃபீனால்கள் ஆரோக்கிய பிரச்சனைகளை எதிர்த்துப் போராடி, உடல் செல்களுக்கு பாதுகாப்பு அளித்து, புற்றுநோய் செல்கள் பெருக்கமடையாமல் தடுத்து அழித்து, புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். எனவே இந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டு, புற்றுநோய் அபாயத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

அழற்சி எதிர்ப்பு உணவுகள்

அழற்சி எதிர்ப்பு உணவுகள்

உடலை தாக்கும் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடுவதற்கு அழற்சி எதிர்ப்பு சக்தி உடலுக்கு அவசியம் தேவை. இத்தகைய அழற்சி எதிர்ப்பு பண்புகள் குறிப்பிட்ட உணவுகளில் அதிகம் உள்ளது. அந்த உணவுகளை உட்கொண்டு வந்தால், உடலினுள் உள்ள அழற்சியின் அளவு குறையும். நாள்பட்ட அழற்சி, உடலினுள் பல தீவிர பிரச்சனைகளை உண்டாக்கும். குறிப்பாக புற்றுநோயை வரவழைக்கும். ஆகவே இஞ்சி, வெங்காயம், பெர்ரிப் பழங்கள், பூசணி விதைகள் போன்றவற்றை அடிக்கடி உட்கொள்ளுங்கள்.

க்ரீன் டீ

க்ரீன் டீ

க்ரீன் டீயில் இதய நோய் மற்றும் புற்றுநோயின் அபாயத்தை எதிர்த்துப் போராடும் பண்புகள் நிறைந்துள்ளது. குறிப்பாக க்ரீன் டீயில் உள்ள கேட்டசின்கள் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், செல்கள் பாதிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட செல்கள் பெருக்கமடைவதைத் தடுத்து எதிர்க்க உதவும். மேலும் க்ரீன் டீ உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும், சர்க்கரை நோயைத் தடுக்கும் மற்றும் மெட்டபாலிசத்தை ஊக்குவிக்கும். ஆகவே அன்றாடம் க்ரீன் டீ குடித்து, உங்கள் புரோஸ்டேட் சுரப்பியை புற்றுநோய் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

மாட்டிறைச்சியைத் தவிர்த்திடுங்கள்

மாட்டிறைச்சியைத் தவிர்த்திடுங்கள்

வெளிநாடுகளில் குறிப்பாக அமெதரிக்காவில், மாட்டிறைச்சியை உட்கொள்வோரின் எண்ணிக்கை அதிகம். பெரும்பாலானோரின் டயட்டுகளில் மாட்டிறைச்சி தான் அதிகம் இருக்கும். இதனால் தான் அமெரிக்கர்கள் குடல் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஒரு வாரத்திற்கு 18 அவுன்ஸிற்கு அதிகமாக மாட்டிறைச்சியை உட்கொள்ளக்கூடாது என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளைத் தவிர்க்கவும் கூறுகின்றனர். ஏனெனில் இந்த இறைச்சிகளை சமைக்கும் போது, அதில் கார்சினோஜென்கள் உருவாகி, உடலினுள் உள்ள செல்களை பாதித்து, புற்றுநோயை உண்டாக்குமாம்.

முழு தானியங்கள்

முழு தானியங்கள்

முழு தானியங்கள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொடுக்க வல்லது. ஏனெனில் இவற்றில் புரோட்டீன், பி வைட்டமின்கள், நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கனிமச்சத்துக்களான ஜிங்க், காப்பர், இரும்புச்சத்து மற்றும் மக்னீசியம் போன்றவை ஏராளமான அளவில் உள்ளது. இந்த சத்துக்கள் உடலின் சிறப்பான செயல்பாட்டிற்கு அவசியமானவை மற்றும் இவை செல்களைப் பாதித்து புற்றுநோயை உண்டாக்குவதைத் தடுக்க உதவும்.

ஆய்வு ஒன்றில் டயட்டில் முழு தானியங்களை அதிகம் சேர்த்துக் கொண்டதில், இதய நோய், டைப்-2 சர்க்கரை நோய், உடல் பருமன் மற்றும் சில வகையான புற்றுநோய் அபாயம் குறைவாக இருப்பது தெரிய வந்தது. எனவே முழு தானிய உணவுகளான முழு கோதுமை பிரட், திணை, ஓட்ஸ், கைக்குத்தல் அரிசி போன்றவற்றை அதிகம் சாப்பிடுங்கள்.

நட்ஸ்

நட்ஸ்

நட்ஸ்களான வால்நட்ஸ், பாதாம், ஹாசில் நட்ஸ் போன்றவை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு, இதய நோய் மற்றும் புற்றுநோய் வரும் அபாயத்தையும் குறைக்கும். நட்ஸ்களில் உள்ள அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, வைட்டமின் ஈ போன்றவை தமனிகளில் கொழுப்புக்களின் தேக்கத்தைத் தடுத்து, இதயத்தில் மற்றும் உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை சிறப்பாக வைத்துக் கொள்ளும். ஆய்வு ஒன்றில் பிரேவில் நட்ஸில் உள்ள அதிகளவிலான செலினியம் என்னும் கனிமச்சத்து, புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆரோக்கியமான கொழுப்புக்கள்

ஆரோக்கியமான கொழுப்புக்கள்

அனைத்து வகையான கொழுப்புக்களுமே உடலுக்கு கெட்டதல்ல. சில வகை கொழுப்புக்கள் உடலுக்கு நன்மை விளைவிக்கும். அதில் ட்ரான்ஸ் மற்றும் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். மோனா சாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் நல்ல கொழுப்புக்களாகும்.

இதில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் ஆலிவ், வேர்க்கடலை, கனோலா எண்ணெய், அவகேடோ மற்றும் சில வகை நட்ஸ்களான ஹாசில் நட்ஸ், பாதாம், பேகன் போன்றவற்றில் அதிகம் உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் சூரிய காந்தி விதை, சோளம், சோயாபீன்ஸ் மற்றும் நட்ஸ்களில் வால்நட்ஸ், ஆளிவிதை, மீன் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

ஒமேகா-3 கொழுப்பு அதிலங்களும் ஒரு வகையான பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் தான். இந்த கொழுப்பை உடலால் தானாக உற்பத்தி செய்ய முடியாது, உணவின் மூலமே பெற முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top 10 Superfoods For Prostate Health

Here we listed top 10 superfoods for prostate health. Read on to know more...
Story first published: Saturday, March 17, 2018, 14:00 [IST]