நைட் இந்த உணவுகளை சாப்பிடுங்க.. நல்ல நிம்மதியான தூக்கம் கிடைக்கும்...

Posted By:
Subscribe to Boldsky

நாள் முழுவதும் கடுமையாக உழைத்து, மிகவும் சோர்வாக வீட்டிற்கு வந்து, இரவில் படுக்க நினைத்தால் உங்களால் தூங்க முடியவில்லையா? இதற்கு மன அழுதத்ம், மன இறுக்கம் மற்றும் இதர தூக்கத்தைக் கெடுக்கும் காரணிகள் கூட காரணமாக இருக்கலாம். ஒருவருக்கு நல்ல நிம்மதியான தூக்கம் கிடைக்க வேண்டியது மிகவும் முக்கியம். நல்ல தூக்கத்தை மேற்கொண்டால், குறிப்பிட்ட சில நோய்த் தாக்குதல்களின் அபாயத்தைக் குறைக்கலாம்.

அதோடு நல்ல நிம்மதியான தூக்கமானது மூளையை ஆரோக்கியமாகவும், செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சிறப்பாகவும், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தவும் செய்யும். ஆனால் சில உணவுகள் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும். அந்த உணவுகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அவற்றை இரவு நேரத்தில் உட்கொண்டு வந்தால், நிச்சயம் நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.

சரி, இப்போது இரவு நேரத்தில் ஆழ்ந்த தூக்கத்தைப் பெற உதவும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து இன்று முதல் உங்கள் இரவு உணவில் சேர்த்து, நல்ல ஆழ்ந்த நிம்மதியான தூக்கத்தைப் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லெட்யூஸ்

லெட்யூஸ்

லெட்யூஸ் என்னும் கீரை அனைத்து வகையான சாலட்டுகளிலும் சேர்க்க ஏற்றது. லெட்யூஸ் கீரையில் லேக்டுகேரியம் என்னும் மயக்கமூட்டும் பண்புகள் உள்ளது. இந்த கீரையை இரவு நேரத்தில் சாலட்டுகளில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், இரவு நேரத்தில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம். எனவே இன்று முதல் இந்த கீரையை சாப்பிட ஆரம்பியுங்கள்.

பிஸ்தா

பிஸ்தா

பிஸ்தாவில் மக்னீசியம், புரோட்டீன், மக்னீசியம் மற்றும் வைட்டமின் பி6 போன்ற சத்துக்கள் இரவில் ஆழ்ந்த தூக்கத்தைப் பெற உதவும். ஆகவே இந்த நட்ஸ்களை இரவு நேரத்தில் ஒரு கையளவு சாப்பிடுங்கள் அல்லது வேறு ஏதேனும் டெசர்ஸ்ட்டுகளுடன் சாப்பிடுங்கள்.

கேல்

கேல்

கேல் கீரையில் கால்சியம் உள்ளது. உங்களுக்கு லாக்டோஸ் சகிப்புத்தன்மை இருந்தால், கேல் கீரையை உங்களது டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது பால் பொருட்களுக்கு சிறந்த மாற்றாகும். கால்சியம் குறைபாடு இருப்பவர்களுக்கு, இரவு நேரத்தில் தூங்குவதில் பிரச்சனையை சந்திக்கக்கூடும். ஆகவே இரவு நேரத்தில் நல்ல தூக்கத்தைப் பெற கேல் கீரையை சமைத்து சாப்பிடுங்கள்.

செரில்

செரில்

அளவுக்கு அதிகமான மன அழுத்தத்தினால், இரவில் தூங்க முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? அப்படியானால், இரவு நேரத்தில் ஒரு பௌல் செரில்களை சாப்பிடுங்கள். இதனால் அதில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் கால்சியம், இரவில் ஆழ்ந்த தூக்கத்தைப் பெற உதவும்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

ஓட்ஸ் மிகச்சிறந்த காலை உணவு என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் இந்த ஓட்ஸை இரவு நேரத்தில் சாப்பிட்டால், அதில் உள்ள மெலடோனின், விரைவில் ஆழ்ந்த தூக்கத்தைப் பெறத் தூண்டும். வேண்டுமானால், இன்று முயற்சித்துப் பாருங்கள். உங்களுக்கே தெரிய வரும்.

முழு தானியங்கள்

முழு தானியங்கள்

ஒருவருக்கு இரவில் நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெற உதவும் உணவுகளுள் முழு தானிய உணவுகளும் ஒன்று. இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க உதவி, எளிதில் விரைவில் தூங்க உதவியாக இருக்கும். எனவே இரவு தூங்கும் முன் முழு தானிய பிரட்டை சாப்பிடுங்கள். இதன் விளைவாக இரவில் ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.

கிவி

கிவி

கிவி பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, ஃபோலேட் மற்றும் செரடோனின் போன்றவை ஏராளமான அளவில் உள்ளது. இது இரவில் நல்ல தூக்கத்தைப் பெற உதவும். உங்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை இருந்தால், கிவி பழத்தை தினமும் ஒன்று சாப்பிடுங்கள். இதனால் இரவில் ஆழ்ந்த தூக்கம் கிடைப்பதோடு, உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

டூனா

டூனா

டூனா மீன்களில் ஆரோக்கியமான கொழுப்புக்கள் மற்றும் புரோட்டீன்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இதில் உள்ள வைட்டமின் பி6, உடலில் செரடோனின் மற்றும் மெலடோனின் உற்பத்திக்கு உதவும். இந்த உட்பொருட்கள் உடலை ரிலாக்ஸ் அடையச் செய்து, எளிதில் ஆழ்ந்த தூக்கத்தைப் பெற உதவியாக இருக்கும்.

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்

இரவு நேரத்தில் உங்களுக்கு சாக்லேட் சாப்பிட வேண்டுமென்ற ஆசையாக உள்ளதா? ஆம் என்றால், டார்க் சாக்லேட்டை ஒரு துண்டு சுவையுங்கள். இதனால் டார்க் சாக்லேட்டில் உள்ள செரடோனின், உடலை ரிலாக்ஸ் அடையச் செய்து, நல்ல ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகுக்கும். எனவே அச்சமின்றி டார்க் சாக்லேட்டை சாப்பிடுங்கள்.

வால்நட்ஸ்

வால்நட்ஸ்

வால்நட்ஸில் உள்ள ட்ரிப்டோபேன், உடலில் மெலடோனின் மற்றும் செலடோனின் உற்பத்திக்கு உதவும். இந்த இரண்டும் இரவு நேரத்தில் நல்ல ஆழ்ந்த தூக்கத்தை பெற உதவியாக இருக்கும். ஆகவே தினமும் இரவு வேளைகளில் சில வால்நட்ஸ் துண்டுகளை சாப்பிடுங்கள் அல்லது இரவு சாப்பிடும் சாலட் உடன் சேர்த்து சாப்பிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How To Eat To Get A Good Night's Sleep

These healthy sleep-promoting foods can help you get a good night's sleep naturally.