கடுமையான மூட்டு வலி கொண்டவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்!

Posted By:
Subscribe to Boldsky

மூட்டு இணைப்புகளில் உள்ள அழற்சி மற்றும் வீக்க நிலை தான் ஆர்த்ரிடிஸ். தற்போது நிறைய பேர் மூட்டு பிரச்சனைகளால் அதிகம் கஷ்டப்பட்டு வருகிறார்கள். பொதுவாக மூட்டு பிரச்சனையான ஆர்த்ரிடிஸ் பிரச்சனை இருக்கும் போது, ஒட்டுமொத்த உடலும் அழற்சி நிலையின் தான் இருக்கும்.

எனவே இந்த பிரச்சனை இருப்பவர்கள் உண்ணும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் ஆர்த்ரிடிஸ் பிரச்சனை தீவிரமாவதோடு, உடல் பருமன், இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் போன்றவற்றால் அவஸ்தைப்படக்கூடும் என ஆர்த்ரிடிஸ் ஃபவுண்டேஷன் கூறுகிறது.

Do You Have Arthritis? Here Is What You Should Not Eat!

ஆர்த்ரிடிஸ் இருந்தால், நடப்பது, உட்கார்ந்து எழுவது, பொருட்களைத் தூக்குவது, சைக்கிள் ஓட்டுவது போன்ற செயல்களை செய்வது சவாலாக இருக்கும். இன்னும் தீவிர நிலையில் இருந்தால், பற்களைத் துலக்குவது, குளிப்பது, தூங்குவது போன்ற செயல்கள் கூட சவாலானதாக இருக்கும்.

ஆகவே ஆர்த்ரிடிஸ் பிரச்சனை இருப்பவர்கள், தாங்கள் உண்ணும் உணவுகளில் அதிக கவனத்தை செலுத்துவதன் மூலம் நிலைமை மோசமாவதைத் தடுக்கலாம். இங்கு ஆர்த்ரிடிஸ் பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காய்கறிகள்

காய்கறிகள்

கத்திரிக்காய், தக்காளி, குடைமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் போன்றவை மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருட்கள். ஆனால் ஆர்த்ரிடிஸ் பிரச்சனை உள்ளவர்கள், இவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால், நிலைமை மேலும் மோசமாகும். இதற்கு முக்கிய காரணம், இந்த காய்கறிகள் அழற்சியடைந்த திசுக்களைத் தூண்டிவிடும் திறன் கொண்டவை.

இறைச்சி

இறைச்சி

வாரத்திற்கு 1-2 முறை இறைச்சியை சாப்பிடுவதால், உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துக்களான புரோட்டீன்கள் மற்றும் இரும்புச்சத்து கிடைக்கும். ஆனால் அளவுக்கு அதிகமாக சாப்பிடாதீர்கள். ஏனெனில் இறைச்சிகளில் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் அதிகளவில் நிறைந்துள்ளது. இதனை அராசிடோனிக் அமிலம் என்றும் கூறுவர். இது மூட்டு இணைப்புக்களில் உள்ள வலி மற்றும் வீக்கத்தை தீவிரமாக்கும்.

வறுத்த உணவுகள்

வறுத்த உணவுகள்

ஆர்த்ரிடிஸ் பிரச்சனை இருந்தால், எண்ணெயில் பொரித்த அல்லது வறுத்த உணவுகளை கட்டாயம் தவிர்த்தாக வேண்டும். முக்கியமாக வெஜிடேபிள் ஆயிலில் பொரிக்கும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவற்றில் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இவை எலும்பு மூட்டுகளில் உள்ள அழற்சியை மோசமாக்கும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

குறிப்பிட்ட உணவுகள் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க கெமிக்கல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும். இப்படி கெமிக்கல் பயன்படுத்தப்பட்டு பதப்படுத்தப்படும் உணவுகளை உட்கொண்டால், அவை உடலினுள் உள்ள அழற்சியைத் தூண்டிவிட்டு, உங்கள் ஆர்த்ரிடிஸ் பிரச்சனையை தீவிரமாக்கும்.

பால் பொருட்கள்

பால் பொருட்கள்

பால் பொருட்கள் உடலுக்கு புரோட்டீன் சத்துக்களை வழங்கினாலும், இந்த வகை புரோட்டீன்கள் ஆர்த்ரிடிஸ் பிரச்சனை உள்ளவர்களது நிலைமையை மோசமாக்கும். அதுவும், மூட்டு இணைப்புக்களைச் சுற்றியுள்ள திசுக்களை எரிச்சலூட்டி மூட்டு பிரச்சனையை தீவிரமாக்கும். வேண்டுமானால் பால் பொருட்களுக்கு பதிலாக பீன்ஸ், நட்ஸ் அல்லது டோஃபு போன்றவற்றை சாப்பிடலாம்.

இனிப்பு பானங்கள்

இனிப்பு பானங்கள்

குளிர் பானங்கள் அல்லது கார்போனேட்டட் பானங்களில் சர்க்கரை அதிகம் உள்ளது. சர்க்கரை உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பது தெரியும். மேலும் இவற்றில் பயன்படுத்தப்படும் நிறமூட்டிகள் மற்றும் இதர கெமிக்கல்கள், மூட்டுக்களில் ஏற்பட்ட அழற்சியை தீவிரமாக்கும். வேண்டுமானால் தாகத்தைப் போக்க மூலிகை டீக்கள் அல்லது நீரைக் குடியுங்கள்.

காபி

காபி

சிலர் காபிக்கு அடிமையாகி இருப்பார்கள். இத்தகையவர்களால் காபி குடிக்காமல் இருக்கவே முடியாது. ஆனால் உங்களுக்கு ஆர்த்ரிடிஸ் இருந்தால், காபி பக்கமே செல்லக்கூடாது. காபி உடலில் அமில அளவை அதிகரித்து, மூட்டுக்களில் உள்ள அழற்சியை மோசமாக்கும். வேண்டுமானால் க்ரீன் டீ குடிக்கலாம்.இதனால் எவ்வித பக்கவிளைவும் ஏற்படாது.

ஆல்கஹால்

ஆல்கஹால்

ஆல்கஹால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதோம, ஆர்த்ரிடிஸ் உள்ளவர்களின் நிலையை மோசமாக்கும். எனவே எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான ஆர்த்ரிடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் கொண்டவர்கள், வலி தீவிரமாகாமல் இருக்க வேண்டுமானால் ஆல்கஹாலை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

க்ளுட்டன் மற்றும் கோதுமை

க்ளுட்டன் மற்றும் கோதுமை

க்ளுட்டன் மற்றும் கோதுமை இரண்டுமே அழற்சியை உண்டு பண்ணுபவை. குறிப்பாக க்ளுட்டன் சகிப்புத்தன்மை கொண்டவர்களுக்கு இவை மிகவும் மோசமான உணவுப் பொருட்களாகும். அதிலும் ஆர்த்ரிடிஸ் இருந்தால், கோதுமை மற்றும் க்ளுட்டன் உணவுப் பொருட்களை அறவே தவிர்க்க வேண்டும். இல்லையெனில் மோசமான விளைவை சந்திக்க வேண்டியிருக்கும்.

உப்பு உணவுகள்

உப்பு உணவுகள்

தற்போது ஏராளமான உணவுகளில் உப்பு அளவுக்கு அதிகமாக அடங்கியுள்ளது. எனவே உப்பு அதிகம் நிறைந்த ஊறுகாய், கருவாடு போன்றவற்றை மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைக் கொண்டவர்கள் சாப்பிடக்கூடாது. இவை மூட்டு இணைப்புக்களில் உள்ள அழற்சி அல்லது வீக்கத்தை தீவிரப்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Do You Have Arthritis? Here Is What You Should Not Eat!

Do You Have Arthritis? Here is what you should not eat. Read on to know more...