For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மைக்ரோவேவ் ஓவனில் சூடு செய்ய கூடாத 7 உணவுகள்!

மைக்ரோவேவ் ஓவனில் சூடு செய்ய கூடாத 7 உணவுகள்!

|

மைக்ரோவேவ் ஓவன் இல்லாத எம்.என்.சி கம்பெனி, அலுவலகங்களை நாம் காண இயலாது. ஊழியர்களே மேலாண்மை துறையில் கேட்டு வாங்கி வைக்க கூறுவார்கள். இதனால், காலை சமைத்து எடுத்து வந்த உணவை மதியம் சூடு செய்து, சுடசுட ருசித்து சாப்பிடலாம் என்பது நமது விருப்பம்.

ஆனால், மைக்ரோவேவ் ஓவனில் முதல் முறை சமைப்பதே ஆரோக்கியத்திற்கு சில பிரச்சனைகள் உண்டாக்கும், இதில் மீண்டும் சூடு செய்து சாப்பிட அதை பயன்படுத்த வேண்டுமா? என்ற கேள்வியை நிபுணர்கள் எழுப்புகின்றனர்.

Know Why You Should Not Heat These Seven Foods in Microwave!

ஆம்! மைக்ரோவேவ் ஓவனில் சமைப்பதால் பல உணவுகளில் இருந்து கிடைக்கும் சத்துக்கள் முற்றிலும் கிடைக்காமல் போகும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதற்காகவே சில உணவுகளை இதில் சமைக்க வேண்டாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இறைச்சி!

இறைச்சி!

அலுவலகத்திற்கு இறைச்சி உணவு எடுத்து செல்லும் பலபேர் அதே ருசியுடன் சுடசுட சாப்பிட வேண்டும் என்பதற்காக மைக்ரோவேவ் ஓவனில் அசைவ பிரியாணி, அசைவ இறைச்சி உணவுகளை சூடு செய்வார்கள்.

இது சில பாக்டீரியா தாக்கங்களை சரி செய்தாலும், இறைச்சி உணவில் இருக்கும் வைட்டமின் பி12 மற்றும் அமினோ அமில சத்துக்களை இல்லாமல் போக செய்துவிடும்.

நீங்கள் இயல்பாக நேற்று சமைத்த மட்டன் போன்ற இறைச்சி உணவுகளை சூடு செய்தாலே அதில் இருக்கும் புரதச்சத்து குறைந்துவிடும்.

மீண்டும் சூடு செய்ய வேண்டும் என்றால் பேனில் குறைந்த சூட்டில் வைத்து சமைத்து சாப்பிடுங்கள்.

வெள்ளை அரிசி!

வெள்ளை அரிசி!

வெள்ளை அரிசி சாதத்தை மைக்ரோவேவ் ஓவனில் சூடு செய்ய கூடாது. இதனால் சாதத்தில் இருக்கும் பெரும்பாலான சத்துக்கள் இழக்க நேரிடும்.

மைக்ரோவேவ் ஓவன் அதிக சூட்டை உண்டாக்குவதால் உணவில் இருக்கும் வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் நார்ச்சத்து அடிப்பட்டு போகும்.

அரிசி சாதத்தை சமைக்க சிறந்த பண்டம் மண்பானை தான். மண்பானையில் நீர் ஊற்றி சாதம் சமைப்பதால் உடலுக்கு எல்லா சத்துக்களும் கிடைக்கும்.

வெண்ணெய்!

வெண்ணெய்!

வெண்ணெய்யை மைக்ரோவேவ் ஓவனில் சூடு செய்வதால் அதில் இருக்கும் புரதம் முற்றிலும் இழக்கக் கூடும். வெண்ணெய்யை பேனில் இளஞ்சூட்டில் வைத்து சமைப்பதே சிறந்த முறை.

முடிந்த வரை அறையின் தட்ப வெப்ப நிலையில் இயற்கையாக வெண்ணெய் மென்மை தரத்தில் இருக்கும் படி வைத்துக் கொள்வதே நல்லது.

பால்!

பால்!

பால் மட்டுமல்ல, எந்த ஒரு பால் உணவு பொருளையும் மைக்ரோவேவ் ஓவனில் வைத்து சமைப்பது ஊட்டச்சத்துக்கள் குறைபாடு ஏற்பட காரணமாகலாம். இதனால் அவற்றில் இருக்கும் வைட்டமின் பி 12 மற்றும் மினரல் சத்துக்கள் கிடைக்காமல் போகலாம்.

பாலை சூடு செய்ய சாதாரணமாக பாத்திரத்தில் இளஞ்சூட்டில் வைத்து காய்ச்சி குடிக்கும் முறையே நல்லது.

காளான்!

காளான்!

மைக்ரோவேவ் ஓவன் போன்ற அதிக சூட்டில் சமைக்கும் கருவிகளில் காளானை சமைத்தால் அதிலிருக்கும் மொத்த சத்துக்களும் இல்லாமல் போய்விடும்.

மேலும், காளான் உணவுகளை மறுபடியும் சூடு செய்வது வயிற்றுக் கோளாறுகள் ஏற்பட காரணமாகிவிடும். காளானை 70 டிகிரிக்கு குறைவாக வைத்து தான் சமைக்க வேண்டும்.

பூண்டு!

பூண்டு!

பூண்டை வெறுமென சாப்பிட்டால் அதில் இருந்து நூறு சதவித பயன்கள் அப்படியே கிடைக்கும். அதை அதிக சூட்டில் சமைத்து சாப்பிடும் போது 95% சத்துக்கள் இழக்கக்கூடும். முக்கியமாக வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள்.

மைக்ரோவேவ் ஓவனில் சமைக்கும் போது, பூண்டில் இருக்கும் ஆன்டி-ஆக்சிடென்ட் மற்றும் ஆன்டி-இன்ஃப்ளமேட்டரிக்களும் இழக்கக் கூடும்.

பூண்டை வேக வைத்து சேர்க்கலாம். அல்லது வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இதன் மூலம் சத்துக்கள் இழக்காமல், அதன் அனைத்து பலன்களும் பெற இயலும்.

ப்ரோக்கோலி!

ப்ரோக்கோலி!

அதிக சூட்டை கிளப்பி சமைக்கும் மைக்ரோவேவ் ஓவன் ப்ரோக்கோலியில் இருக்கும் 97% ஆன்டி ஆக்ஸிடென்ட் சத்துக்களை அழித்துவிடுகிறது. மேலும், இதனால் இதன் பதம் மற்றும் ருசியும் மாறுப்பட்டு போகும்.

ப்ரோக்கோலியை சாலட் அல்லது ஸ்மூதியாக சமைத்து சாப்பிடுவது எல்லா சத்துக்களும் பெற ஏதுவான முறையாக இருக்கும். அல்லது ஸ்டீம் முறையில் அதை வேகவைத்து சாப்பிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Know Why You Should Not Heat These Seven Foods in Microwave!

Know Why You Should Not Heat These Seven Foods in Microwave!
Story first published: Tuesday, August 8, 2017, 15:35 [IST]
Desktop Bottom Promotion