உண்மை என நினைக்கும் உணவுகள் குறித்த சில பொய்யான விஷயங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

நாம் பல கட்டுரைகளில் உணவுகளைக் குறித்தும், உணவுப் பழக்கங்கள் குறித்தும் பல விஷயங்களைப் படித்திருப்போம். ஆனால் உலகில் உணவுகளைக் குறித்து ஏராளமான பொய்யான தகவல்கள் மக்களால் பரப்பப்பட்டு உள்ளன. இப்படி பொய்யாக பரப்பப்படும் விஷயங்களை பலரும் உண்மை என நினைத்து இன்று வரை பின்பற்றிக் கொண்டிருப்போம்.

உங்களுக்கு உலகில் அப்படி கண்மூடித்தனமாக பின்பற்றப்பட்டு வரும் உணவுகள் குறித்த சில பொய்யான தகவல்கள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு உணவுகள் குறித்த கட்டுக்கதைகளும், ஆரோக்கியம் மேம்பட சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக்கூடாதவைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

முக்கியமாக இன்று பலரைத் தாக்கும் புற்றுநோயின் தாக்கத்தை ஒருசில சூப்பர் உணவுகளை உட்கொண்டால் தடுக்கலாம் என்று பலரும் நினைக்கிறோம். ஆனால் உண்மையோ வேறு. இதுப்போன்று நமக்குத் தெரியாத பல விஷயங்கள் உள்ளன. அதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கட்டுக்கதை #1

கட்டுக்கதை #1

கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்டால் குண்டாவோம் என்பது வெறும் கட்டுக்கதை.

உண்மையில், கொழுப்பு நிறைந்த உணவுகளில் கலோரிகள், கார்போஹைட்ரேட்டுகள் இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதால், இது நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுத்து, அடிக்கடி கண்ட உணவுகளை சாப்பிடாமல் தடுக்கும். ஒருவரது உடலில் கொழுப்புக்கள் மிகவும் அவசியமாகும். ஏனெனில் கொழுப்புக்களானது கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களான ஏ, டி, ஈ மற்றும் கே போன்றவற்றி உறிஞ்ச உதவி, ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும் என்று மூத்த மருத்துவ நிபுணர் ஸ்டீபனி மக்ஸ்சன் சொல்கிறார். மேலும் மக்ஸ்சன் தாவர உணவுகளில் இருந்து பெறப்படும் கொழுப்புக்களை உட்கொள்ள பரிந்துரைக்கிறார். இந்த தாவர வகை கொழுப்புக்கள் அவகேடோ, ஆலிவ் ஆயில், நட்ஸ் மற்றும் விதைகளில் அதிகம் உள்ளது.

கட்டுக்கதை #2

கட்டுக்கதை #2

உறைய வைக்கப்பட்ட உணவுகள் நற்பதமான உணவுகளைப் போன்று ஆரோக்கியமானது அல்ல என்பது ஒரு கட்டுக்கதை.

சில சமயங்களில் உறைய வைக்கப்பட்ட உணவுகள் நற்பதமான உணவுகளை விட மிகவும் ஊட்டச்சத்து மிக்கதாக இருக்கும் என பிப்ஸ் கூறுகிறார். உறைய வைக்கப்படும் உணவுகள் சில மணிநேரங்களில் குளுமையாக்கப்பட்டு, குறிப்பிட்ட நேரத்தில் ஊட்டச்சத்துக்களை பூட்டி வைத்துவிடும். ஆனால் இந்த உறைய வைக்கப்பட்ட உணவுகளானது அளவுக்கு அதிகமாக உறைய வைக்கப்படும் போது தான் நல்லதல்ல. குறிப்பிட்ட காலம் வரை வைத்திருந்து பயன்படுத்தினால், அது மிகச்சிறந்த உணவுப் பொருள் தான்.

கட்டுக்கதை #3

கட்டுக்கதை #3

ஜூஸ்களைக் குடித்து உடலை சுத்தம் செய்வது நல்லது என்பது ஒரு கட்டுக்கதை.

உண்மையில், உடலானது இயற்கையாகவே உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்களை வெளியேற்றும் என்று பிப்ஸ் சொல்கிறார். வெறும் பழம் மற்றும் காய்கறி ஜூஸ்களைக் குடித்தால், அது தலைவலி, உடலில் குறைவான ஆற்றல் மற்றும் குமட்டலை ஏற்படுத்தும். இதை அப்படியே பின்பறறினால், பெரும் ஆபத்தை சந்திக்க நேரிடும். முக்கியமாக பழங்கள் மற்றும் காய்கறிகளை ஜூஸாக தயாரித்துக் குடிக்கும் போது, அதிலிருந்து சக்தி வாய்ந்த நார்ச்சத்து தான் வெளியேற்றப்படும். தாவர வகை உணவுகளில் இருந்து பெறப்படும் நார்ச்சத்து, குறிப்பிட்ட வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என பிப்ஸ் கூறுகிறார்.

கட்டுக்கதை #4

கட்டுக்கதை #4

சூப்பர் உணவுகளை மட்டும் உட்கொண்டாலே புற்றுநோயைத் தடுக்கலாம் என்பது கட்டுக்கதை.

ஆரோக்கியமான டயட்டை மேற்கொண்டாலே, புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கலாம். வெறும் 1-2 சூப்பர் உணவுகளை உட்கொண்டால் மட்டும் புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு கிடைக்காது. இந்த உணவுகள் வேண்டுமானால், உங்கள் டயட்டில் இருக்கும் சத்துக்களின் அளவை சற்று அதிகரிக்கலாம் என்று பிப்ஸ் கூறுகிறார். அதோடு உடலை நோய்கள் தாக்காமல் இருக்க வேண்டுமானால், காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், பருப்பு வகைகள் போன்றவை கலந்த சரிவிகித டயட்டை மேற்கொள்ளுங்கள்.

கட்டுக்கதை #5

கட்டுக்கதை #5

டயட்டில் முட்டைகள் ஒரு ஆரோக்கியமற்ற தேர்வாகும் என்பது கட்டுக்கதை.

பலரும் முட்டையில் கொழுப்புக்கள் அதிகம் உள்ளதால் ஆரோக்கியமற்றதாக நினைக்கின்றனர். முட்டையில் கொழுப்புக்கள் அதிகம் இருக்கலாம். ஆனால் அளவாக சாப்பிட்டால் எவ்வித பிரச்சனைகளையும் சந்திக்க வாய்ப்பில்லை. மேலும் முட்டையில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. குறிப்பாக கோலைன் என்னும் நினைவாற்றல் மற்றும் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும் பொருள் உள்ளது. அதோடு இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், நாள்பட்ட அழற்சியைக் குறைக்க உதவும்.

கட்டுக்கதை #6

கட்டுக்கதை #6

இரவு நேரத்தில் தாமதமாக சாப்பிட்டால் உடல் பருமன் அதிகரிக்கும் என்பது ஒரு கட்டுக்கதை.

உண்மையில், ஒருவரது உடல் எடையானது உணவை உட்கொண்டதுமே அதிகரிப்பதில்லை. பகல் வேளையில் நீங்கள் அதிகமாக சாப்பிட்டாலும் சரி அல்லது இரவு நேரத்தில் தாமதமாக சாப்பிட்டாலும் சரி, நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள், எவ்வளவு கலோரிகளை உட்கொள்கிறீர்கள், உடலுக்கு எவ்வளவு உழைப்பு கொடுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து தான் ஒருவரது உடல் எடை அதிகரிப்பது உள்ளது என ஆராய்ச்சி நிபுணர் கேட்டி பிஸ்பெக் கூறுகிறார்.

கட்டுக்கதை #7

கட்டுக்கதை #7

நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்தால், என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்பது கட்டுக்கதையே.

உண்மையில், ஒருவரது உடல் பருமன் அதிகரிக்காமல் இருக்க உடற்பயிற்சி மட்டும் உதவாது. உடற்பயிற்சியானது உட்கொள்ளும் கலோரிகளின் அளவு மற்றும் எரிக்கும் கலோரிகளுக்கு இடையே ஒரு சமநிலையைப் பராமரிக்க உதவும் ஒரு செயல் தான். என்ன தான் உடற்பயிற்சியை ஒருவர் செய்தால், சரிவிகித டயட்டை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என பிப்ஸ் கூறுகிறார். உடற்பயிற்சி மற்றும் சரிவிகித டயட் என இரண்டையும் ஒருவர் சரியாக பராரித்தால், உதான் உடல் எடை சரியாக பராமரிக்கப்பட்டு, புற்றுநோயின் அபாயமும் குறையும்.

கட்டுக்கதை #8

கட்டுக்கதை #8

கார்போஹைட்ரேட் குறைவான உணவுகளை உட்கொள்வதே நல்லது என்பது கட்டுக்கதை.

உண்மையில், நார்ச்சத்து, புரோட்டீன் போன்று கார்போஹைட்ரேட்டும் உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமானது. ஏனெனில் இது உடலுக்கு ஆற்றலை வழங்கும். ஆனால் சரியான கார்போஹைட்ரேட்டை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். ஏனெனில் கார்போஹைட்ரேட்டில் ஆரோக்கியமானது, ஆரோக்கியமற்றது என இரு வகைகள் உள்ளன. முழு தானிய உணவுகளான கைக்குத்தல் அரிசி, ஓட்ஸ் அல்லது முழு கோதுமை பிரட் அல்லது ஸ்டார்ச் காய்கறிகளான சர்க்கரைவள்ளிக் கிழங்கு, நற்பதமான சோளம் அல்லது பட்டாணியில் இருக்கும் கிடைக்கும் கார்போஹைட்ரேட்டுகள் ஆரோக்கியமானவைகள். இவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது. ஆனால் வெள்ளை பிரட், இனிப்புக்கள் போன்றவற்றில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளாகும். இவற்றை உட்கொள்வதைத் தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Food And Cancer: Truths To Help Lower Risk

When it comes to foods and eating habits that help prevent cancer, there's a lot of misinformation floating around. Here are their top eight food myths.