Latest Updates
-
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
இந்த உணவுகள் உங்கள் உடல் சூட்டை அதிகரிக்கும் என்று தெரியுமா?
இங்கு உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
நாம் தினமும் சாப்பிடும் உணவுகள் நம் உடலில் ஒருசில வழிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் நாம் சாப்பிடும் பெரும்பாலான உணவுகள், செரிமானமாகும் போது நம் உடலில் வெப்பத்தை உற்பத்தி செய்யும். பொதுவாக உணவுகளில் கொழுப்பு, புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட் போன்றவை செரிமானமாகும் போது, உடலின் வெப்பநிலை அதிகரிக்கும். ஒருவரது உடல் வெப்பநிலை அளவுக்கு அதிகமாக உயரும் போது, பல ஆரோக்கிய பிரச்சனைகளால் அவஸ்தைப்பட நேரிடும்.

எனவே எந்த உணவுகளை உட்கொண்டால் உடல் வெப்பம் அதிகரிக்கும் என்பதைத் தெரிந்து கொள்வதோடு, எதை உட்கொண்டால் உடல் குளிர்ச்சியுடன் ஆரோக்கியமாக இருக்கும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
"நாம் உண்ணும் உணவு ஒரு கணிசமான தாக்கத்தைக் கொண்டுள்ளது. எப்போது நாம் உண்ணும் உணவால் உடலின் வெப்பநிலை அதிகரிக்கிறதோ, அது தெர்மோஜெனிசிஸ் எனப்படுகிறது. குறிப்பிட்ட புரோட்டீனைக் கொண்ட பழுப்பு நிற கொழுப்பை உற்பத்தி செய்ய உண்ணும் உணவை உடல் உடைத்தெறியும் போது தெர்மோஜெனிசிஸ் ஏற்படுகிறது" என்று ஊட்டச்சத்து மற்றும் உடலியக்கவியல் நிபுணரான ரித்தேஷ் கூறுகிறார்.

வேர் காய்கறிகள்
வேர் காய்கறிகள் உடலின் வெப்பநிலையை அதிகரிக்கும். அதாவது உருளைக்கிழங்கு, கேரட், சர்க்கரைவள்ளிக் கிழங்கு மற்றும் கேல் போன்றவற்றை ஒருவர் சாப்பிட்டால், அது உடல் சூட்டை அதிகரிக்கும். ஏனெனில் இந்த காய்கறிகள் செரிமானமாவதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுவதால், இது உடல் சூட்டை அதிகரிக்கும். இந்த வகை காய்கறிகள் குளிர்காலத்தில் சாப்பிட ஏற்ற காய்கறிகளாகும்.

வெங்காயம், பூண்டு
ஆயுர்வேதத்தின் படி, வெங்காயம் மற்றும் பூண்டு போன்றவை உடலின் வெப்பநிலையை அதிகரிக்கும். அதோடு இந்த காய்கறிகள், ஒருவரது உடல் வெப்பநிலையை அதிகரிப்பதோடு, கண்ட கண்ட கனவுகளின் தொல்லை, பேய் கனவு மற்றும் குழப்பமான மனநிலை போன்றவற்றையும் உண்டாக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.

சூடான பானங்கள்
இயற்கையாகவே மிகவும் சூடான பானங்களைக் குடித்தால், உடலின் வெப்பநிலை அதிகரிக்கும். பெரும்பாலான ஊட்டச்சத்து நிபுணர்கள் இது உடலுக்கு நல்லது என்று கூறுகிறார்கள். ஒருவரது உடலின் வெப்பநிலை உடற்பயிற்சி செய்தோ அல்லது உணவுகளை உட்கொண்டோ சற்று அதிகரித்தால், அதனால் உடலைத் தாக்கும் கிருமிகளை உடல் வலிமையுடன் எதிர்த்துப் போராடி, உடலுக்கு பாதுகாப்பை வழங்குமாம். இருப்பினும் கோடைக்காலத்தில் உடலின் வெப்பநிலையை அதிகரிக்கும் உணவுகளில் கவனமாக இருங்கள்.

பழங்கள்
பழங்களான மாம்பழம், ஆப்பிள், ஆரஞ்சு போன்றவை உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுகளாக கருதப்படுகிறது. இந்த பழங்களை ஒருவர் அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், அது உடல் சூட்டை அதிகரிப்பதோடு, வயிற்றில் எரிச்சலை உண்டாக்கும்.

இஞ்சி, மிளகாய்
சமையலறையில் உள்ள மிளகுத் தூள், மிளகாய், தூள், பச்சை மிளகாய், இஞ்சி போன்றவை உடலின் வெப்பநிலையை உடனே அதிகரிக்கும். இந்த உணவுப் பொருட்களை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அது பின் பெரும் விளைவை உண்டாக்கிவிடும்.

பசலைக்கீரை, ப்ராக்கோலி
ஒருவரது உடல் சூட்டை பசலைக்கீரை, ப்ராக்கோலி, பீன்ஸ் போன்ற உணவுப் பொருட்களும் அதிகரிக்கும் என்பது தெரியுமா? எனவே இந்த மாதிரியான உணவுப் பொருட்கள் மிகவும் ஆரோக்கியமானதாக இருந்தாலும், இது உடல் சூட்டை அதிகரிக்கும் என்பதால், மிதமான அளவில் சாப்பிடுவதே நல்லது. இல்லாவிட்டால், பெரும் பிரச்சனையை சந்திக்க வேண்டி வரும்.

உடல் சூட்டை அதிகரிக்கும் வேறு சில பழங்கள்
வாழைப்பழம், ஆரஞ்சு, பீச், ப்ளம்ஸ் போன்ற மிகவும் ருசியான சில பழங்களும் உடலின் வெப்பநிலையை அதிகரிக்கும். இந்த பழங்கள் உங்களுக்கு மிகவும் விருப்பமான பழங்களாக இருக்கலாம். ஆனால் இவற்றை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், உடல் சூடு அதிகரித்துவிடும்.

நட்ஸ் வகைகள்
நட்ஸ் வகைகளில் பிஸ்தா, வால்நட்ஸ், முந்திரி, தோலுடனான பாதாம், வேர்க்கடலை போன்றவற்றை ஒருவர் தினமும் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியம் மேம்படும். ஆனால் அதையே ஒருவர் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், உடல் சூட்டினால் அவஸ்தைப்படக்கூடும்.

இதர உணவுகள்...
கத்திரிக்காய், முள்ளங்கி, ஆலிவ், குடைமிளகாய், தக்காளி, டர்னிப், உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கைக்குத்தல் அரிசி, காராமணி, புளித்த க்ரீம், சீஸ், சிக்கன், முட்டைகள், மீன், பருப்பு வகைகள், வெண்ணெய் போன்றவைகளும் உடல் சூட்டை அதிகரிப்பவைகளாகும். எனவே வெயில் காலத்தில் இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். இல்லையென்றால் உடல் சூட்டினால் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.

குறிப்பு
மேலே கொடுக்ப்பட்டுள்ள உணவுகள் அனைத்துமே ஆரோக்கியமானவைகள் என்பதால், இவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதில்லை. ஆனால் இந்த உணவுகளை ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக சாப்பிடாமல், மிதமான அளவிலேயே சாப்பிடுங்கள். இல்லாவிட்டால், அது வயிற்று பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். எப்போதும் எந்த ஒரு உணவையும் மிதமான அளவில் சாப்பிடுவதே நல்லது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications