ஐஸ்க்ரீம் சாப்பிட்டா பெண்களின் கருவளம் அதிகரிக்குமா? ஐஸ்க்ரீமின் நன்மைகள்!!

Posted By: Aashika
Subscribe to Boldsky

ஐஸ்க்ரீம் பேச்சு எடுத்தாலே சாப்பிடக்கூடாது, காய்ச்சல் வரும் என்று தடை போடுவதை வழக்கமாக கொண்டிருப்போம். பால் க்ரீம் அதனை இனிப்பூட்ட சேர்க்கப்பட்ட குளுகோஸ் கலந்த ஸ்வீட்னர், டேஸ்ட் சிரப், ஃப்ளேவரக்ள், அதற்கும் மேலே டாப்பிங்ஸ் என பல அடுக்குகளை ஒன்றாய் கலந்து நம் கைக்கு வந்திடும் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதால் பயன்கள் ஏதேனும் உண்டா? தெரிஞ்சுக்கலாம் தொடர்ந்து படிங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எனர்ஜி :

எனர்ஜி :

ஐஸ்க்ரீமில் இருக்கும் தாதுப் பொருட்களின் அளவுகள் ஐஸ்க்ரீம் தயாரிக்கும் நிறுவனங்களைப் பொறுத்து வேறுபடும். பொதுவாக ஐஸ்க்ரீம் சாப்பிட்டால் நமக்கு எக்கச்சக்கமான எனர்ஜி கிடைக்கும் என்பது உண்மை. 15 கிராம் அளவுல்ல ஐஸ்க்ரீமில் அதிகளவு கார்போஹைட்ரேட் இருக்கும். 7 கிராம் கொழுப்பு மற்றும் 2 கிராம் ப்ரோட்டீன் நமக்கு கிடைக்கும்.

அரை கப் வெண்ணிலா ஐஸ்க்ரீம் சாப்பிட்டால் 137 கிராம் கலோரி நமக்கு கிடைக்கும். அது முழு டம்ளர் பாலை குடிப்பதை விட இரண்டு மடங்கு அதிகமான கலோரி கிடைக்கிறது.

விட்டமின் :

விட்டமின் :

ஐஸ்க்ரீமில் விட்டமின் ஏ, பி6, பி12, சி, டி ,ஈ, கே இருக்கிறது. இதில் விட்டமின் கே ரத்தம் உறைதலுக்கு மிகவும் அவசியம். விட்டமினைத் தாண்டி ஐஸ்க்ரீமில் நம் நரம்பு மண்டலத்தை துரிதமாக வேலை செய்ய நோயெதிர்ப்பை அதிகரித்திடச் செய்யும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்கள், நியாசின், தியாமின் மற்றும் ரிபோஃபிலின் ஆகியவை இருக்கிறது.

கால்சியம் :

கால்சியம் :

இதில் அதிகளவு மினரல்ஸ்களும் இருக்கின்றன. இதிலிருக்கும் கால்சியம் பற்களும் எலும்புகளும் வலுவாக்க உதவுகின்றன. அதோடு கிட்னியின் செயல்பாடுகள் மேம்படவும் உதவுகிறது. மூட்டுத் தேய்மானம் வராமல் தடுத்திடும்.

எண்ணங்கள் :

எண்ணங்கள் :

ஐஸ்க்ரீம்களில் த்ரோம்போடோனின்(thrombotonin) இருக்கும்.

நாம் உற்சாகமாக இருப்பதற்கும் சோர்ந்து இருப்பதற்கும் நம் உடலில் இருக்கும் த்ரோம்போடோனின் தான் காரணம்.

இது அதிகம் சுரந்தால் நமக்கு சோர்வு என்பதே இருக்காது. ஐஸ்க்ரீம் சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வருவதுடன் மூளையின் செயல்பாடுகளுக்கும் ஊக்கமளிக்கும்.

எடை குறைப்பு :

எடை குறைப்பு :

ஐஸ்க்ரீம் சாப்பிடுவது எடைக்குறைப்புக்கு உதவிடும் என்கிறார்கள் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள். அரை கப் வெண்ணிலா அல்லது சாக்லேட் ஐஸ்க்ரீமில் மொத்தம் 140 கலோரி வரை இருக்கும்.

அவை சிறந்த டயட் ஆகவும் இருக்கும். அதிக உணவை எடுத்துக்கொள்ளாமல் நம் உடலுக்கு தேவையான கலோரிகளை மட்டும் எடுத்துக் கொள்வதால் இது எடை குறைப்புக்கு உதவிடும். ஒரு நாளில் அரை கப் மட்டும் சாப்பிட்டால் போதுமானது.

அதிகரிக்கும் கருவளம் :

அதிகரிக்கும் கருவளம் :

கொழுப்புள்ள உணவுகளை உட்கொள்வது என்பது பெண்கள் கருமுட்டை வளர்ச்சிக்கு உதவிடும். ஹார்வோர்டில் 24 முதல் 42 வயது வரையிலான 18000 பெண்களிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவில் இதனை கண்டுபிடித்திருக்கிறார்கள். அவர்களுக்கு வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே ஐஸ்க்ரீம் கொடுக்கப்பட்டதாம்.

சந்தோசம் :

சந்தோசம் :

ஐஸ்க்ரீம் சாப்பிடும் போதோ சாப்பிட்ட உடனேயோ உற்சாகம் பற்றிக் கொள்ளும். இதற்கு காரணம் சுவையோ அல்லது அதன் தன்மையோ அல்ல. ஐஸ்க்ரீம் சாப்பிட்டவுடன் நம் மூளையில் இருக்கும் ஆர்பியோஃப்ரண்டல் கார்டெக்ஸ் (orbitofrontal cortex) தூண்டப்பெற்று அதனால் தான் சிரிப்பு சந்தோசம் எல்லாம் ஏற்படுகிறது

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: food tips health
English summary

Is Ice Cream Good For Health?

Let See, Is Ice cream is good for health
Story first published: Friday, July 21, 2017, 10:07 [IST]