For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எகிப்தியர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ இந்த ஒன்றை தான் அதிகமாக சாப்பிட்டார்களாம்..!

|

ஒவ்வொரு நாட்டின் வரலாறும் பாரம்பரியமும் பலவித சிறப்புகளையும், ரகசிய குறிப்புகளையும் தனக்குள் ஒளித்து வைத்துள்ளது. ஒருசில நாடுகளின் வரலாற்றையே நாம் அதிகம் கூர்ந்து கவனிக்கின்றோம். அதில் மிக முக்கியமானது எகிப்திய வரலாறு தான். இந்த மக்களின் ஒவ்வொரு அசைவிலும் பல மர்மங்கள் உள்ளன என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

எகிப்திய மர்மங்கள் அனைத்திற்கும் இந்த ஒரு பொருள் தான் காரணமோ..!?

Pc:InverseHypercube

இதை கண்டுபிடிக்க ஏராளமான நாடுகளும் அதிக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக எகிப்தியர்களின் ஆயுட்காலத்தை பற்றிய ஆராய்ச்சி மிக முக்கியமானது. இதற்கான விடை தெரிந்து விட்டால் நிச்சயம் மனித இனத்தின் ஆயுட்காலம் நீடிக்கப்படும். அப்படி என்னத்தான் இந்த எகிப்தியர்கள் சாப்பிட்டிருப்பார்கள் என்கிற கேள்விக்கான விடையே இந்த பதிவு. வாங்க, எகிப்திய மர்மத்தை முழுமையாக தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தனித்துவம் பெற்றவர்கள்..!

தனித்துவம் பெற்றவர்கள்..!

எகிப்திய மக்கள் எல்லா விதத்திலும் தனித்துவம் பெற்றவர்களாக திகழ்ந்தனர். இவர்களின் உணவு முறை, வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள், போன்றவை மற்ற நாட்டினரை காட்டிலும் பல்வேறு விதத்தில் மாறுபடும். அத்துடன் பல மர்ம முடிச்சுகளும் இவர்களுடனே தொடர்ந்து பயணித்தது.

உதவி கரம் நீட்டிய நைல் நதி..!

உதவி கரம் நீட்டிய நைல் நதி..!

உலகின் மிக நீளமான நதி என்னும் சிறப்பை பெற்ற நைல் நதிதான் எகிப்தியர்களுக்கு தாய் போல உதவியது. இதன் நீரை வைத்து தான் சிறந்த முறையில் விவசாயம் செய்தார்கள். மண் வளத்தை காக்க இந்த நைல் நதி பெரிதும் உதவியுள்ளது. அதே போல சில சமயங்களில் இவை மிக பெரிய வெல்ல பெருக்கையும் ஏற்படுத்தியுள்ளது என ஆய்வுகள் சொல்கிறது.

உணவிலும் பிரிவா..?

உணவிலும் பிரிவா..?

உணவு உண்ணும் பழக்கம் எகிப்திர்களிடம் 2 விதமாக பிரிவுபட்டிருந்தது. அதாவது, உயர்ந்த குலம் மற்றும் தாழ்ந்த குலம் என இருபிளவுகளாக இருந்தது. இதில் உயர் குலத்தினர் இறைச்சி, பால்,காட்டு பறவை, முட்டை, பேரிச்சை, காய்கறிகள் போன்றவற்றை சாப்பிட்டு வந்தனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி மேசை போடப்பட்டிருக்குமாம்.

இரண்டாம் நிலை...

இரண்டாம் நிலை...

எகிப்தில் உள்ள தாழ்ந்த குலத்தவர்கள் பிரட், வெங்காயம், மீன், முட்டை, பீர், காய்கறிகள் போன்றவற்றை சாப்பிட்டு வந்தனர். ஆனால், இவர்கள் விலங்குகளின் தோலில் தயாரிக்கப்பட்ட மெத்தையில் கீழே உட்கார வேண்டுமாம். இவர்களின் வாழ்க்கை முறையிலும் நம்மை போன்றே ஏற்றத்தாழ்வும் இருந்தது.

MOST READ: விறைப்பு தன்மையை குணப்படுத்தும் மாதுளை..! இப்படி பயன்படுத்தினால் பலன் அதிகம்..!

பிரதான உணவு...

பிரதான உணவு...

பொதுவாக இவர்களின் பிரதான உணவு கோதுமை மற்றும் பார்லி தான். மேலும், சில மீன் வகைகளை புனிதமாக கருதினர். அத்துடன் வெள்ளை மற்றும் சிவப்புக் ஒயினை அதிகம் பருகுவார்கள். இவர்கள் எப்படியெல்லாம் சமைத்தார்கள் என்பதையும் ஓவியமாக வரைந்தும் வைத்துள்ளனர்.

இத்தனை முறை சாப்பாடா..!

இத்தனை முறை சாப்பாடா..!

நம்மை போன்று 3 முறை சாப்பிடும் பழக்கம் இவர்களுக்கு கிடையாது. மாறாக 5 முறை சாப்பிடும் பழக்கம் எகிப்தியர்கள் பின்பற்றினர். 90 சதவீத மக்கள் இதையே கட்டிபிடித்தும் வந்தனர். இதனால் உணவு சீரான இடைவேளையில் செரிமானம் ஆகுமாம். அத்துடன் உணவை இப்படி 5 வேலையாக பிரித்து சாப்பிடுவதால் பலவித நோய்களில் இருந்து தப்பித்து கொள்ளலாம் என அறிவியலும் சொல்கிறது.

மருத்துவமும் உணவும்..!

மருத்துவமும் உணவும்..!

இவர்களின் உணவு முறை மிக அற்புதமாக இருப்பதால் பெரும்பாலும் நோய்கள் இவர்களை தாக்காது. மீறி தாக்கினால் உணவு பொருட்கள், மனித பால் ஆகியற்றை கொண்டு சரி செய்து விடுவார்களாம். மருத்துவத்தில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இவர்கள் கைத்தேர்ந்து இருந்தார்கள்.

இவ்வளவு வகைகளா..?

இவ்வளவு வகைகளா..?

இவர்கள் தயாரிக்கும் உணவுகளில் அதிக ஆரோக்கியம் கொண்டிருக்குமாம். எல்லா வகையான உணவுகளிலும் ஒரு பிரதான உணவு பெரும்பாலும் சேர்க்கப்படுமாம். அவற்றில் சில உணவுகளின் பெயர்கள்...

ஃபுல்

டஹினி

கௌஷரி

அய்ஷ் பலாடி

கோப்ட்தா

கபாப்

PC: Dina Said

MOST READ: புற்றுநோயை அடியோடு ஒழிக்கும் கருப்பு எள்..! எவ்வளவு சாப்பிடணும்னு தெரியுமா..

இதுதான் ரகசியமோ..!?

இதுதான் ரகசியமோ..!?

எகிப்தியர்கள் சாப்பிட கூடிய பெரும்பாலான உணவுகளில் பூண்டு முக்கிய இடம் பெற்றிருக்கும். பூண்டு எகிப்தியர்களுக்கு மிகவும் பிடித்த உணவு பொருளாம். சைவ உணவுவாக இருந்தாலும், அசைவ உணவாக இருந்தாலும் அதில் பூண்டு இடம் பெற்றிருக்கும். இது தான் அவர்களை நீண்ட ஆயுளுடன் வைத்திருக்க காரணம் எனவும் சில ஆய்வுகள் சொல்கிறது.

மறு ஜென்மம்..!

மறு ஜென்மம்..!

எகிப்தியர்கள் என்னதான் அதிக ஆயுளுடன் வாழ்ந்தாலும், இவர்களுக்கு மறு ஜென்மத்தின் மீது அதிக நம்பிக்கை இருந்தது. அதனால் தான் தங்களின் உடலை பத்திரமாக பதப்படுத்தி வைக்கும் சடங்கை மேற்கொண்டு வந்தனர். இன்று இதை வைத்து தான் நாம் ஆய்வு செய்து வருகின்றோம்.

சர்ச்சைகள்..!

சர்ச்சைகள்..!

பண்டைய எகிப்தியர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ சாத்திய கூறுகள் இல்லை என்கிற சர்ச்சை பல காலமாக நீடிக்கின்றது. அத்துடன் இவர்கள் கட்டிய பிரமிடுகள் பூமியின் மைய பகுதியில் சரியாக அமைந்துள்ளதால், மனிதனால் அன்றைக்கு இவை சாத்தியம் இல்லை என்றும் கூறப்படுகிறது.

ஏலியனும் மம்மிகளும்..!

ஏலியனும் மம்மிகளும்..!

இது போன்ற காரணங்களால் எகிப்தியர்களை ஏலியனுடன் கூட சிலர் ஒப்பிடு செய்துள்ளனர். இவர்கள் பற்றிய இத்தனை சர்ச்சைகளுக்கும் இவர்களின் வாழ்க்கை முறையும், உணவு முறையும், அறிவியல் ரீதியான அணுகு முறையும் முக்கிய காரணம் என்றே சொல்ல வேண்டும்.

MOST READ: கருவில் இருக்கும்போதே குழந்தைகள் பூமியில் வாழ தங்களை எப்படி தயார்படுத்திக்கொள்வார்கள் தெரியுமா

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Healthy Food Habits Of Ancient Egypts

This article is about healthy food habits of ancient egypts.
Desktop Bottom Promotion