Latest Updates
-
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
கொழுப்பைக் கரைக்கும் ஹார்மோனை அதிகரிக்க சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்!
ஆய்வில் உடல் பருமனுக்கும், லிப்டின் ஹார்மோனுக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லிப்டின் என்பது கொழுப்பு செல்களால் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோனாகும் மற்றும் இது உடலில் கொழுப்பு செல்கள் அதிகமாக உள்ளதா அல்லது குறைபாட்டில் உள்ளதா என்பதை மூளைக்கு தெரிவிக்கும். உடலில் கொழுப்புக்கள் சரியான அளவு இருக்கும் போது, இது இரத்தத்தில் நுழைந்து, உடலில் போதுமான அளவு கொழுப்பு இருப்பதை உணர்த்தும்.
லிப்டின் என்னும் ஹார்மோன், ஒருவர் போதுமான அளவு சாப்பிட்டிருந்தால், உடலில் ஆற்றல் அளவு போதுமான அளவு இருந்தால் அல்லது இவைகள் அனைத்தும் அதிகரிக்க வேண்டும் என்பதை மூளைக்கு தெரிவிக்கும். இந்த லிப்டின் அளவில் பல்வேறு காரணிகள் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் கலோரி உணவுகள், உண்ணும் நேரம், உடற்பயிற்சி, மன அழுத்தம், தூக்க நேரம் போன்றவை குறிப்படத்தக்கவை.
லிப்டின் ஹார்மோன் இனப்பெருக்க மண்டலம், தைராய்டு சுரப்பி, நாளமில்லா சுரப்பி மற்றும் ஹார்மோன் உற்பத்தியின் வளர்ச்சி போன்றவற்றை முறையாக செயல்படச் செய்யும் முக்கிய பணியைச் செய்கிறது. இப்போது உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களைக் கரைக்கும் உணவுகள் குறித்து காண்போம். அதைப் படித்து அவற்றை உட்கொண்டு உடலில் இருக்கும் கொழுப்புக்களைக் கரையுங்கள்.

கிரேப்ஃபுரூட்
சிட்ரஸ் பழங்களுள் ஒன்றான கிரேப்ஃபுரூட், கொழுப்புச் செல்களை கரைக்க உதவும் மற்றும் உடலின் மெட்டபாலிசத்தை சிறப்பாக வைத்துக் கொள்ளும். கிரேப்ஃபுரூட்டில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது மற்றும் இது உணவுகளை விரைவில் செரிக்க உதவும். ஒருவர் உணவு உண்பதற்கு முன் பாதி கிரேப்ஃபுரூட் அல்லது கிரேப்ஃபுரூட் ஜூஸைக் குடித்து வருவதன் மூலம், அதிகப்படியான கலோரிகளை எடுப்பது குறைவதோடு,, உடல் எடையும் குறையும்.

முழு தானியங்கள்
முழு தானியங்கள் கொழுப்பைக் கரைக்கும் ஹார்மோன்களை அதிகரிக்க உதவும். ஏனெனில் இதில் மெட்டபாலிசத்தை மேம்படுத்தும் மற்றும் இன்சுலின் அளவை நிலையாக பராமரிக்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுக்கள் உள்ளன. அதோடு, இது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும். எனவே முழு தானிய உணவுகளான பார்லி, திணை, பக்வீட் போன்றவற்றை சாப்பிடுங்கள்.

ப்ராக்கோலி
ப்ராக்கோலியும் உடலில் கொழுப்பு செல்களைக் கரைக்கும் ஹார்மோன்களை அதிகரிக்கும். இதில் உள்ள வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இதர அத்தியாவசிய கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள், எடை குறைப்பு டயட்டில் சேர்ப்பதற்கு ஏற்ற சிறப்பான உணவாக காட்டுகிறது. ப்ராக்கோலியில் கலோரிகள் மற்றும் கொழுப்பு மிகவும் குறைவு. ஆனால் எடையை வேகமாக குறைக்கும் டயட்டரி நார்ச்சத்துக்கள் அதிகம் .

மீன்
சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி, டூனா போன்றவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இந்த கொழுப்பு அமிலங்கள் உடலில அளவுக்கு அதிகமான லிப்டின் அளவுகளைக் குறைக்கும். உடலில் லிப்டின் அளவுகள் அதிகமானால், உடல் பருமன் பிரச்சனையால் அவஸ்தைப்படக்கூடும். மேலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், உடலின் எடையை சீரான அளவில் பராமரிக்கும்.

ஜிங்க் உணவுகள்
பல ஆய்வுகளில் ஜிங்க் குறைபாடு உள்ளவர்களது உடலில் லிப்டின் அளவு மிகவும் குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது மற்றும் உடல் பருமன் உள்ள பலரது உடலில் ஜிங்க் சத்து மிகவும் குறைவாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. ஆகவே ஜிங்க் நிறைந்த உணவுகளான மாட்டிறைச்சி, கடல் சிப்பி, நட்ஸ், கொக்கோ, கடல் உணவுகள் மற்றும் பூசணிக்காய் போன்றவற்றை டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பச்சை இலைக் காய்கறிகள்
பச்சை இலைக் காய்கறிகளான பசலைக்கீரை, லெட்யூஸ், கேல், ப்ராக்கோலி போன்றவற்றில் அத்தியாவசிய சத்துக்கள் அதிகம் உள்ளது. இந்த உணவுகள் உடலில் தேவையற்ற கொழுப்புக்கள் அதிகரிக்காமல் செய்யும். மேலும் இவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இது உடலில் கெட்ட கொழுப்புக்களைக் குறைத்து, கொழுப்பைக் கரைக்கும் ஹார்மோன்களை அதிகரிக்கும்.

புரோட்டீன் உணவுகள்
புரோட்டீன் பசியைக் கட்டுப்படுத்த உதவுவதோடு, தசைகளின் அடர்த்தியை தக்க வைக்கும். ஒருவரது டயட்டில் புரோட்டீன் அதிகம் இருந்தால், அது அதிகளவு உணவு உண்பதைக் குறைப்பதோடு, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். எனவே புரோட்டீன் நிறைந்த உணவுகளான மீன், முட்டை, தயிர், பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ் போன்றவற்றை டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஆரோக்கியமான கொழுப்புக்கள் நிறைந்த உணவுகள்
அனைத்து வகையான கொழுப்புக்களுமே மோசமானது இல்லை. ஒருவர் தங்களது டயட்டில் ஆரோக்கியமான வகை கொழுப்புக்களை சேர்த்து வந்தால், அது கெட்ட கொழுப்புக்களின் அளவைக் குறைக்கும். எனவே ஆரோக்கியமான நல்ல கொழுப்புக்கள் நிறைந்த ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய், அவகேடோ, நட்ஸ், விதைகள், முட்டை, பால் பொருட்கள் போன்றவற்றை டயட்டில் சேர்த்து வாருங்கள்.

கேரட்
கேரட்டில் பீட்டா-கரோட்டீன் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. கேரட்டில் தயமின், நியாசின், வைட்டமின் பி6, ஃபோலேட், மாங்கனீசு, டயட்டரி நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகம் உள்ளது. ஆகவே இந்த கேரட்டை தினமும் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள அதிகளவு கொழுப்புக்களைக் கரைக்கலாம்.



Click it and Unblock the Notifications