For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த உணவுகளை சாப்பிட்டா, நீண்ட நாட்கள் இளமையுடன் இருப்பதோடு, மூட்டு பிரச்சனையே வராது...!

இங்கு லைசின் நிறைந்த சில சிறப்பான உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

|

இன்று ஏராளமானோர் மூட்டு பிரச்சனைகளால் அதிகம் கஷ்டப்படுகிறார்கள். இதற்கு கால்சியம் குறைபாடு அல்லது உடலில் கால்சியம் குறைவாக இருப்பது தான் முக்கிய காரணம். இந்த கால்சியத்தை உடல் உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி சத்து மட்டும் தான் அவசியம் என்று பலரும் நினைக்கிறோம். ஆனால் வைட்டமின் டி-யைப் போன்று கால்சியத்தை உறிஞ்சுவதற்கு லைசின் என்னும் பொருளும் அவசியமாகும்.

அது என்ன லைசின் என்று தானே கேட்கிறீர்கள். லைசின் என்பது ஒரு அத்தியாவசியமான அமினோ அமிலமாகும். இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் அவசியமான ஓர் அமினோ அமிலமாகும். இந்த அமினோ அமிலத்தை நம் உடலால் தானாக உற்பத்தி செய்ய முடியாது. இந்த அமினோ அமிலத்தை உணவுகளின் மூலமும், சப்ளிமெண்ட்டுகளின் மூலமும் தான் பெற முடியும். லைசின் கொலாஜன் உற்பத்தியைத் தூண்டும் மற்றும் உடலால் கால்சியத்தை உறிஞ்ச உதவும்.

மேலும் லைசின் ஒருவரது மன அழுத்தம் மற்றும் பதற்றம் போன்றவற்றைக் குறைக்க உதவுவதாக சில ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. சரி, இந்த லைசின் அமினோ அமிலம் எந்தெந்த உணவுகளில் உள்ளது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால், இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பர்மேஸன் சீஸ்

பர்மேஸன் சீஸ்

புரோட்டீன் நிறைந்த பால் பொருட்களுள் ஒன்றான பர்மேஸன் சீஸில், இந்த லைசின் என்னும் அமினோ அமிலம் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. அதுவும் இந்த வகை சீஸில் ஒரு நாளைக்குத் தேவையான லைசினில் 151% உள்ளது. எனவே இந்த வகை சீஸை அடிக்கடி வாங்கி சாப்பிடுங்கள்.

வறுத்த மாட்டிறைச்சி

வறுத்த மாட்டிறைச்சி

வறுத்த மாட்டிறைச்சி சுவையானதாக இருப்பதோடு, புரோட்டீன் நிறைந்ததும் கூட. இந்த மாட்டிறைச்சியில் பல்வேறு அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் அடங்கியுள்ளன. குறிப்பாக இதில் சுமார் 171% லைசின் என்னும் அமினோ அமிலம் அடங்கியுள்ளது.

வேக வைத்த சிக்கன் நெஞ்சுக்கறி

வேக வைத்த சிக்கன் நெஞ்சுக்கறி

வேக வைத்த சிக்கன் நெஞ்சுக்கறியில் புரோட்டீன் ஏராளமான அளவில் உள்ளது. அதே சமயம் இந்த உணவுப் பொருளில் பல்வேறு அத்தியாவசிய அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. அதில் லைசின் என்னும் அமினோ அமிலமும் ஒன்று. அதுவும் இதில் 148% லைசின் அடங்கியுள்ளது.

சமைத்த சூரை மீன்

சமைத்த சூரை மீன்

கொழுப்புமிக்க மீன்கள் அனைத்திலும் லைசின் இருக்கும். இருப்பினும் லைசின் என்னும் அமினோ அமிலம் மற்ற வகை மீன்களை விட சூரை மீன்களில் அதிகமாகவே உள்ளது. அதிலும் இந்த வகை மீனில் 123% லைசின் நிறைந்துள்ளது.

வறுத்த சோயாபீன்ஸ்

வறுத்த சோயாபீன்ஸ்

சோயாபீன்ஸ் மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளுள் ஒன்று. இதில் பெரும்பாலான அத்தியாவசிய அமினோ அமிலங்கள் ஏராளமான அளவில் உள்ளது. மேலும் இதில் தாவர வகை புரோட்டீன்கள் நிறைந்துள்ளது. இந்த உணவுப் பொருளில் 125% லைசின் அடங்கியுள்ளது.

சமைத்த பன்றி இறைச்சி

சமைத்த பன்றி இறைச்சி

பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் பன்றி இறைச்சி மிகவும் பிரபலமானது. மேலும் உலகில் அனைத்து பகுதிகளிலும் உள்ளோர் பன்றி இறைச்சியை விரும்பி சாப்பிடுவர். இந்த பன்றி இறைச்சியில் மிருக வகை புரோட்டீன்கள் அதிகம் உள்ளதோடு, பல அத்தியாவசியமான அமினோ அமிலங்களும் அடங்கியுள்ளன. அதுவும் இந்த உணவுப் பொருளில் 131% லைசின் நிறைந்துள்ளது.

சமைத்த இறால்

சமைத்த இறால்

கடல் உணவுகளான இறால், நண்டு போன்றவற்றில் புரோட்டீன் அதிகம் உள்ளது மற்றும் பெரும்பாலான அத்தியாவசிய அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளன. அதுவும் சமைத்த இறாலில் 103% லைசின் அடங்கியுள்ளது. ஆகவே இச்சத்து கிடைக்க வேண்டுமானால், அவ்வப்போது கடல் உணவுகளை சமைத்து சாப்பிடுங்கள்.

பூசணி விதைகள்

பூசணி விதைகள்

பூசணி விதைகளில் பழ வகை புரோட்டீன்கள் மற்றும் இதர அத்தியாவசிய அமினோ அமிலங்கள் ஏராளமான அளவில் உள்ளது. அந்த அமினோ அமிலங்களுள் ஒன்று தான் லைசின். பூசணி விதைகளில் சுமார் 67% லைசின் அடங்கியுள்ளது. எனவே அவ்வப்போது ஒரு கையளவு பூசணி விதைகளை சாப்பிடுங்கள்.

பச்சை முட்டை

பச்சை முட்டை

அனைவருக்குமே முட்டை மிகவும் விருப்பமான உணவுப் பொருளாகத் தான் இருக்கும். மேலும் உலகின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் முட்டையை பல வடிவில் உட்கொள்வார்கள். பச்சை முட்டையை உடற்பயிற்சிக்குப் பின் உட்கொள்வது மிகவும் நல்லது மற்றும் இதில் புரோட்டீன்களும் அதிகம் உள்ளது. பச்சை முட்டையில் சுமார் 43% லைசின் என்னும் அமினோ அமிலம் அடங்கியுள்ளது.

வெள்ளை காராமணி

வெள்ளை காராமணி

உலகின் அனைத்து பகுதிகளிலும் காராமணி சமையலில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் ஆரோக்கியமான உணவுப் பொருளாகும். அதிலும் வெள்ளை காராமணியில் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. அதில் லைசினும் ஒன்று. வெள்ளைக் காராமணியில் சுமார் 32% லைசின் அடங்கியுள்ளது.

பக்கவிளைவுகள்

பக்கவிளைவுகள்

லைசின் அமினோ அமிலம் நிறைந்த உணவுகளில் எப்படி நன்மைகள் அடங்கியுள்ளதோ, அதேப் போல் இது சில பக்கவிளைவுகளையும் கொண்டுள்ளது. அதாவது கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் லைசின் நிறைந்த உணவுகளை அளவுக்கு அதிகம் சாப்பிடக்கூடாது.

சில ஆய்வுகளில் லைசினுக்கும் சிறுநீரக நோய்களுக்கும் தொடர்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. சில சமயங்களில் லைசின் நிறைந்த உணவுகளை சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட்டால், அது நிலைமையை மோசமாக்கும். எனவே சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள், லைசின் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் முன், மருத்துவரிடம் கேட்டுக் கொள்வதே நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Lysine Rich Foods

Lysine is an essential amino acid, which means that it isn’t produced by the body and you need to consume foods high in lysine or supplements to get the required amount of lysine in your system. Read on...
Story first published: Thursday, March 22, 2018, 16:16 [IST]
Desktop Bottom Promotion