இந்த உணவுகளை சாப்பிட்டா 'கக்கா' பிரச்சனை உடனே சரியாயிடும்...

Posted By:
Subscribe to Boldsky

உலகில் சுமார் 20% மக்கள் மலச்சிக்கல் பிரச்சனையால் கஷ்டப்படுகிறார்கள். அதே சமயம் நிச்சயம் வாழ்நாளில் ஒருமுறையாவது மலச்சிக்கலால் அவஸ்தைப்பட்டிருப்போம். ஒருவருக்கு மலச்சிக்கல் ஏற்படுவதற்கு நார்ச்சத்து குறைவான டயட், உடலுழைப்பு இல்லாமை போன்றவை தான் முக்கிய காரணம். மலச்சிக்கல் பிரச்சனையை குறிப்பிட்ட மலமிளக்கிகள், நார்ச்சத்து சப்ளிமென்ட்டுகள் மற்றும் மலமிளக்கும் பொருட்களைக் கொண்டு விடுபடலாம். அதே சமயம் குறிப்பிட்ட சில உணவுகள் மலச்சிக்கலைத் தடுக்கும்.

Foods That Make You Poop Immediately

ஒருவர் வாரத்திற்கு குறைந்தது மூன்று முறை அல்லது ஒரு நாளைக்கு மூன்று முறை சென்றால், அவர்களது உடல் ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம். அதுவே குறைவாக இருந்தால், மலச்சிக்கல் பிரச்சனையால் கஷ்டப்படுகிறார்கள் என்று அர்த்தம். உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுவிக்கும் உணவுகள் எவையென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது குடலின் வழியே செரிமானமாகாத உணவுகள் தடையின்றி செல்ல உதவி, குடலியக்கத்தை சிறப்பாக நடைபெற வழிவகுக்கும். ஆப்பிளில் உள்ள மற்றொரு கரையக்கூடிய நார்ச்சத்தான பெக்டின் என்னும் பொருள் மலமிளக்கும் பண்பைக் கொண்டது. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், அது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும்.

சூடான பானங்கள்

சூடான பானங்கள்

காபி அல்லது டீ போன்றவற்றை சூடாக குடியுங்கள். பானங்களை சூடாக குடிக்கும் போது, அது குடலியக்கத்தைத் தூண்டி, மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும். மேலும் பானத்தை சூடாக குடித்தால், இரத்த நாளங்கள் விரிவடைந்து, செரிமானம் சிறப்பாக நடைபெற்று, மலம் எளிதில் வெளியேறும். ஆய்வு ஒன்றில், வெதுவெதுப்பான நீரைக் குடித்தால், குடலியக்கம் சிறப்பாக நடைபெறுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆப்ரிகாட்

ஆப்ரிகாட்

ஆப்ரிகாட்டில் ஒரு வகையான ஜப்பானிய ஆப்ரிகாட், பெருங்குடல் அதிர்வெண் மற்றும் பெருங்குடல் சுருக்கத்தை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே கடுமையான மலச்சிக்கலால் கஷ்டப்பட்டு வந்தால், ஆப்ரிகாட் பழத்தை வாங்கி சாப்பிடுங்கள்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதை சாப்பிட்டால், அது மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளித்து, மலத்தை வெளியேற்ற உதவும். பச்சை வாழைப்பழத்தில் உள்ள ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச், கரையக்கூடிய நார்ச்சத்து போன்று செயல்பட்டு, குடலின் செயல்பாட்டை மென்மையாக்கும்.

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரி

அனைத்து பழங்களைப் போன்று, ப்ளூபெர்ரியிலும் டயட்டரி நார்ச்சத்து ஏராளமாக உள்ளது. இது மலச்சிக்கலுக்கான அறிகுறிகளைப் போக்கி, மலத்தை எளிதில் வெளியேற்றும். முக்கியமாக கேன்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் ப்ளூபெர்ரிப் பழங்களை தவிர்த்திடுங்கள். ஏனெனில் இதில் செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டிருப்பதுடன், ஊட்டச்சத்துக்களும் குறைவான அளவில் இருக்கும்.

சியா விதைகள்

சியா விதைகள்

சியா விதைகளில் நார்ச்சத்துக்கள் மட்டுமின்றி, ஆரோக்கியமான கொழுப்புக்களும் அதிக அளவில் நிறைந்துள்ளது மற்றும் இது நீரை உறிஞ்ச உதவும். இதனால் அது மலச்சிக்கலை சரிசெய்ய உதவி, மலத்தை உடனடியாக வெளியேறத் தூண்டும். மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள், தினமும் 2-3 டேபிள் ஸ்பூன் சியா விதைகளை நீரில் ஊற வைத்து சாப்பிட, நல்ல பலன் கிடைக்கும்.

எப்சம் உப்பு

எப்சம் உப்பு

எப்சம் உப்பானது மக்னீசியம் மற்றும் சல்பேட் போன்றவை அடங்கியது. எப்சம் உப்பை எடுப்பதன் மூலம், குடலில் நீரின் அளவை அதிகரிக்கும். இதனால் மலம் இறுக்கமடையாமல் இளகி, எளிதில் வெளியேறும். அதற்கு 2-4 டீஸ்பூன் எப்சம் உப்பை 8 அவுன்ஸ் நீரில் கலந்து குடிக்க வேண்டும்.

திராட்சை

திராட்சை

திராட்சையில் மலமிளக்கும் பண்புகள் மிதமான அளவில் உள்ளது. இதை தினமும் சாப்பிட்டு வந்தால், அது மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும். மேலும் திராட்சையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. 10 திராட்சை பழத்தில் 2.6 கிராம் நார்ச்சத்து உள்ளது. ஆகவே இதை தினமும் சிறிது சாப்பிட்டு, மலச்சிக்கல் வராமல் தடுத்திடுங்கள்.

பப்பளிமாஸ்

பப்பளிமாஸ்

பப்பாளிமாஸ் பழத்தில் உள்ள மலமிளக்கும் பண்புகள், மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுவதோடு, மலத்தை உடனே வெளியேற்றும். 154 கிராம் பப்பாளிமாஸ் பழத்தில் 2.3 கிராம் நார்ச்சத்து அடங்கியுள்ளது. ஆனால் பப்பளிமாஸ் பழத்தை சாப்பிட்டால், அது குறிப்பிட்ட மருத்துகளில் இடையூறை ஏற்படுத்தும். எனவே நீங்கள் தினமும் ஏதேனும் மருந்து மாத்திரைகளை உட்கொண்டு வந்தால், பப்பாளிமாஸ் பழத்தை சாப்பிடும் முன் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.

கிவி

கிவி

கிவி பழத்தில் 2 கிராம் நார்ச்சத்து உள்ளது. அதுவும் இதில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இந்த நார்ச்சத்துக்கள் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும்.

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸ்

தண்ணீர் இறுகிய மலத்தை இளகச் செய்யும். மேலும் எலுமிச்சையில் உள்ள அசிட்டிக் அமிலம், செரிமான மண்டலத்தில் வேலை செய்யும். இந்த இரண்டையும் ஒன்றாக கலந்து குடிக்கும் போது, அது மலச்சிக்கலில் இருந்து விரைவில் விடுவிக்கும். அதுவும் இரவில் படுக்கும் முன் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினைக் கலந்து குடிக்க வேண்டும். இதனால் இரவு நேரத்தில் இந்த எலுமிச்சை ஜூஸ் மலத்தை இளகச் செய்து, காலையில் எழுந்ததும் உடனே வெளியேற்றச் செய்யும்.

மாம்பழம்

மாம்பழம்

பார்த்ததுமே அனைவரது வாயில் இருந்தும் எச்சில் ஊறும் ஓர் பழம் தான் மாம்பழம். இந்த பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது மற்றும் இது மலச்சிக்கலையும் விடுவிக்கும். ஆனால் மாம்பழத்தை ஜூஸ் வடிவில் குடித்தால், அதில் உள்ள பைட்டோகெமிக்கல்கள் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மலத்தை இளகச் செய்து எளிதில் வெளியேற்றும்.

ஆரஞ்சு

ஆரஞ்சு

ஒரு பெரிய ஆரஞ்சு பழத்தில் 4 கிராம் நார்ச்சத்து மற்றும் 86 கலோரிகள் உள்ளது. ஆரஞ்சு பழத்தில் உள்ள ப்ளேவோனாலான நாரின்ஜெனன், மலமிளக்கும் செயலில் ஈடுபட்டு, உடலில் உள்ள கழிவை வெளியேற்றுவதாக சைனீஸ் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆகவே ஆரஞ்சு பழத்தை தினமும் ஒன்று சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

ஓட்ஸ் மிகவும் சிறப்பான காலை உணவு. ஒரு கப் ஓட்ஸில் 4 கிராம் நார்ச்சத்தும், அதில் பாதி கரையக்கூடிய நார்ச்சத்தாகும். ஆகவே மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள், தினமும் காலையில் ஓட்ஸை உணவாக உட்கொண்டு வந்தால், மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலில் உள்ள கொழுப்புக்கள், குடலின் உட்பகுதியை மென்மையாக்கி, மலத்தை குடலின் வழியே எளிதில் நகர்த்தும். முக்கியமாக ஆலிவ் ஆயிலில் உள்ள கொழுப்புக்களானது, மலத்தில் அதிகளவு நீரை தக்க வைக்க உதவி, மலம் இறுகாமல் தடுக்கும்.

உலர்ந்த முந்திரிப்பழம்

உலர்ந்த முந்திரிப்பழம்

உலர்ந்த முந்திரிப்பழம் இயற்கையாகவே மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும் பொருளாக கருதப்படுகிறது. இதற்கு காரணம் அதில் உள்ள அதிகளவிலான கரையக்கூடிய நார்ச்சத்தும், மலமிளக்கும் பொருளான சார்பிடோல் இருப்பதும் தான். எனவே உலர்ந்த முந்திரிப்பழத்தை இரவில் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து சாப்பிடுங்கள்.

திணை

திணை

தானியங்களுள் ஒன்றான திணையில் மற்ற தானியங்களை விட இரண்டு மடங்கு அதிகமாக நார்ச்சத்து உள்ளது. இந்த திணையை ஒருவர் காலை உணவாக உட்கொண்டால், அது மலச்சிக்கல் தொல்லையில் இருந்து விடுவித்து, மலத்தை எளிதாக வெளியேற்ற செய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Foods That Make You Poop Immediately

Here we listed some of the top foods that make you poop. Read on to know more...
Story first published: Thursday, March 22, 2018, 9:01 [IST]