Latest Updates
-
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது!
எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை கூடாமல் இருக்க இவற்றை சாப்பிட்டாலே போதும்...!
நாளுக்கு நாள் உணவுகளின் தன்மை மாறி கொண்டே வருகிறது. நாம் உண்ணும் ஒவ்வொரு உணவும் எண்ணற்ற கலோரிகளையும், ஊட்டச்சத்துக்களையும் கொண்டது. அவற்றை நாம் தவிர்த்து வந்தால் பல வகையான பின் விளைவுகளை நாம் சந்திக்க நேரிடலாம். உணவின் தன்மை மிகவும் இன்றியமையாததாகும்.

பல உணவு பிரியர்கள் அதிக அளவில் உணவை நேரம் காலம் அறியாமல் சாப்பிட்டு கொண்டே இருப்பார். உணவை அதிகம் சாப்பிட்டாலும் உடல் எடை கூட கூடாது என்றால் அதற்கு இவற்றையெல்லாம் சாப்பிட்டு வந்தாலே போதும். அவை என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம்.

நார்சத்து அதிகமா..?
உடல் பருமன் கூடாமல் இருக்க நார்சத்து மிகவும் உதவும். உணவில் நார்சத்து அதிகம் எடுத்து கொண்டாலே எல்லா வகையான உடல் எடை கோளாறுகளும் குணமாகி விடும். உடல் பருமனை குறைக்க நினைப்பவர்கள் இந்த எளிய முறையை கடைபிடித்து வந்தாலே நல்ல பலனை அடையலாம்.

ஏன் எடை கூடுகிறது..?
உடலை எந்த வித செயல்பாட்டிற்கும் உட்படுத்தாவிடில் எடை கூட தான் செய்யும். இவை உடல் எடை கூட சாதாரண காரணியாக கருதப்படுகிறது. சத்தற்ற உணவுகளையும், கெட்ட கொழுப்புகள் அதிகம் கொண்ட உணவுகளையும் சாப்பிட்டால் அவை நிச்சயம் உடல் நல குறைப்பாட்டை தந்து விடும்.

கேரட்
கேரட்டில் எண்ணற்ற ஊட்டசத்துக்கள் உள்ளன. உடல் ஆரோக்கியத்தை சீராக வைக்க கேரட் நன்கு உதவுகிறது. 300 ml கேரட் ஜூஸை காலை உணவிற்கும் முன் குடித்து வந்தால் உடல் எடை குறைந்து விடும். மேலும், இதய ஆரோக்கியத்தையும் இது மேம்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நார்சத்து: 3.6 கிராம்

ஆப்பிள்
மிகவும் சுவைமிக்க இந்த பழத்தை தினமும் சாப்பிட்டாலே உடலில் எந்த வித நோய்களும் வராது. இவை LDL என்ற கெட்ட கொலெஸ்ட்ரோல்களை முற்றிலுமாக குறைத்து விடும் தன்மை கொண்டவை. எனவே, இவை உடல் பருமனை கூடாமல் பார்த்து கொள்ளும்.
நார்சத்து : 4.4 கிராம்

பீட்ரூட்
உணவில் பீட்ரூட் சேர்த்து கொண்டால் பல வித நன்மைகளை தரும். குறிப்பாக இதில் இரும்புசத்து, பொட்டாசியம், காப்பர், போலேட் போன்றவை அதிகம் உள்ளதாம். உடலின் எடையை கட்சிதாமாக வைத்து கொள்ள பீட்ரூட் உதவும். எனவே, இதன் சாற்றை தொடர்ந்து குடித்து வாருங்கள்.
நார்சத்து: 3.8 கிராம்

வாழை பழம்
எண்ணற்ற ஊட்டசத்துக்கள் கொண்ட முக்கிய பழங்களில் வாழை பழமும் ஒன்று. வைட்டமின் எ, பி1, சி போன்றவை இவற்றில் அதிகம் இருப்பதால் உடல் எடையை கூடாமல் பார்த்து கொள்ளும். அத்துடன் இவற்றில் உள்ள Bromelain என்ற நொதி, உடலின் செயல்பாட்டை சீராக வைத்திருக்கும்.
நார்சத்து: 3.1 கிராம்

ஸ்ட்ராவ்பெர்ரி
சிவப்பு நிறத்தில் கண்ணை கவரும் விதத்தில் இருக்கும் இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் பலவித நன்மைகள் கிடைக்கும். இது HDL என்ற நல்ல கொலஸ்ட்ரோலை உடலில் அதிகரிக்க செய்யும். எனவே, உடல் எடை சீராக இருக்கும். மேலும், ரத்த அழுத்தத்தை குறைத்து மாரடைப்பு ஏற்படாமல் காக்கும்.
நார்சத்து : 3 கிராம்

முளைக்கீரை
கீரைகளில் ஏராளமான நலன்கள் உள்ளன. பொட்டாசியம், அதிக படியான நார்ச்சத்துக்கள், வைட்டமின் கே போன்றவை இதில் அதிகம் இருக்கும். மேலும், எதிர்ப்பு சக்தியை கூட்ட கூடிய ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்களும் இதில் இருக்கிறது. இதனை அதிகமாக உணவில் சேர்த்து கொண்டால் உடல் எடை குறைந்து விடும்.
நார்சத்து : 4 கிராம்

சியா விதைகள்
நார்சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகளில் இந்த சியா விதையும் ஒன்று. இவை மிக குறைந்த அளவே கார்ப்ஸை கொண்டது. இவற்றை நீரிலோ அல்லது பழச்சாற்றுடன் கலந்து குடித்து வந்தால் உடல் எடை குறையுமாம். மேலும், இவை உடலுக்கு புத்துணர்வையும் தருகிறதாம்.
நார்சத்து: 10.6 கிராம்
மேற்சொன்ன உணவு வகைகளை சாப்பிட்டு அழகான உடல் அமைப்பை பெறுங்கள் நண்பர்களே. அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் முடியின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள். முடியின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.



Click it and Unblock the Notifications
