இரத்த சோகை இருக்கா? அப்ப கேழ்வரகு தோசை சாப்பிடுங்க!

Written By:
Subscribe to Boldsky

நமது ஊர்களில் கிடைக்கும் மிகவும் சத்தான உணவுகளை தவிர்த்துவிட்டு நாம் சந்தைகளில் கிடைக்கும் சத்து பானங்களையும் மருந்துகளையும் வாங்கி சாப்பிடுகிறோம். கேழ்வரகு ஒரு சத்தான உணவாகும். இதில் கால்சியம், இரும்புசத்துக்கள் அதிகம் உள்ளது. சொல்லப்போனால் பாலில் உள்ள கால்சியத்தின் அளவை விட இதில் அதிகமாக உள்ளது. இந்த கேழ்வரகின் பயன்களை பற்றி இந்த பகுதியில் விரிவாக காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குடற்புண்

குடற்புண்

குடற்புண் உள்ளவர்கள் தினமும் கேழ்வரகை கூழ் செய்து சாப்பிட்டால் குடற் புண் குணமாகும். குடலுக்கு வலிமை அளிக்கும். உடல் உஷ்ணத்தை சமநிலையில் பாதுகாக்க உதவுகிறது.

மாதவிடாய்

மாதவிடாய்

மாதவிடாய் பிரச்சனை கருப்பைக்கு கெடுதலை உண்டாக்கும். இந்த கோளாறு சரியாக பெண்கள் இந்த கேழ்வரகு கூழை சாப்பிட்டுவர சரியாகும்.

உடல் எடை குறைய

உடல் எடை குறைய

உடல் எடையை குறைக்க விரும்பினால், நீங்கள் கேழ்வரகு கூழை சாப்பிடலாம். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் மலச்சிக்கலை தடுக்கிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு

சர்க்கரை நோயாளிகளுக்கு

சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை, அடை, புட்டு செய்து சாப்பிடலாம். கூழ் அல்லது கஞ்சியாக சாப்பிட கூடாது. இதை கூழாக செய்து குடித்தால் கொலஸ்டிரால் குறைந்து விடும்.

இரத்த சோகை

இரத்த சோகை

கேழ்வரகில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இது இரத்தசோகை நோய் வராமல் தடுக்கிறது இதில் அதிகளவு கால்சியம், இரும்பு சத்து உள்ளது. கர்ப்பிணி பெண்கள் தினமும் இதனை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

health benefits of ragi

health benefits of ragi
Story first published: Tuesday, September 26, 2017, 17:13 [IST]