வாய் முதல் வாயு வரை அனைத்திற்கும் தீர்வளிக்கும் காட்டாமணக்கு!

Posted By:
Subscribe to Boldsky

காட்டாமணக்கு என்பது ஒரு இலை தாவரம். இது கருஞ்சிவப்பு நிற துளிர்கள் மற்றும் சிவப்பு நிறத்தில் மலர்கள் கொண்டிருக்கும்.

இதன் இலைகள் கைகளை போல இருக்கும். காட்டாமணக்கு குச்சி, பட்டை, வேர், இலை, அதிலிருந்து எடுக்கப்படும் பால் என அனைத்தும் மருத்துவ குணங்கள் கொண்டவை தான்.

இது எச்சில், தாய்பால் சுரக்க செய்வதில் இருந்து, வயிறு மற்றும் பல் சார்ந்த அனைத்து விதமான கோளாறுகளுக்கும் சிறந்த இயற்கை நிவாரணியாக திகழ்ந்து வருகிறது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தாய் பால், எச்சில்!

தாய் பால், எச்சில்!

எச்சில் நன்கு சுரந்தால் தான் செரிமானம் சிறக்கும். தாய்ப்பால் நன்கு சுரந்தால் தான் பிள்ளை ஆரோக்கியம் சிறக்கும். இந்த இரண்டையும் தரவல்லது காட்டாமணக்கு இலை. மேலும், இது பல்லின் இரத்த கசிவை நிறுத்தவும் உதவுகிறது.

குச்சி!

குச்சி!

காட்டாமணக்கு செய்தின் இளம் குச்சியை கொண்டு பல் துலக்கினால் பல்வலி, ஆடுதல், இரத்தம் கசிதல், என பல் சார்ந்த எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம்.

வேர்!

வேர்!

காட்டாமணக்கின் வேரின் பட்டையை நன்கு அரைத்து சிறிதளவு பாலில் கலந்து குடித்து வந்தால் இரத்த சோகை, காமாலை, வீக்கம், வயிறு கட்டி, வயிறு உப்பசம், வயிற்று கோளாறுகள் போன்றவை குணமாகும்.

பால்!

பால்!

காட்டாமணக்கு பால் கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குணமாகும். அந்த பாலை துணியில் நனைத்து ஈறுகளில் இரத்த கசிவு ஏற்படும் இடத்தில் வைத்தால் இரத்த கசிவு நிற்கும்.

தேங்காய் எண்ணெய்!

தேங்காய் எண்ணெய்!

காட்டாமணக்கு எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயும் சேர்த்து கலந்து உடலில் சொறி சிரங்கு இருக்கும் இடத்தில் பூசி வந்தால் சரும பிரச்சனை குணமாகும்.

இலை

இலை

காட்டாமணக்கு இலையுடன் விளக்கெண்ணெயில் வதக்கி கட்டி இருக்கும் இடத்தில் கட்டி வைத்தால் கட்டிகள் கரையும். கட்டி இருக்கும் இடத்தில் இருக்கும் வலியும் குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Kattamanakku, An Amazing Natural Medicine for All Kind of Teeth Problems!

Kattamanakku, An Amazing Natural Medicine for All Kind of Teeth Problems!
Story first published: Friday, June 23, 2017, 12:38 [IST]